என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பெரியபாபுசமுத்திரம் - வனத்தாம்பாளையம் இடையே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
  X

  பெரியபாபுசமுத்திரத்தில் சாலை சேறும் சகதியுமாக உள்ளதை படத்தில் காணலாம்.

  பெரியபாபுசமுத்திரம் - வனத்தாம்பாளையம் இடையே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
  • கிராம மக்கள் குறுக்கு வழியாக பயன்படுத்தி வருகின்றனர்.

  விழுப்புரம்:

  விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெரியபாபுசமுத்திரம் கிராமத்தில் இருந்து ஏரிக்கரை வழியாக வனத்தாம்பாளையம் செல்லும் தார்சாலை பெரியபாபுசமுத்திரத்தில் மண் சாலை போல மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலை சேறும் சகதியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத அளவு மிக மோசமாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

  இச்சாலை வழியாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம் பகுதிகளுக்கு சென்று வர பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் குறுக்கு வழியாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே பெரியபாபு சமுத்திரத்தில் இருந்து வனத்தாம்பாளையம் செல்லும் ஏரிக்கரை சாலையை பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  Next Story
  ×