search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Puthiyamputhur"

  • புதியம்புத்தூரில் 75 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை சி.எஸ்.ஐ. சேகர சபையால் தொடங்கப்பட்டது.
  • வாரத்திற்கு ரூ.80 லட்சத்திற்கும் குறையாமல் ஆடு விற்பனை நடைபெற்று வருகிறது.

  புதியம்புத்தூர்:

  புதியம்புத்தூரில் 75 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை சி.எஸ்.ஐ. சேகர சபையால் தொடங்கப்பட்டது.

  வாரம் தோறும் வியாழக்கிழமை கூடும் இச்சந்தையில் எல்லா பொ ருட்களும் பொது மக்கள் வாங்கிசெல்வார்கள். சுற்றுவட்டார கிராமமக்கள் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை சந்தையில் வாங்கி செல்வார்கள்.

  நாளடைவில் மற்ற பொருட்கள் விற்பனை செய்யாமல் ஆடுகள் மட்டு மே விற்பனைக்கு வந்தன. வாரந்தோறும் இங்கு 2 ஆயிரம் ஆடுகளுக்கு குறை யாமல் விற்பனைக்கு வரும்.

  வாரத்திற்கு ரூ.80 லட்சத்திற்கும் குறையாமல் ஆடு விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் ஆடு ஒன்றுக்கு சந்தை நுழைவு கட்டணமாக ரூ.40 சந்தை குத்தகைதாரர் வசூல் செய்கிறார். இந்நிலையில் இந்த சந்தையில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி இல்லை. கழிப்பிட வசதிகள் கிடையாது. குறிப்பாக மழை காலங்களில் சந்தை சேறும், சகதியுமாக உள்ளது என புகார் எழுந்துள்ளது.

  இதுகுறித்து வியாபாரி கள், பொதுமக்கள் சார்பில் கூறுகையில், இந்த சகதி க்குள் நின்று தான் வியா பாரிகள் ஆடுகளை விற்ப னை செய்ய வேண்டும்.

  உடனடியாக சந்தை வளாகத்திற்குள் சரல் மண் அடித்து அங்கு நிலவி வரும் சுகாதாரக் கேட்டை சரி செய்ய வேண்டும். சந்தைக்கு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

  • கொம்பையா சமீப காலமாக சற்று உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார்.
  • கடந்த 2-ந்தேதி இரவு கொம்பையா தனது தாய் முத்தம்மாளிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டில் தனியாக படுத்து தூங்கி உள்ளார்.

  புதியம்புத்தூர்:

  புதியம்புத்தூர் அருகே உள்ள குலசேகர நல்லூர் காலனி தெருவை சேர்ந்தவர் கொம்பையா (வயது26). இவரது தந்தை வெள்ளைச் சாமி இறந்து விட்டார். தாய் முத்தம்மாள் மற்றும் சகோதர, சகோதரிகளிடம் கொம்பையா வசித்து வந்துள்ளார். சமீப காலமாக இவர் சற்று உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார்.

  கடந்த 2-ந்தேதி இரவு கொம்பையா தனது தாய் முத்தம்மாளிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டில் தனியாக படுத்து தூங்கி உள்ளார். இரவு மின் விசிறி கம்பியில் சேலையால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  தகவல் அறிந்ததும் ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கொம்பையா உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து ள்ளனர்.

  • தட்டாபாரை ரோட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் மழைநீர் தேங்கி விடுகிறது.
  • இதனை புதியம்புத்தூர் பஞ்சாயத்து நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.

  புதியம்புத்தூர்:

  புதியம்புத்தூரில் தினசரி மாலையில் மழை பெய்து வருகிறது. இதனால் தட்டாபாரை ரோட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால் அருகில் உள்ள போலீஸ் நிலையம், பஞ்சாயத்து அலுவலகம், கால்நடை மருத்துவமனைக்கு பொதுமக்கள் செல்ல சிரமப்படுகின்றனர். இதனை புதியம்புத்தூர் பஞ்சாயத்து நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியை மேற்கொண்டனர். இந்த பணியினை ஊராட்சி மன்ற தலைவி பழனிச்செல்வி மற்றும் துணைத் தலைவி ஜெயா ஆகியோர் உடன் இருந்து பார்வையிட்டனர்.

  மேலும் அருகில் உள்ள கசிநீர் குட்டத்தில் உள்ள மழை நீரையும் ஓடை வழியாக செல்ல ஏற்பாடு செய்தனர். யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகளுடன் பணிகள் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டார். இந்நிலையில் நேற்று பெய்த மழையில் அங்கு மீண்டும் மழை நீர் தேங்கிவிட்டது. இந்த வளாகத்திற்குள் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தரமாக எஸ்.கைலாசபுரம் சாலையில் செட்டியூரணி விலக்கு அருகில் இருந்து சாலையின் வடக்கு ஓரத்தில் சுமார்200 மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைத்து அருகில் உள்ள ஓடை வழியாக மழை நீரை திருப்பி விட வேண்டும் அவ்வாறு செய்தால் இப்பகுதியில் மழை நீர் நிரந்தரமாக தேங்காமல் இருக்கும் என அப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • புதியம்புத்தூர் பகுதிகளில் 4 நாட்களாக மாலை வேளையில் மழை பெய்து வந்தது.
  • நேற்று முன்தினம் பெய்த கனமழையால் புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய அரசு கட்டிடங்கள் உள்ள வளாகத்தில் மழைநீர் தேங்கியது.

  புதியம்புத்தூர்:

  புதியம்புத்தூர் பகுதிகளில் 4 நாட்களாக மாலை வேளையில் மழை பெய்து வந்தது.

  விவசாயிகள் மகிழ்ச்சி

  நேற்று முன்தினம் கனமழை பெய்தது. எனவே உளுந்து, பாசிப்பயறு கம்பு, பருத்தி, சோளம் பயிரிட்டுள்ள மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதியம்புத்தூர் மலர் குளத்திற்கு மழை நீர் வரும் தெற்கு காட்டில் கன மழை பெய்ததால் மலர் குளத்திற்கு மழை நீர் வர ஆரம்பித்துள்ளது. மலர் குளத்திற்கு அதிகமான மழை நீர் வரும் மேற்கு பகுதியில் உள்ள குனவன் குளம், செவல்குளம், புதுப்பச்சேரி குளம் உள்ளிட்ட 7 குளங்கள் இன்னும் நிரம்பவில்லை.

  மழைநீர் தேங்கியது

  அந்தக் குளங்கள் நிரம்பி னால் தான் மலர் குளம் நிரம்ப வாய்ப்பு உண்டு. நேற்று முன்தினம் பெய்த கன மழையால் புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பஞ்சாயத்து அலுவலகம், கால்நடை மருத்துவமனை, சித்த மருந்தகம் ஆகிய அரசு கட்டிடங்கள் உள்ள வளாகத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள் அவதி யடைந்தனர். நேற்று மழை நீர் வடிய ஆரம்பித்தவுடன் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

  • பெருமாள் கனி 20 வெள்ளாடுகளை வீட்டின் அருகில் உள்ள தொழுவத்தில் கட்டி வைத்திருந்தார்.
  • இந்நிலையில் காலையில் பார்த்தபோது ஒரு வெள்ளாடு மற்றும் குட்டிகளை காணவில்லை.

  புதியம்புத்தூர்:

  புளியம்பட்டி அருகே உள்ள மருதன்வாழ்வு கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மனைவி பெருமாள் கனி (வயது56). இவர் 20 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். அவர் ஆடுகளை வீட்டின் அருகில்உள்ள தொழுவத்தில் கட்டி வைத்திருந்தார்.

  இந்நிலையில் காலையில் பார்த்தபோது ஒரு வெள்ளாடு மற்றும் குட்டிகளை காணவில்லை. இது குறித்து பெருமாள்கனி நாரை கிணறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி என்.புதூர் கீழதெருவை சேர்ந்த கமலேஷ் கிரண் (21), ஓட்டப்பிடாரம் ரைஸ்மில் காலனியை சேர்ந்த முருகன் (19), மருதன்வாழ்வு கிராமத்தை சேர்ந்த பாலா (21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 17 வயது சிறுவனை கைது செய்து நெல்லை சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆடு மற்றும் குட்டிகளை மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

  • கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
  • ஒன்றிய பகுதிகள் முழுவதிலும் உள்ள கிளைகளில் பூத் வாரியாக கமிட்டி அமைக்கப்பட்டது.

  புதியம்புத்தூர்:

  புதியம்புத்தூரில் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் ஒன்றிய செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். முன்னதாக ஒன்றிய பகுதிகள் முழுவதிலும் உள்ள கிளைகளில் பூத் வாரியாக கமிட்டி அமைக்கப்பட்டது. இளைஞர் மற்றும் இளம்பெண், பாசறை, தகவல் தொழில் நுட்ப அணியினருடன் 19 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

  நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் லட்சுமண பெருமாள், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜவகர், ஒன்றிய கவுன்சிலர்கள் கோபி, ஆலோசனை மரியான், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கண்ணன், போடுசாமி, வக்கீல் அணி பரமசிவம், ஜெயலலிதா, ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பொன்ராஜ், தினேஷ், ஆதி லிங்கம், சின்னத்துரை, ஆறுமுகசாமி, கிருபானந்த முருகன், முத்துச்சாமி, புதியம்புத்தூர் சுப்பிரமணியன், ராமசாமி, தகவல் தொழில் நுட்ப அணி ராஜேஷ்குமார், கவியரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஒரு இணை ஆணையர் மண்டலத்துக்கு ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு கோவில்களில் திருமணம் நடத்தப்படுகிறது
  • மணமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டது.

  புதியம்புத்தூர்:

  இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஒரு இணை ஆணையர் மண்டலத்துக்கு ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு கோவில்களில் திருமணம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் குலசேகரநாதர் கோவில் உள்ளிட்ட இடங்களில் 7 ஜோடி களுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதில் புதியம்புத்தூர் குலசேகரநாதர் கோவிலில் ஒரு ஜோடிக்கு திருமணம் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தலைமையிலும், ஓட்டப்பிடாரம் சரக ஆய்வாளர் முப்பிடாதி என்ற திவ்யா முன்னிலையிலும் நடைபெற்றது.

  நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை திருமாங்கல்யம் 4 கிராம், பீரோ, கட்டில், மெத்தை, தலையணைகள், பூஜை பொருட்கள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டது.

  • ஈரோடு மாவட்டம் பவானியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடந்தது.
  • புதியம்புத்தூர் எடிசன் பப்ளிக் பள்ளி மாணவ- மாணவிகள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

  புதியம்புத்தூர்:

  ஈரோடு மாவட்டம் பவானியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடந்தது. இப்போட்டியில் புதியம்புத்தூர் எடிசன் பப்ளிக் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்கள் போட்டியில் 12 தங்க பதக்கங்களையும், 11 வெள்ளிப் பதக்கங்களையும், 4 வெண்கல பதக்கங்களையும் வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இம் மாணவ- மாணவிகள் நவம்பர் 21,22,23 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான வில் வித்தை போட்டியில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளையும், பயிற்சியாளர் ஆசிரியர் பாலாஜியையும், பள்ளி தாளாளர் அன்பு எடிசன் பாராட்டினார்.

  • தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.
  • முகாமில் சிறந்த கால்நடை பராமரிப்போருக்கான மேலாண்மை விருதுகள் 8 பேருக்கு வழங்கப்பட்டது.

  புதியம்புத்தூர்:

  ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கக்கரம்பட்டி கிராமத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்பு துறை, ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.

  நிகழ்ச்சியில் சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். சிறந்த கால்நடை பராமரிப்போருக்கான மேலாண்மை விருதுகள் 8 பேருக்கு வழங்கப்பட்டது.

  இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவி ராஜ், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், நெல்லை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்ல பாண்டியன், ஓட்டப்பிடாரம் யூனியன் துணைத்தலைவர் காசி விஸ்வநாதன், கோவில்பட்டி ஆர்.டி.ஓ. ஜேன் கிறிஸ்டிபாய், ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் விஜயஸ்ரீ, குறுக்கு சாலை பஞ்சாயத்து தலைவர் முனியம்மாள், கொடியங்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • கோவில்பிள்ளை மளிகை கடை நடத்தி வந்தார்.
  • உறவினர் ஒருவருக்கு போன் செய்த கோவில் பிள்ளை தான் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

  புதியம்புத்தூர்:

  புதியம்புத்தூர் அருகே உள்ள ஓசனூத்தை கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் கோவில்பிள்ளை (வயது 51). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவர் தனது மனைவி குருவம்மாளின் நகைகளை மளிகை கடை பொருட்கள் வாங்குவதற்காக அடகுவைத்து உள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

  இதனால் மன வருத்தத்தில் இருந்த கோவில் பிள்ளை நேற்று இரவு உறவினர் ஒருவருக்கு போன் செய்து தான் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். உடனே உறவினர்கள் கடைக்கு சென்று பார்த்த போது கடையின் மாடியில் மயக்கநிலையில் இருந்த கோவில் பிள்ளையை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.