என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில்  கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
    X

    ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

    • மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடம் அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
    • மாணவ, மாணவிகளுக்கும் இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடம் அணிந்தும், மாணவிகள் தேவ தூதர்கள் போன்று உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர். இசை இசைத்து பாட்டு பாடி கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவ-மாணவிகள் கேரல் ரவுண்ட் சென்றனர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த மாணவர் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினர்.

    பள்ளியில் இயேசு பிறந்தது போன்ற குடில் அமைக்கப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் தலைமை தாங்கினர்.

    Next Story
    ×