search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shenkottai"

    • சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே கோமதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் சுடலைமாடன். இவரது மனைவி கோமதி (வயது 42). இவர்களது மகள் பவித்ரா(24) என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணமாகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பவித்ரா தனது கணவரை பிரிந்து விஸ்வநாதபுரத்தில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். மேலும் அவர் குத்துக்கல்வலசையில் உள்ள ஒரு கடையில் வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று மாலை கோமதியும், பவித்ராவும் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த 2 வாலிபர்கள் பவித்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க முயன்றனர். உடனே கோமதி அதனை பார்த்து அவர்களை தடுக்க முயன்றுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 2 வாலிபர்களும் அரிவாளால் கோமதியை சரமாரியாக வெட்டினர். அதனை தடுக்க வந்த பவித்ராவுக்கும் கழுத்து, தோள்பட்டை, மணிக்கட்டு உள்ளிட்ட இடங்களில் சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். உடனே அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோமதி மற்றும் பவித்ரா ஆகியோரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே கோமதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். பவித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவித்ரா கடையில் வேலை பார்த்தபோது அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பவித்ராவை பிடித்துள்ளது. உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பவித்ராவை அந்த வாலிபர் அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாகவும், ஆனால் பவித்ரா அதற்கு மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த வாலிபர் தனது நண்பரை அழைத்து வந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் தின விழாவாக கொண்டா டப்படுகிறது.
    • இதனை முன்னிட்டு செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

    தென்காசி:

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் தின விழாவாக கொண்டா டப்படுகிறது. இதனை முன்னிட்டு செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து குழந்தைகளும் வண்ண உடை அணிந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆசிரியர்கள் முன்னின்று நடத்தினர். பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்சலா குழந்தைகளை வாழ்த்தி ஆங்கிலப் பாடலை பாடினார்.

    பொது அறிவுப் போட்டி , விளையாட்டுப் போட்டிகளைத் தொ டர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆசிரி யர்கள் தங்களது மாணவ , மாணவிகளுக்கு குழந்தை கள் தின நினைவாக சிறப்பு அன்பளிப்பை வழங்கினர். பள்ளியின் தாளாளர், பள்ளியின் முதல்வர், பள்ளியின் துணை முதல்வர் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரி யர்களும் குழந்தைகள் தின வாழ்த்துக்களை கூறினர்.

    • 2 வாலிபர்கள் தங்களது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வடக்கு கதிரவன் காலனி பகுதியில் 2 வாலிபர்கள் தங்களது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் சென்று விசாரித்தனர்.

    அப்போது அந்த காலனியில் வசித்து வரும் அரவிந்த்(வயது 26), அருண்குமார்(20) ஆகியோர் வீடுகளில் சோதனை செய்தபோது கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

    • ஆடி அமாவாசை தினத்தையொட்டி குலசேகரநாதர் சுவாமி கோவிலில் பத்திரதீப விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு தீபங்கள் ஏற்றி வழிப்பட்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை குலசேகரநாதர் சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி பத்திரதீப விழா நடைபெற்றது. காலையில் மகா கணபதி ஹோமம், மூலஸ்தானத்தில் ருத்திர ஜெபம், சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடந்தது. மாலையில் கோவில் உள்வளாகத்தில் பத்திரதீபம் விளக்கு தீபம் ஏற்றப்பட்டது. சுவாமி சன்னதி, அம்மன் சன்னதியில் பக்தி உலா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு தீபங்கள் ஏற்றி வழிப்பட்டனர். இரவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் 4 ரதவீதி களிலும் உலா வந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது. ஏற்பாடு களை மண்டகப் படிதாரர்கள் செய்திருந்த னர்.

    • மகேஷ்வரிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2-வது குழந்தை பிறந்தது.
    • முருகன் திடீரென ஆலமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை வண்டி மலைச்சி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கருத்தபாண்டி. இவரது மகன் முருகன்(வயது 29). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார்.

    தற்கொலை

    இவரது மனைவி மகேஷ்வரி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவருக்கு 2-வது குழந்தை பிறந்தது. தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த அந்த பிரசவத்தின்போது திடீரென மகேஷ்வரி இறந்துவிட்டார். இதனால் முருகன் மிகவும் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். யாரிடமும் பேசாமல் இருந்து வந்த அவர் சரிவர தொழிலையும் கவனிக்கவில்லை.

    இந்நிலையில் நேற்று செங்கோட்டை போலீஸ் நிலையத்தின் மேல்புறம் உள்ள ஆலமரத்தில் திடீரென முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    போலீசார் விசாரணை

    தகவல் அறிந்து செங்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று முருகன் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்ப திவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • குண்டாறு அணையில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் நெய்யருவி உள்ளது.
    • ஜீப்களில் அருவிக்கு செல்லும்போது பேராபத்து நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குண்டாறு அணைக்கட்டு உள்ளது. இந்த அணையில் இருந்து மலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால் நெய்யருவி உள்ளது.

    குற்றாலத்தில் குளிப்பதற்கு கூட்டம் அதிகமாக இருக்கும்போது, சுற்றுலா பயணிகள் இந்த நெய் அருவிக்கு படையெடுப்பார்கள். இந்த அருவியை சுற்றி ஏராளமான தனியார் அருவிகள் உள்ளன. இந்த அருவிகளுக்கு செல்வதற்கான சாலை மிகவும் கரடு முரடாக, குண்டும்,குழியுமாக இருப்பதால் சொகுசு கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாது. எனவே ஜீப் மூலம் தான் செல்ல முடியும். தற்போது நெய் அருவிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர். இதனால் குண்டாறு அணையில் ஏராளமான ஜீப்கள் குவிந்துள்ளது. இந்த ஜீப்களில் அருவிக்கு செல்லும்போது குறுக்கிடும் ஓடையை கடக்கும் போது எதிர்பாரா வண்ணம் பேராபத்து நடக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஜீப்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதன் அடிப்படையில் ஆர்.டி.ஓ. லாவண்யா தலைமையில் தாசில்தார் முருக செல்வி முன்னிலையில் அதிகாரிகள் நெய் அருவி செல்லும் மலைப்பாதையில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அருவிக்கு செல்ல தடை விதித்து மலை பாதை கேட்டை பூட்டினர்.

    • விழாவில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சிவப்பு வண்ண உடையில் வந்து கலந்து கொண்டனர்.
    • மழலையர் பிரிவு ஆசிரியைகளும் சிவப்பு வண்ணப் பாடலைப் பாடினர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் சிவப்பு வண்ண தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் சிவப்பு வண்ண கோட்டையாக அலங்கரிக்கப்பட்ட வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மழலையர் பிரிவு ஆசிரியை சிஞ்சுமோல் வரவேற்று பேசினார்.

    இதில் மாணவ, மாணவி கள் மற்றும் ஆசிரியர்கள் சிவப்பு வண்ண உடையில் வந்து கலந்து கொண்டனர். விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அன்பின் அடையாளமாக கருதப்படும் சிவப்பு வண்ணத்தை பற்றி பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பேசினர்.

    மழலையர் பிரிவு மாணவி ரித்து மீனு சிவப்பு ஆப்பிள் குறித்து பேசினார். மாணவி அமிரா பர்வின் சிவப்பு வண்ண கரும்பள்ளி வண்டு குறித்தும், மாணவன் முகமது ஷபின் ரத்தத்தின் சிவப்பு வண்ணம் குறித்தும் பேசினர். மழலையர் பிரிவு ஆசிரியைகளும் சிவப்பு வண்ணப் பாடலைப் பாடினர்.

    ஆசிரியை நந்தினி சிவப்பு வண்ணம் தொடர் பான விடுகதைகளை மாணவர்களிடம் கேட்டு அவர்களை உற்சாகப்படுத்தினார். சிவப்பு வண்ண நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட புகைப்பட அறையில் அனை வரும் புகைப்படம் எடுத்து கொண்டனர். முடிவில் ஆசிரியை டயானா நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் அருள் வர்ஷலா, மழலையர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் அனுசியா ஆகியோர் செய்திருந்தனர்.

    • சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது.
    • சிவபக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை குலசேகர நாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது. இதனை போன்று வைகாசி மாதம் ஆறுமுகசாமி ஒடுக்க கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடந்தது.

    அதனைத்தொடர்ந்து சிவபக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர். இலத்தூர், புளியரை, இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரதோச வாழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பிரசாதம் பெற்று சென்றனர்.

    • மரக்கன்றுகள் நடும்விழாவுக்கு நீதிபதி சுனில்ராஜா தலைமை தாங்கினார்.
    • நீதிமன்ற பணியாளா்கள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்விழா நடந்தது. வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றத்துறை நடுவரும் ,நீதிமன்ற நீதிபதியுமான சுனில்ராஜா தலைமை தாங்கினார். வக்கீல்கள் சங்க தலைவா் வெங்கடேசன், துணைத்தலைவா் முத்துக்குமாரசாமி, செயலாளா் அருண், பொருளாளா் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனா். செயலாளா் கார்த்திகைராஜன் வரவேற்று பேசினார்.

    அதனைதொடா்ந்து நீதிபதி சுனில்ராஜா நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னா் நீதிமன்ற பணியாளா்களுக்கும், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி சுற்றுச்சூழல் அவசியம் குறித்தும், மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் வக்கீல்கள் மாரியப்பன், நித்யானந்தம், வெங்கடேஷ், சிதம்பரம், வீரபாண்டி, கணேசன் நல்லையா, நீதிமன்ற பணியாளா்கள், போலீசார், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் செய்திருந்தார்.

    • காயத்ரிக்கும், அபிஷேக் என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.
    • குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த காயத்ரி திடீரென மயக்கம் அடைந்தார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி சுடலை (வயது 52). இவர்களின் மகள் காயத்ரி (26). இவருக்கும், நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மகன் அபிஷேக் என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.

    கர்ப்பம்

    காயத்ரி 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று செங்கோட்டையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த அவர் திடீரென மயக்கம் அடைந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர்.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு அவர் இதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்றுள்ளார். இதன் காரணமாக அவர் உடல்நிலை பாதிப்படைந்து திடீரென இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே 4-ந்தேதி தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
    • வீர மரணமடைந்த சந்திரசேகரின் 3-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    செங்கோட்டை:

    கடந்த 2020-ம் ஆண்டு மே 4-ந்தேதி ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதி களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் பகுதியை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் சந்திரசேகரும் ஒருவர்.

    இந்நிலையில் வீர மரணமடைந்த சந்திரசேகரின் 3-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி பட்டாளம் ராணுவ நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் ராம்குமார் தலைமையில் கவுரவத்தலைவர் மணி மற்றும் செயலாளர் முருகன், துணைச் செயலாளர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலையில் அவரது நினைவத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் போது அவரது மனைவி ஜெனிபர் கிறிஸ்டி மற்றும் தென்காசி பட்டாளம் ராணுவ நலச்சங்கத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் உடன் இருந்தனர்.

    • சிறப்பு விருந்தினராக மருத்துவர் முகமது மீரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, சமீமா பர்வீன் ஆகியோர் செய்திருந்தனர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஸர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் சமூக நல்லிணக்க விழா கொண்டாடப்பட்டது.

    சிறப்பு விருந்தினராக மீரான் மருத்துவமனை மருத்துவர் முகமது மீரான், கம்பீரம் பாலசுப்ரமணியம் , வடகரை ஊராட்சி தலைவர் ஷேக் தாவுத், தென்காசி மாவட்ட தி.மு.க. பொறுப்பு குழு உறுப்பினர் அபுபக்கர், செங்கோட்டை ஜும்மா மஸ்ஜித் தலைமை இமாம், பள்ளி நிறுவனர்கள் முகமது பண்ணையார், பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் இப்தார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டனர். நோன்பு திறப்பதற்காக அனைவருக்கும் நோன்பு கஞ்சி மற்றும் பலகாரங்கள் வழங்கப்பட்டது.

    ×