புதியம்புத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மின்வாரிய அலுவலர் பலி

அமல்ராஜ் பிரபு நேற்று மதியம் எப்போதும் வென்றானில் இருந்து வேலைக்காக தூத்துக்குடிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.சுப்ரமணியபுரம் விளக்கு அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
புதியம்புத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மின்வாரிய அலுவலர் பலி
Published on

புதியம்புத்தூர்:

தூத்துக்குடி தாமஸ் நகரை சேர்ந்தவர் அமல்ராஜ் பிரபு (வயது 54). இவர் எப்போதும்வென்றான் மின்வாரிய அலுவலகத்தில் லைனிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று மதியம் எப்போதும் வென்றனில் இருந்து வேலைக்காக தூத்துக்குடிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

சுப்ரமணியபுரம் விளக்கு அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அமல்ராஜ் பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்ததும் எப்போதும் வென்றான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com