search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speed Breakers"

    • செங்கோட்டையில் இருந்து சுரண்டை செல்லும் நெடுஞ்சாலை மிகவும் பிரதான சாலையாகும். இச்சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
    • இந்த சாலையின் செங்கோட்டை நுழைவு பகுதி அருகில் அபாயகரமான வளைவு பகுதிகள், கணக்கபிள்ளைவலசை நான்கு முக்கு சந்திப்பு, சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி, இலத்தூர் சந்திப்பு சாலை, ஈனாவிலக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாகன விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் இருந்து சுரண்டை செல்லும் நெடுஞ்சாலை மிகவும் பிரதான சாலையாகும். இச்சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

    இந்த சாலையின் செங்கோட்டை நுழைவு பகுதி அருகில் அபாயகரமான வளைவு பகுதிகள், கணக்கபிள்ளைவலசை நான்கு முக்கு சந்திப்பு, சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி, இலத்தூர் சந்திப்பு சாலை, ஈனாவிலக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாகன விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தது.


    இதனால் பிரதான சாலையில் பெரும் அளவில் விபத்துகள் தடுக்கப்பட்டது.

    இந்நிலையில் சமீபத்தில் வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் இலத்தூர் உள்ளிட்ட பிரதான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைகள் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்லவலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிறிய கார்கள் மற்றும் பெரிய கனரக வாகனங்கள் சிரமம் அடைகின்றன.
    • அதனை அகற்ற சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் கிராமத்தில் உள்ள தெருக்களில் எவ்வித அனுமதியும் இல்லாமல் ஒரு சிலர் தாங்களாகவே முன்வந்து வேகத்தடைகள் என்ற பெயரில் ஆபத்தை வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தும் வண்ணம் அமைத்து வரும் சுவர் போன்ற வேகத்தடைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற வேகத்தடைகள் தார் சாலைக்கு பயன்படுத்தும் மூலப் பொருட்களை பயன்படுத்தாமல் மாற்றாக சிமெண்ட் மற்றும் ஜல்லிகளை கொண்டு அமைக்கப்பட்டு வருவதால் அதில் ஏறி இறங்குவதற்கு இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி சிறிய கார்கள் மற்றும் பெரிய கனரக வாகனங்களும் சிரமம் அடைகின்றன.

    எனவே இதுபோன்று திடீர் திடீரென முளைத்து வரும் வேகத்தடைகளை அகற்றி வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாகை சாலையில் நீதிமன்றம், அரசு கலைக்கல்லூரி, வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் பல அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
    • சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள் பயன்படுத்தி வரும் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகளும் ஏற்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம்-நாகை சாலையில் முக்கிய அலுவலக ங்களான நீதிமன்றம், அரசு கலைக்கல்லூரி, வட்டாட்சியா் அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சார்நிலை கருவூலம், பள்ளிக்க–ல்வித்துறை அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்த சாலையில் தினசரி பகல் நேரங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவ, மாணவியா் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகளும் ஏற்படுகிறது.

    வேதாரண்யம் –நாகை மெயின்ரோட்டிலிருந்து நீதிமன்றம் சாலை பிரியும் இடத்திற்கு இரு புறங்களிலும் வேகத்தடை அமைத்து தந்திட வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை உடன் செய்து விபத்தினை தடுக்க உரிய துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    ஆரோவில் வேகத்தடை அமைந்துள்ள இடத்தில் இரவில் ஒளிரும் பெயிண்ட் அடித்து எச்சரிக்கை வாசகம் அமைத்து விபத்தை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான புதுவை-மயிலம் திண்டிவனம் சாலையில் ஆரோவில் போலீஸ் நிலையம் உள்ளது.

    இந்த போலீஸ் நிலையத்துக்கு அதிகப்படியான பொதுமக்கள் தினமும் வந்து செல்வதால் எப்போதுமே இங்கு மக்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். இதனால் இங்கு வாகனங்களும் அடிக்கடி வந்து செல்லும்.

    எப்போதுமே பரபரப்பாக காணப்படும் இந்த போலீஸ் நிலையம் எதிரே உள்ள சாலையில் சில நாட்களுக்கு முன்பு இங்கு பெரிய உயரத்திலான வேகத்தடை அமைக்கப்பட்டது.

    ஆனால் வேகத்தடையில் இரவில் மிளிரும் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்காதததால் இரவு நேரங்களில் வேகமாக வரும் கார் உள்ளிட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இந்த பகுதியில் வேகத்தடை இருப்பதை காட்டும் எச்சரிக்கை வரை படத்துடன் கூடிய வாசகமும் இல்லை.

    எனவே மாநில நெடுஞ்சாலைதுறையினர் வேகத்தடை அமைந்துள்ள இடத்தில் இரவில் ஒளிரும் பெயிண்ட் அடித்து எச்சரிக்கை வாசகம் அமைத்து விபத்தை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×