என் மலர்
உள்ளூர் செய்திகள்

குண்டும், குழியுமான சாலையை படத்தில் காணலாம்
சேத்தியாத்தோப்பு அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
- சேத்தியாத்தோப்பு அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் சாலை சீர் செய்யப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் கூளாப் பாடி ஊராட்சி தென்பாதி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பள்ளிக்கூட சாலை குண்டும் குழியுமாக, மழைக்காலங்களில் சேரும் சகயுதிகமாக உள்ளது. இந்த வழியாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த சாலை கடந்த 2009 ஆண்டுகளில் போடப்பட்டது. இது குறித்து கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் சாலை சீர் செய்யப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story






