search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Archery competition"

    • ஈரோடு மாவட்டம் பவானியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடந்தது.
    • புதியம்புத்தூர் எடிசன் பப்ளிக் பள்ளி மாணவ- மாணவிகள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    புதியம்புத்தூர்:

    ஈரோடு மாவட்டம் பவானியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடந்தது. இப்போட்டியில் புதியம்புத்தூர் எடிசன் பப்ளிக் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்கள் போட்டியில் 12 தங்க பதக்கங்களையும், 11 வெள்ளிப் பதக்கங்களையும், 4 வெண்கல பதக்கங்களையும் வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இம் மாணவ- மாணவிகள் நவம்பர் 21,22,23 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான வில் வித்தை போட்டியில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளையும், பயிற்சியாளர் ஆசிரியர் பாலாஜியையும், பள்ளி தாளாளர் அன்பு எடிசன் பாராட்டினார்.

    • வில்வித்தை போட்டி என்பது கண், மூளை, நரம்பு மண்டலம் ஆகியவற்றை ஒருசேர வலிமை சேர்க்கும் பயிற்சி ஆகும்.
    • இந்த பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு பார்வைதிறன் அதிகரிப்பது டன், சிந்திக்கும் திறனும் கூடும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகாலத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் உடல் வலிமையை கூட்டுவதை போல, மன வலிமையையும் அதிகரிக்கச் செய்யும் வில்வித்தை போட்டியில் மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஒலிம்பிக் அசோசியேசன், தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடை க்கானல் ஆகிய 5 இடங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய பயிற்சியாளரும், நடுவர் சங்க தலைவருமான சீத்தாராமன், உதவி பயிற்சியாளர் ராஜேஸ்வரி ஆகியோர் இந்த பயிற்சியை அளித்து வருகின்றனர்.

    வில்வித்தை போட்டி என்பது கண், மூளை, நரம்பு மண்டலம் ஆகியவற்றை ஒருசேர வலிமை சேர்க்கும் பயிற்சி ஆகும். இந்த பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு பார்வைதிறன் அதிகரிப்பது டன், சிந்திக்கும் திறனும் கூடும்.

    திண்டுக்கல் விளையாட்டு அரங்கில் 4 முதல் 45 வயதுடைய அனைத்து தரப்பினருக்கும் வில்வித்தை பயிற்சி கற்றுத்தரப்படுகிறது. மாணவர்கள் தங்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் பெற்றோர்களே முன்வந்து தங்கள் பிள்ளை களை இந்த பயிற்சிக்கு அழைத்து வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்ட த்தில் பயிற்சி மேற்கொண்டு உலக கோப்பை, வில்வித்தை தகுதி போட்டிக்கு தேர்வுபெற்ற மாணவர்கள் தனுஷ்கந்தன், அன்புராஜ், கோபிநாத், ஹனுஸ் ஆகியோர் விளையாட்டு கோட்டாவில் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றனர். பள்ளி குழந்தைகள் தற்போது வில்வித்தை போட்டியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக தகுதியான பயிற்சியாளர்களை கொண்டு மாவட்டத்தில் சிறந்த பயிற்சி அளிக்கப்படு கிறது.

    தேசிய போட்டிகளில் பங்குபெற இந்தியன் வில், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரீர்கொவ், காம்பவுண்டு ஆகிய வில் பயிற்சிகள் அளிக்கப்படு கிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் சிந்தனையை ஒருமுக ப்படுத்தி தனித்திறமையை வளர்த்துக் கொள்ள உதவும் என்றார்.

    • ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த ஜமால் ஜகேரியா, ரசினா ரீஜா மாநில அளவிலான வில் வித்தை போட்டியில் கலந்து கொண்டனர்.
    • ரசினா ரீஜா 2-ம் இடமும், ஜமால் ஜக்கேரியா 3-ம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் ஜமால் ஜகேரியா மற்றும் மாணவி ரசினா ரீஜா தமிழ்நாடு யூத் பீல்டு ஆர்ச்சரி அசோசியேஷன் நடத்திய வில் வித்தை போட்டியில் கலந்து கொண்டனர். பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவி ரசினா ரீஜா மாநில அளவில் 2-ம் இடமும், மாணவன் ஜமால் ஜக்கேரியா 3-ம் இடமும் பிடித்து வெற்றி பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியை பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • சாதனை படைத்த மாணவர் தமிழக முதல்-அமைச்சருக்கும், மாவட்ட செயலருக்கும் தனது நன்றியினை தெரிவித்தார்.
    • சிவபத்மநாதன் பொன்னாடை அணிவித்து ரொக்கப் பரிசாக ரூ. 10 ஆயிரம் வழங்கி பாராட்டினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த குற்றாலத்தைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 13) என்கிற மாணவர் நேபாளத்தின் தலைநகர் காட்மண்டூவில் நடைபெற்ற சர்வதேச சப்ஜூனியர் பிரிவினருக்கான வில்வித்தைப் போட்டியில் கலந்துகொண்டார்.

    போட்டியில் முதலிடம் சாம்பியன்சிப் வென்று தங்கப்பதக்கம் பரிசு மற்றும் பாராட்டுச் சான்று பெற்று பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரின் சாதனையைப் பாராட்டி தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க . செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் பொன்னாடை அணிவித்து ரொக்கப் பரிசாக ரூ. 10 ஆயிரம் வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி செயலர் ஐ.சி.சண்முக வேலாயுதம், தலைமை ஆசிரியர் ஆறுமுகம், பெற்றோர் ராஜேஷ்- பாக்கியலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் ராஜேஸ்வரி, பயிற்சியாளர் வைரமுத்து, குற்றாலம் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சாதனை படைத்த மாணவர் தமிழக முதல்-அமைச்சருக்கும், மா வட்ட செயலருக்கும் தனது நன்றியினை தெரிவித்தார்.

    ×