நீதிமன்றம் அருகே வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

நாகை சாலையில் நீதிமன்றம், அரசு கலைக்கல்லூரி, வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் பல அலுவலகங்கள் இயங்கி வருகிறது.சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள் பயன்படுத்தி வரும் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகளும் ஏற்படுகிறது.
நீதிமன்றம் அருகே வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம்-நாகை சாலையில் முக்கிய அலுவலக ங்களான நீதிமன்றம், அரசு கலைக்கல்லூரி, வட்டாட்சியா் அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சார்நிலை கருவூலம், பள்ளிக்க–ல்வித்துறை அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்த சாலையில் தினசரி பகல் நேரங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவ, மாணவியா் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகளும் ஏற்படுகிறது.

வேதாரண்யம் –நாகை மெயின்ரோட்டிலிருந்து நீதிமன்றம் சாலை பிரியும் இடத்திற்கு இரு புறங்களிலும் வேகத்தடை அமைத்து தந்திட வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை உடன் செய்து விபத்தினை தடுக்க உரிய துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com