செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் சமூக நல்லிணக்க விழா

சிறப்பு விருந்தினராக மருத்துவர் முகமது மீரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, சமீமா பர்வீன் ஆகியோர் செய்திருந்தனர்.
இப்தார்  நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.
இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.
Published on

தென்காசி:

செங்கோட்டை ட்ரஸர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் சமூக நல்லிணக்க விழா கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினராக மீரான் மருத்துவமனை மருத்துவர் முகமது மீரான், கம்பீரம் பாலசுப்ரமணியம் , வடகரை ஊராட்சி தலைவர் ஷேக் தாவுத், தென்காசி மாவட்ட தி.மு.க. பொறுப்பு குழு உறுப்பினர் அபுபக்கர், செங்கோட்டை ஜும்மா மஸ்ஜித் தலைமை இமாம், பள்ளி நிறுவனர்கள் முகமது பண்ணையார், பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் இப்தார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டனர். நோன்பு திறப்பதற்காக அனைவருக்கும் நோன்பு கஞ்சி மற்றும் பலகாரங்கள் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com