search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "treasure island school"

    • முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் தின விழாவாக கொண்டா டப்படுகிறது.
    • இதனை முன்னிட்டு செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

    தென்காசி:

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் தின விழாவாக கொண்டா டப்படுகிறது. இதனை முன்னிட்டு செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து குழந்தைகளும் வண்ண உடை அணிந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆசிரியர்கள் முன்னின்று நடத்தினர். பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்சலா குழந்தைகளை வாழ்த்தி ஆங்கிலப் பாடலை பாடினார்.

    பொது அறிவுப் போட்டி , விளையாட்டுப் போட்டிகளைத் தொ டர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆசிரி யர்கள் தங்களது மாணவ , மாணவிகளுக்கு குழந்தை கள் தின நினைவாக சிறப்பு அன்பளிப்பை வழங்கினர். பள்ளியின் தாளாளர், பள்ளியின் முதல்வர், பள்ளியின் துணை முதல்வர் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரி யர்களும் குழந்தைகள் தின வாழ்த்துக்களை கூறினர்.

    • விஜயதசமி அன்று ஏராளமான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளிக்கு வருகை தந்தனர்.
    • மாணவர் சேர்க்கையின் போது மழலையர்கள் அட்சராப்பியாசம் செய்து உயிரெழுத்துக்களின் முதல் எழுத்தான ‘அ' என்னும் எழுத்தை எழுதினர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமியையொட்டி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. விஜயதசமி அன்று ஏராளமான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளிக்கு வருகை தந்தனர். மாணவர் சேர்க்கையின் போது மழலையர்கள் அட்சராப்பியாசம் செய்து தமிழ் மொழியின் உயிரெழுத்துக்களின் முதல் எழுத்தான 'அ' என்னும் எழுத்தை எழுதினர். மழலையர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் பாடப்புத்தகங்களை மழலையர்களுக்கு வழங்கி வாழ்த்தினர்.

    • விழாவில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சிவப்பு வண்ண உடையில் வந்து கலந்து கொண்டனர்.
    • மழலையர் பிரிவு ஆசிரியைகளும் சிவப்பு வண்ணப் பாடலைப் பாடினர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் சிவப்பு வண்ண தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் சிவப்பு வண்ண கோட்டையாக அலங்கரிக்கப்பட்ட வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மழலையர் பிரிவு ஆசிரியை சிஞ்சுமோல் வரவேற்று பேசினார்.

    இதில் மாணவ, மாணவி கள் மற்றும் ஆசிரியர்கள் சிவப்பு வண்ண உடையில் வந்து கலந்து கொண்டனர். விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அன்பின் அடையாளமாக கருதப்படும் சிவப்பு வண்ணத்தை பற்றி பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பேசினர்.

    மழலையர் பிரிவு மாணவி ரித்து மீனு சிவப்பு ஆப்பிள் குறித்து பேசினார். மாணவி அமிரா பர்வின் சிவப்பு வண்ண கரும்பள்ளி வண்டு குறித்தும், மாணவன் முகமது ஷபின் ரத்தத்தின் சிவப்பு வண்ணம் குறித்தும் பேசினர். மழலையர் பிரிவு ஆசிரியைகளும் சிவப்பு வண்ணப் பாடலைப் பாடினர்.

    ஆசிரியை நந்தினி சிவப்பு வண்ணம் தொடர் பான விடுகதைகளை மாணவர்களிடம் கேட்டு அவர்களை உற்சாகப்படுத்தினார். சிவப்பு வண்ண நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட புகைப்பட அறையில் அனை வரும் புகைப்படம் எடுத்து கொண்டனர். முடிவில் ஆசிரியை டயானா நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் அருள் வர்ஷலா, மழலையர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் அனுசியா ஆகியோர் செய்திருந்தனர்.

    • சிறப்பு விருந்தினராக மருத்துவர் முகமது மீரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, சமீமா பர்வீன் ஆகியோர் செய்திருந்தனர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஸர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் சமூக நல்லிணக்க விழா கொண்டாடப்பட்டது.

    சிறப்பு விருந்தினராக மீரான் மருத்துவமனை மருத்துவர் முகமது மீரான், கம்பீரம் பாலசுப்ரமணியம் , வடகரை ஊராட்சி தலைவர் ஷேக் தாவுத், தென்காசி மாவட்ட தி.மு.க. பொறுப்பு குழு உறுப்பினர் அபுபக்கர், செங்கோட்டை ஜும்மா மஸ்ஜித் தலைமை இமாம், பள்ளி நிறுவனர்கள் முகமது பண்ணையார், பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் இப்தார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டனர். நோன்பு திறப்பதற்காக அனைவருக்கும் நோன்பு கஞ்சி மற்றும் பலகாரங்கள் வழங்கப்பட்டது.

    • தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் நடத்திய தேசிய அளவிலான யோகா ஸ்போர்ட்ஸ் கிராண்ட் சாம்பியன்ஷிப்- 2023 -ல் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • இப்போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சான்றிதழ் மற்றும் சுழல் கோப்பை பெற்றனர்.

    தென்காசி:

    கரூர் அஜந்தா மஹாலில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் நடத்திய தேசிய அளவிலான யோகா ஸ்போர்ட்ஸ் கிராண்ட் சாம்பியன்ஷிப்- 2023 -ல் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 4-ம் வகுப்பு மாணவர்கள் சாய் கணேஷ் மற்றும் முகிலன் முதலிடத்திலும், 4-ம் வகுப்பு மாணவன் தருண் பிரசாத், 5-ம் வகுப்பு மாணவன் முகமது அப்துல்லா மற்றும் 6-ம் வகுப்பு மாணவன் இஷாந்த் ராகவன் 2-ம் இடத்திலும், 4-ம் வகுப்பு மாணவன் ஆபீக் 3-ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் சான்றிதழ் மற்றும் சுழல் கோப்பை பெற்றனர். தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளை பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா ஆகியோர் பாராட்டினர்.

    • மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடம் அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
    • மாணவ, மாணவிகளுக்கும் இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடம் அணிந்தும், மாணவிகள் தேவ தூதர்கள் போன்று உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர். இசை இசைத்து பாட்டு பாடி கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவ-மாணவிகள் கேரல் ரவுண்ட் சென்றனர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த மாணவர் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினர்.

    பள்ளியில் இயேசு பிறந்தது போன்ற குடில் அமைக்கப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் தலைமை தாங்கினர்.

    • ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த ஜமால் ஜகேரியா, ரசினா ரீஜா மாநில அளவிலான வில் வித்தை போட்டியில் கலந்து கொண்டனர்.
    • ரசினா ரீஜா 2-ம் இடமும், ஜமால் ஜக்கேரியா 3-ம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் ஜமால் ஜகேரியா மற்றும் மாணவி ரசினா ரீஜா தமிழ்நாடு யூத் பீல்டு ஆர்ச்சரி அசோசியேஷன் நடத்திய வில் வித்தை போட்டியில் கலந்து கொண்டனர். பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவி ரசினா ரீஜா மாநில அளவில் 2-ம் இடமும், மாணவன் ஜமால் ஜக்கேரியா 3-ம் இடமும் பிடித்து வெற்றி பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியை பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி கிண்டர் கார்டன் பிரிவில் தேங்காய் தின விழா கொண்டாடப்பட்டது.
    • பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் குழந்தைகளிடம், அவர்கள் அணிந்து வந்திருந்த ஆடை பற்றியும் உணவுப்பொருட்கள் பற்றியும் கேள்விகளை கேட்டு அவர்களை உற்சாகப்படுத்தினர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி கிண்டர் கார்டன் பிரிவில் தேங்காய் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு குழந்தைகள் அனைவரும் தேங்காய் போன்ற உடை அணிந்தும், பச்சை வண்ண ஆடை அணிந்தும் வந்தனர்.

    கிண்டர் கார்டன் பிரிவு குழந்தைகள் அனைவரும் தேங்காய் கொண்டு சமைத்த சத்தான உணவு மற்றும் இனிப்பு பண்டங்களை பள்ளிக்கு கொண்டு வந்தனர். குழந்தைகளை பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் முதல்வர் சமீமா பர்வீன் வரவேற்றனர்.

    பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் குழந்தைகளிடம், அவர்கள் அணிந்து வந்திருந்த ஆடை பற்றியும் உணவுப்பொருட்கள் பற்றியும் கேள்விகளை கேட்டு அவர்களை உற்சாகப்படுத்தினர். குழந்தைகளுக்கு தேங்காயினால் சமைத்த இனிப்புகள் வழங்கப்பட்டது.

    • விருதுநகர் மாவட்டத்தில் ஏபிஎஸ் செஸ் அகாடமி நடத்திய மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது
    • 6-ம் வகுப்பு மாணவி ஹரி நந்தனா மாணவிகள் பிரிவில் மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்தார்

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் ஏபிஎஸ் செஸ் அகாடமி நடத்திய மாநில அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொண்டனர். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் பயிலும் 6-ம் வகுப்பு மாணவி ஹரி நந்தனா மாணவிகள் பிரிவில் மாநில அளவில் 2-வது இடத்தையும், 5-ம் வகுப்பு மாணவன் ஜெகத் பிரபு மாணவர்கள் பிரிவில் மாநில அளவில் 7-வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • மாணவர்களுக்கு தீபாவளி அன்று பட்டாசை எவ்வாறு கையாளுவது, தீக்காயம் பட்டவர்களை எவ்வாறு மீட்டெடுப்பது குறித்து விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது
    • சிறப்பு விருந்தினராக மாவட்ட தீயணைப்புத்துறை துணை அலுவலர் சுரேஷ் ஆனந்த் கலந்து கொண்டார்

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.

    முகாமில் மாணவர்களுக்கு தீபாவளி அன்று பட்டாசை எவ்வாறு கையாளுவது, தீக்காயம் பட்டவர்களை எவ்வாறு மீட்டெடுப்பது, தீப்பிடித்து எரிந்தால் எவ்வாறு அணைப்பது மற்றும் அவசர உதவிக்கு தீயணைப்பு துறையை அணுக வேண்டிய தொலைபேசி எண் போன்ற மிக முக்கியமான விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தீயணைப்புத்துறை துணை அலுவலர் சுரேஷ் ஆனந்த் கலந்து கொண்டார். பள்ளி தாளாளர் ஷேக் செய்யது அலி மற்றும் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை செங்கோட்டை தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் சிவசங்கரன் செய்திருந்தார்.

    • ஹரி நந்தனா, ஜெகத் பிரபு மாநில அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொண்டனர்.
    • ஜகத் பிரபு மாநில அளவில் 2-ம் இடத்தையும், மாணவி ஹரி நந்தனா 7-ம் இடத்தையும் பிடித்தனர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவி ஹரி நந்தனா மற்றும் மாணவன் ஜெகத் பிரபு திருச்சி செஸ் அசோசியேஷன் நடத்திய மாநில அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொண்டனர். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் ஜகத் பிரபு மாநில அளவில் 2-ம் இடத்தையும், மாணவி ஹரி நந்தனா மாநில அளவில் 7-ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாசை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் தலைமை மாநாடு நடைபெற்றது.
    • மாணவர்கள் டைட்டன் இங்கிலீஷ் குழு, முத்தமிழ் குழு, கணித பைரேட்ஸ் குழு, அறிவியல் அட்வென்சர்ஸ் குழு என பிரிக்கப்பட்டனர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் தலைமை மாநாடு நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஓ2 மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் மீனாட்சி சுந்தரம் மற்றும் சரஸ்மீனா கலந்து கொண்டனர். பள்ளியின் செயலாளர் முகமது பண்ணையார், தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மாணவர்கள் டைட்டன் இங்கிலீஷ் குழு, முத்தமிழ் குழு, கணித பைரேட்ஸ் குழு, அறிவியல் அட்வென்சர்ஸ் குழு என பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிலும் உள்ள மாணவர்கள் தங்களுடைய படைப்புகள் பற்றிய விரிவாக்கத்தை பெற்றோரிடம் எடுத்துரைத் தனர்.

    வகுப்புகள் அனைத்தும் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது . மழலையர் பிரிவு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடைபெற்ற இவ்விழாவில் 3 முதல் 5-ம் வகுப்பு வரையிலான கணித பைரேட்ஸ் குழு முதல் பரிசை தட்டிச் சென்றது.இம்மாநாடு மாணவர்களின் பன்முகத் திறனை மேம்படுத்தி அவர்களின் தனித்திறமையை ஊக்கு விக்கும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.




    ×