என் மலர்

  நீங்கள் தேடியது "public demand"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் நோயாளிகள் வெயில் , மழைக்காலங்களில் பாதுகாப்பாக அமர்ந்திருந்தனர்.
  • ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடை மீண்டும் அமைக்கப்படவில்லை.

  கடலூர்:

  கடலூர் அரசு மருத்துவமனை அருகே கடந்த பல ஆண்டுகளாக பயணியர் நிழற்குடை இருந்து வந்தது. இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், தனியார் மருத்துவமனைகள், வணிக வளாகத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து சென்றனர். இதன் காரணமாக இங்கு அமைக்கப்பட்டு இருந்த பயணியர் நிழற்குடையை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் நோயாளிகள் வெயில் , மழைக்காலங்களில் பாதுகாப்பாக அமர்ந்திருந்தனர். மேலும் சாலையில் பொதுமக்கள் நிற்காமல் இருந்ததால், இந்த பகுதியில் பாதிப்பும் ஏற்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சாலை ஓரத்தில் கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்காக பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடை மீண்டும் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையில் நின்று தினந்தோறும் பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.

  மேலும் மழை மற்றும் சுட்டெரிக்கும் வெயிலில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கால்கடக்க நீண்ட நேரம் நின்று பஸ்ஸில் பயணம் செய்து வருகின்றனர். மேலும் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வெயில் மற்றும் மழையில் நிற்பதால் மீண்டும் மீண்டும் உடல் உபாதைகள் ஏற்பட்டு மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் ஏற்கனவே அமைத்திருந்த நிழற்குடையை எந்தவித காரணமும் இன்றி அகற்றியதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதோடு அதிகாரிகளின் அலட்சியத்தின் உச்சமாக இதனை பார்க்க நேரிடுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆண்டாண்டு காலமாக அமைக்கப்பட்டிருந்த பயணியர் நிழற்குடை மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 32 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என பட்டியல் தயாராகி உள்ளது.
  • 50-க்கும் மேற்பட்டோர் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  கடலூர்: 

  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தாழ நல்லூர் கிராமத்தை ச்சேர்ந்த பொதுமக்கள் 250 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் வழங்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது 32 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என பட்டியல் தயாராகி உள்ளதாக தகவல் அப்பகுதி மக்கள் மத்தியில் பரவியது. இதில் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  திட்டக்குடி தாசில்தார் கார்த்திக்கை நேரில் சந்தித்து தங்கள் முறையாக பட்டியலை தயார் செய்து அனைவரும் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கார்த்திக் உறுதியளித்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் தாழநல்லூர் கிராமத்திலேயே தகுதியுடைய பயனாளிகள் வீடு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வாழ்கிறோம். ஆனால் அதிகாரிகள் சிலர் வெளியூரைச்சேர்ந்த சிலருக்கு எங்கள் ஊரில் பட்டா கொடுக்க முயற்சி ப்பதாக தெரிந்ததால் தாசில்தாரை சந்தித்து முறையிட்டோம் என தெரிவித்தனர். திடீரென தாலுக்கா அலுவலகத்தில் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செங்கோட்டையில் இருந்து சுரண்டை செல்லும் நெடுஞ்சாலை மிகவும் பிரதான சாலையாகும். இச்சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
  • இந்த சாலையின் செங்கோட்டை நுழைவு பகுதி அருகில் அபாயகரமான வளைவு பகுதிகள், கணக்கபிள்ளைவலசை நான்கு முக்கு சந்திப்பு, சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி, இலத்தூர் சந்திப்பு சாலை, ஈனாவிலக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாகன விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தது.

  செங்கோட்டை:

  செங்கோட்டையில் இருந்து சுரண்டை செல்லும் நெடுஞ்சாலை மிகவும் பிரதான சாலையாகும். இச்சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

  இந்த சாலையின் செங்கோட்டை நுழைவு பகுதி அருகில் அபாயகரமான வளைவு பகுதிகள், கணக்கபிள்ளைவலசை நான்கு முக்கு சந்திப்பு, சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி, இலத்தூர் சந்திப்பு சாலை, ஈனாவிலக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாகன விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தது.


  இதனால் பிரதான சாலையில் பெரும் அளவில் விபத்துகள் தடுக்கப்பட்டது.

  இந்நிலையில் சமீபத்தில் வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் இலத்தூர் உள்ளிட்ட பிரதான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைகள் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்லவலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
  • கிராம மக்கள் குறுக்கு வழியாக பயன்படுத்தி வருகின்றனர்.

  விழுப்புரம்:

  விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெரியபாபுசமுத்திரம் கிராமத்தில் இருந்து ஏரிக்கரை வழியாக வனத்தாம்பாளையம் செல்லும் தார்சாலை பெரியபாபுசமுத்திரத்தில் மண் சாலை போல மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலை சேறும் சகதியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத அளவு மிக மோசமாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். 

  இச்சாலை வழியாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம் பகுதிகளுக்கு சென்று வர பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் குறுக்கு வழியாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே பெரியபாபு சமுத்திரத்தில் இருந்து வனத்தாம்பாளையம் செல்லும் ஏரிக்கரை சாலையை பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திட்டக்குடி பகுதிகளில் அரசு கேபிள் சேவை முடக்கப்பட்டது.
  • அரசு இணைப்பை செயல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்

  கடலூர்: 

  கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டார பகுதிகளில் சிறுமுலை, பெருமுலை, திட்டக்குடி, தர்மகுடிகாடு, கோழியூர் ,தொள்ளார்குடிக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் இணைப்பு பெற்று டிவி பார்த்து வருகின்றனர். நேற்று காலை 9 மணி முதல் சுமார் 24 மணி நேரம் அரசு கேபிள் நோ சிக்னல், இணைப்பு கிடைக்கவில்லை இதனால் கேபிள் சேவை முடங்கியதால் பொதுமக்கள் நாட்டு நடப்புகளை அறிய முடியாமலும் செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு சேனல்களை பார்க்க முடியாமல் உள்ளதால் அரசு உடனடியாக தொடர்ந்து அரசு இணைப்பை செயல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேத்தியாத்தோப்பு அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் சாலை சீர் செய்யப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

  கடலூர்: 

  கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் கூளாப் பாடி ஊராட்சி தென்பாதி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பள்ளிக்கூட சாலை குண்டும் குழியுமாக, மழைக்காலங்களில் சேரும் சகயுதிகமாக உள்ளது. இந்த வழியாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

  இந்த சாலை கடந்த 2009 ஆண்டுகளில் போடப்பட்டது. இது குறித்து கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் சாலை சீர் செய்யப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாகூர் அடுத்துள்ள பரிக்கல்பட்டு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பூண்டி அம்மன் கோவில் பின்புறம் குளம் உள்ளது.
  • குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு நாளுக்கு நாள் நீர் பிடிப்பு பகுதி குறைந்து கொண்டே செல்கிறது.

  புதுச்சேரி:

  பாகூர் அடுத்துள்ள பரிக்கல்பட்டு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பூண்டி அம்மன் கோவில் பின்புறம் குளம் உள்ளது.

  இந்த குளம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் முழுவதும் இந்த குளத்தில் கலந்து கழிவுநீர் குளமாக மாறிவிட்டது.

  மேலும், குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு நாளுக்கு நாள் நீர் பிடிப்பு பகுதி குறைந்து கொண்டே செல்கிறது. ஆக்கிரமிப்பு தொடர்பாக அப்பகுதி மக்களிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெடும் நிலை ஏற்பட்டு வருகிறது.

  இது தொடர்பாக பல்வேறு புகார்கள் இருந்ததால் கடந்த 2 ஆண்டிற்கு முன்பு கவர்னராக இருந்த கிரண்பேடி நேரடியாக குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து குளத்தை தூர்வாரி பராமரிக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கழிவு நீர் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

  ஆனால் அவரது உத்தரவு இதுவரை செயல்படுத்தப்படவில்லை.தற்போது இந்த குளம் புதர் மண்டி விஷ ஜந்துகளின் புகலிடமாக மாறிவிட்டது. பாம்பு தேள் போன்ற விஷ பூச்சிகள் குடியிருப்பு பகுதிகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்து வருகிறது.

  எனவே இந்த குளத்தை தூர்வாரி பராமரிக்கவும், நீதிமன்ற உத்தரவுபடி நீர் நிலையில் வசிக்கும் மக்களை வீடற்ற மக்களுக்கு மாற்று இடத்தில் மனைபட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திடீர் காற்று மழை வரும் போது இந்த மின்கம்பம் அங்கும் இங்கும் ஆடுகிறது.
  • இந்த மின்கம்பம் சரிந்து கீழேவிழுந்தால் உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.

  உடன்குடி:

  உடன்குடிஒன்றியம் செட்டியாபத்து ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டிவிளையில் இருந்து வாகவிளை செல்லும் மெயின் ரோட்டில் 3 மின்சார கம்பங்கள் சிமெண்ட் எல்லாம்கீழே விழுந்து, உள்ளே உள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்த நிலையில் உள்ளது.

  திடீர் காற்று மழை வரும் போது இந்த மின்கம்பம் அங்கும் இங்கும் ஆடுகிறது.

  இந்த மின்கம்பம் சரிந்து கீழேவிழுந்தால் உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.

  எனவே இந்த 3 மின்கம்பங்களையும் உடனடியாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் படமுடிபாளையம் சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வருகிறது.
  • வாகனம் குறித்த அடையாளம் தெரியாமல் போய்விடுகிறது,

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டாட்சி யர் அலுவலகத்தின் முன்பு அடிக்கடி ஏற்படும் வாகன விபத்து. கேமரா அமைத்து போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

  பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் படமுடிபாளையம் சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வருகிறது. வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக மாணவ ,மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாக னங்களில் சிக்கி அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.பரமத்தி வேலூர் பகுதிகளில் விபத்துகள் அதிகமாக ஏற்படும் இடமாக இந்த இடம் திகழ்கிறது. சில நேரங்களில் விபத்தை ஏற்படுத்திய வாகனங்கள் நிற்காமல் சென்று விடுகின்றன. இதனால் வாகனம் குறித்த அடையாளம் தெரியாமல் போய்விடுகிறது. எனவே இவ்விடத்தில் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும் எனவும், வாகன விபத்தை தடுக்க போதிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் ,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தென்காசியில் இருந்து கடையம் வரை தடம் எண். 16 டவுன் பஸ் சென்று வருகிறது.
  • இந்த பஸ் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடமான ஆவுடை யானூர், சின்னநாடாரூர், கோட்டைவிளையூர், கரி சலூர் வழியாக செல்லாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார்.

  தென்காசி:

  தென்காசியில் இருந்து கடையம் வரை செல்லும் தடம் எண். 16 டவுன் பஸ். இந்த பஸ் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடமான ஆவுடை யானூர், சின்னநாடாரூர், கோட்டைவிளையூர், கரி சலூர் வழியாக செல்லாமல் ஆவுடையானூரில் இருந்து நேரடியாக மயிலப்பபுரம் வழியாக கடையத்தை நோக்கி சென்று விடுகிறது.

  இதனால் புறக்கணிக் கப்பட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோர் ஆட்டோக்கள் மற்றும் பிற வாகனங்களுக்கு அதிக பணம் கொடுத்து பயணிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  எனவே இந்த அரசு பஸ்சை அனுமதிக்கப் பட்ட வழித்த டத்தில் முறையாக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாய்க்கால் தூர் வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • சின்னாண்டாங்கோயில் வழியாக செல்லும்

  கரூர்:

  கரூர் மாநகராட்சிக்குட்பட்ட படிக்கட்டுத்துறை பகுதியின் பின்புறம் வழியாக வாய்க்கால் செல்கிறது. சின்னாண்டாங்கோயில் வரை இந்த வாய்க்கால் செல்கிறது. வாய்க்காலின் இருபுறமும் நூற்றுக்கணக்கான குடியிருப் புகள் உள்ளன. இந்நிலையில், இந்த வாய்க்காலை ஆக்ரமிக் கும் வகையில் புற்கள் அதிகளவு வளர்ந்து மிகவும் மோச மான நிலையில் உள்ளது. அதிக முட்புதர்கள்வளர்ச்சி காரணமாக, விஷ ஐந்துகளின் புகலிடமாகவும் வாய்க்கால் மாறி வருகிறது. இதனால், குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே, அனைவரின் பாதுகாப்பு கருதி இந்த வாய்க்காலை தூர்வாரி, முட்புதர்களை அகற்ற தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • <