search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் குழாய் உடைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் -  பொதுமக்கள் கோரிக்கை
    X

    பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட குழி அருகே தடுப்பு வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    குடிநீர் குழாய் உடைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

    • கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் 40ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
    • திருமணம் போன்ற விசேஷ நாட்களில் வாகன எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி,தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இதனால் பல்லடம் நகரத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் விபத்துக்கள், ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், புறவழிச்சாலை வேண்டும், மேம்பாலம் கட்ட வேண்டும் என கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல்லடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில்,பல்லடம் அருகே காரணம்பேட்டை முதல் பல்லடம் அண்ணாநகர் வரை உள்ள சுமார் 9 கி.மீட்டர் துாரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் இடங்களில், ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு விடுகிறது. குடிநீர் குழாய் இணைப்புகள் உடனடியாக சரி செய்யப்படாததால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

    இதற்கிடையே பல்லடம் பஸ் நிலையம் அருகே குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் அதனை சரி செய்ய குழி தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகின்றது.ஆனால் இன்னும் குழியை சுற்றி தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன அந்தப்பகுதி வளைவான பகுதி என்பதால் கவனக்குறைவால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே குழாய் உடைப்பு பணிகளை விரைவாக செய்யவேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×