search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    வேப்பம்பட்டில் மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்

    வேப்பம்பட்டில் பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி மதுபான கடை திறக்கப்பட்ட சம்பவத்தையடுத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முதல் புதிதாக அரசு மதுபான கடை திறக்கப்பட்டு உள்ளது.

    இந்த மதுக்கடைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே இப்பகுதியில் மதுக்கடை திறக்க வேண்டாம் என்று வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர், டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவு வரை கோரிக்கை மனு அளித்து இருந்தனர்.

    இந்தநிலையில் பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி மதுபான கடை திறக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மதுக்கடையை மூட வலியுறுத்தியும் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பதாகைகளுடன் மறியலில் ஈடுபட அங்கு குவிந்தனர்.

    தகவல் அறிந்ததும் உதவி கமிஷனர் சதாசிவம், இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் செவ்வாப்பேட்டை போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் அங்கு மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
    Next Story
    ×