என் மலர்
நீங்கள் தேடியது "women protest"
- ரூ.50 லட்சம் கடன் வழங்க அனுமதி அளித்தும் அதனை வழங்காமல் மகளிர்திட்ட அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து கூட்டமைப்பினர் இணைந்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
- 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பெரியகுளம் லட்சுமிபுரத்தில் உள்ள அரசு வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்த ஏராளமான பெண்கள் 10 மகளிர் சுயஉதவிக்குழுக்களை தொடங்கினர். இவர்கள் மாவட்ட மகளிர்திட்ட அலுவலகத்தில் உள்ள பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பின் கீழ் தங்கள் குழுக்களுக்கு கடன்கேட்டு விண்ணப்பித்தனர்.
இந்நிலையில் தங்கள் குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.50 லட்சம் கடன் வழங்க அனுமதி அளித்தும் அதனை வழங்காமல் மகளிர்திட்ட அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து கூட்டமைப்பினர் இணைந்து மோசடி செய்ததாக கூறி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பெரியகுளம் லட்சுமிபுரத்தில் உள்ள அரசு வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதுகுறித்து பெண்கள் கூறுகையில், எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்த 10 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.50 லட்சம் கடன் வழங்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மகளிர் திட்ட அதிகாரிகள் அந்த கடன் தொகையை எங்களுக்கு வழங்காமல் மோசடி செய்துள்ளனர்.
எனவே மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் எங்கள் குழுக்களுக்கு முறையாக கடன் வழங்கவேண்டும் என்றனர். போராட்டம் குறித்து அறிந்ததும் பெரியகுளம் போலீசார் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினர். ரூ.50 லட்சம் கடன்தொகையை பெற்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.
- 100 நாள் வேலை அட்டையை சாலையில் போட்டனர்
- போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்
செங்கம்:
செங்கம் அடுத்த புதுப்பேட்டை பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலை தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக ஊராட்சி நிர்வாகம் அறிவித்து அதன்மூலம் பயனாளிகள் தேர்வு செய்து 100 நாள் வேலை வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்த பயனாளிகளை 10 வருடங்களுக்கு முன்பு உள்ள கணக்கீடு பட்டியல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்படுத்தி தற்போது புதியதாக கணக்கீடு செய்து அதன்மூலம் பயனாளிகளை தேர்வு செய்திட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துறைச்சார்ந்த அதிகாரிகளிடம் அப்பகுதியில் உள்ள பெண்கள் பலமுறை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் 100 நாள் வேலை அட்டையை சாலையில் போட்டு ஒப்பாரி வைத்து நூதனமுறையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த மேல்செங்கம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினர். இதைத் தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.
- வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- ஒன்றிய தலைவர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொன்னேரி:
மீஞ்சூர் ஒன்றியம் சிறுலபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது அண்ணாமலை சேரி கிராமம். இங்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலையில் முறைகேடு நடப்பதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் குடிநீர், சாலை, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மீஞ்சூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், 100 நாள் வேலை திட்ட முறை கேடுகளை களையவேண்டும் என்று வலியுறுத்தினர்.
அவர்களிடம் ஒன்றிய தலைவர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- பொதுபாதையின் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- இதனால் ஆத்திரமடைந்த 25 பெண்கள் நேற்று ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதியம்புத்தூர்:
புதியம்புத்தூர்-ஓட்டப்பிடாரம் ரோட்டில் சோனியா நகர் தெருவில் பொது பாதையை தனிநபர் அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தத் தெருவின் மேல் பகுதியில் உள்ளவர்கள் வேறு பாதையில் சுற்றி வந்து தங்கள் வீடுகளுக்கு சென்று வந்தனர். அடைக்கப்பட்ட பொது பாதையின் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே ஆத்திரமடைந்த 25 பெண்கள் நேற்று ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். பாதை ஆக்கிரமிப்பு சம்பந்தப்பட்ட மனுவை தாலுகா அலுவலகத்தில் கொடுத்தனர். இதனை அடுத்து தாசில்தார் பொறுப்பு, பிரபு போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அடைக்கப்பட்ட பாதை நிலவியல் பாதை என்பதை அறிந்து பாதையை அகற்ற உத்தரவிட்டார்
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் சிவபாலன் சம்பந்தப் பட்டவர்களிடம் பேசி அடைக்கப்பட்ட பாதை அகற்றப்பட்டது. இப் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செய லாளர் தட்சிணா மூர்த்தி தலைமையில் நடந்தது. பேச்சு வார்த்தை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கோரிக்கைகளை பாடல்களாக பாடி கும்மியடித்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாத கடைசியில் அதன் உரிமம் முடிவடைவதாகவும், அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 3 வது நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில், காத்திருப்புப் போராட்டத்தில், கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை பாடல்களாக பாடி கும்மியடித்தனர்.
இது குறித்து அனுப்பட்டி பொதுமக்கள் கூறியதாவது: பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இரும்பு உருக்காலையின் உரிமத்தை ரத்து செய்து ஆலையை மூட வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.பல்வேறு போராட்டங்களில் தொட ர்ந்து ஈடுபடஉள்ளோம் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- அபிஷேகம் நடை பெறுவதால் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தீட்சிதர்கள் கூறியதாக தெரிகிறது.
- ஜெயசீலா, அபிஷேகம் நடந்தாலும் பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்
கடலூர்:
சிதம்பரம் அருேக புவனகிரி பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலா (வயது 27). இவர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது திருச்சிற்றம்பலம் வாயில் மூடப்பட்டிருந்தது. இதை யடுத்து வாயிலை திறக்கச் சொல்லி ஜெயசீலா அங்கிருந்த தீட்சிதர்களிடம் கூறியுள்ளார். ஆனால், உள்ளே அபிஷேகம் நடை பெறுவதால் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தீட்சிதர்கள் கூறியதாக தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஜெயசீலா, அபிஷேகம் நடந்தாலும் பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோஷமிட்டு போராட்டம் நடத்தியுள்ளார். இது குறித்து தகவலறிந்த துணை சுப்பிரண்டு ரகுபதி, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் விரைந்து வந்து ஜெயசீலாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் தாங்கள் நினைப்பதை எங்களுக்கு புகார் மனுவாக கொடுங்கள்.
இது குறித்து துறை அதிகாரிகளுக்கு நாங்கள் அனுப்பி, இப்பிரச்னைக்கு தீர்வு காண்கிறோம் என்று கூறினர். இதையேற்ற ஜெயசீலா அங்கிருந்து போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.அதில் உள்ளதாவது:-
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் கோவிலில் தினசரி ஒரு பிரச்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கே பணி புரியும் தீட்சதர்கள் பணம் பெற்றுக் கொண்டு கனகசபையின் மேல் பொதுமக்களை ஏற்றுகிறார்கள். பணம் தராதவர்களை அவமானப்படுத்தி வெளியில் அனுப்புகிறார்கள். இது தினசரி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக இந்து அறநிலைத்துறையின் சார்பில் தினசரி ஒரு அதிகாரி காலை முதல் மாலை வரை கோவிலில் பொதுமக்கள் ஏறுவதற்கு கண்காணிப்புக்கு அதி காரிகள் நியமிக்கப்பட் டுள்ளனர். துறையின் சார்பில் அதிகாரிகள் வருவது இல்லை. கொரோனா காலத்திற்கு முன்பிருந்த நடைமுறைபடி பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண்பதாக கூறி ஜெயசீலாவை அனுப்பிவைத்தனர். இதனால் நடராஜர் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ராயபுரம்:
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரன் மக்களிடம் வாக்குகளை வாங்குவதற்காக இருபது ரூபாய் நோட்டை டோக்கனாக கொடுத்து ஒரு வாக்குக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்குவதாக உறுதி அளித்ததாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் தங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்ற வில்லை என்றும் சாலை வசதி, கழிவு நீர், குடிநீர் வசதி என எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தராமல் தினம் தினம் அவதிப்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
வெற்றி பெற்ற பின்பு இதுவரை தொகுதி பக்கம் வந்து பார்க்காமல் மக்களை ஏமாற்றியது போல வரும் பாராளு மன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளில் இதே போன்று மக்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டு தண்டையார்பேட்டையில் உள்ள தினகரனின் ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர்.
ஆனால் அலுவலகம் பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்ததால் ஆத்திரமடைந்த மக்கள் 20 ரூபாய் நோட்டை கையில் வைத்துக் கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து தங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் டோக்கன் வேண்டாம் என்று இருபது ரூபாய் நோட்டை அலுவலகத்திற்குள் தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்றத் தேர்தலில் தினகரனின் சுயரூபத்தை தொகுதி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பவர்களுக்கு தாங்கள் வாக்களிக்கப் போவதாக கூறினர்.
தண்டையார்பேட்டையில் திடீரென்று பெண்கள் ஒன்று கூடி ஆர்.கே.நகர் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #ttvdinakaran #rknagar
மதுரை அவனியாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது வரை அவனியாபுரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்டு வருவதாக அந்தப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
அவனியாபுரம் அருகில் 60-வது வார்டுக்கு உட்பட்ட அயன்பாப்பாகுடி, அய்யனார் கோவில் பகுதிகளில் அடிப்படை வசதிகளும் சரிவர இல்லை.
குடிநீர், சாக்கடை, தெரு விளக்கு, மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை கேட்டு அந்தப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த பலனும் இல்லை.
சாக்கடை வசதி செய்யப்படாததால் அடிக்கடி கழிவுநீர் ரோடு, தெருக்களில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.இதனால் அந்தப்பகுதியில் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றித் தரக்கோரி இன்று அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் அவனியாபுரம் பைபாஸ் ரோட்டில் திரண்டனர். அவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால்அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், ஆண்டவர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின் மறியல் கைவிடப்பட்டது. #tamilnews
விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது முடப்புளி கிராமம். இங்கு 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதி பொதுமக்களின் வசதிக்காக முடப்புளி ஊராட்சி சார்பில் ஆழ்துளை மோட்டாருடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
கடந்த 6 மாதத்துக்கு முன்பு அந்த ஆழ்துளை மோட்டார் பழுதானது. இதனால் புதிய ஆழ்துளை மோட்டார் அமைக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குடிநீருக்காக அந்த பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். அவர்கள் அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் அவலநிலை ஏற்பட்டது.
கடந்த 15-ந் தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில் இது பற்றி புகார் மனு கொடுக்க பொதுமக்கள் முடிவு செய்து சென்றனர். ஆனால் கூட்டம் முடிந்து விட்டது என்று அதிகாரிகள் கூறினார்கள். அதனால் அவர்களால் மனு கொடுக்க முடியவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் உங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அப்போது அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து வந்து விட்டனர்.
ஆனால் இதுவரை குடிநீர் பிரச்சனை தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் முடப்புளி கிராம மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.
இதையறிந்த ஊராட்சி செயலாளர் மற்றும் அதிகாரிகள் இன்று காலை திடீரென்று முடப்புளி கிராமத்துக்கு வந்தனர். அவர்கள் பழுதான பழைய ஆழ்துளை மோட்டாரை அகற்றி விட்டு அதற்குப்பதில் வேறு ஒரு பழைய மோட்டாரை பொருத்த முயன்றனர்.
தகவல் அறிந்த அந்த பகுதி பெண்கள் உள்பட பொதுமக்கள் பா.ம.க. இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அந்த இடத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் மோட்டார் பொருத்தும் பணியை தடுத்தனர். அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த இடத்தில் பழைய மோட்டாரை பொருத்தாமல் புதிய மோட்டார்தான் பொருத்த வேண்டும் என்று கோரி கோஷம் எழுப்பினர். இதையடுத்து பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய மோட்டார் அமைக்கப்படும் என உறுதி அளித்தனர். அதற்கு இன்றுக்குள் புதிய மோட்டார் அமைக்க வேண்டும். இல்லையென்றால் நாளை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது மங்களூர். இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 4 நீர்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் குடிநீர் தொட்டிகளுக்கு நீர் ஏற்றும் மின் மோட்டார் பழுதடைந்தது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு கடந்த 1 மாத காலமாக சீரானமுறையில் குடிநீர் வழங்கப்படவில்லை. கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து ஊர் பொதுமக்கள் பழுதான மின்மோட்டாரை சீர் செய்யக்கோரி மங்களூர் ஊராட்சி செயலாளருக்கும், வட்டார வளர்ச்சி அதிகாரிக்கும் மனுகொடுத்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இதையடுத்து குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் மங்களூர் பஸ்நிலையம் அருகே காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிறுபாக்கம் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்றனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பழுதான மின்மோட்டார்களை சரிசெய்து விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சீர்காழி:
சீசீர்காழி ஈசானியத்தெருவில் நகர ஆரம்ப சுகாதாரநிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கும், சிகிச்சைப்பெறவும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த கடந்த 25 நாட்களுக்கு மேலாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும், மருத்துவ பரிசோதனைகளுக்கு வரும் கர்ப்பிணி பெண்களும் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் மருத்துவர் இல்லாமல் கடந்த 20நாட்களுக்கு மேலாக அலைக்கழிப்பு செய்வதாலும், சுகர் மாத்திரை உள்ளிட்ட தேவையான மாத்திரைகள் கடந்த 6மாதமாக இருப்பு இல்லாததாலும் ஆவேசமடைந்து மருத்துவமனை முன்பு திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை பணியிலிருந்த மருத்துவ செவிலியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.