search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pills"

    • மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.
    • மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை நகராட்சி, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை தாங்கி மாணவிகளுக்கு மாத்திரைகளை கொடுத்து தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுடைய குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுடைய மகளிருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. விடுபட்டுள்ள குழந்தைகளுக்கு வரும் 24-ந் தேதி வழங்கப்பட உள்ளது. 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும் (200 மி.கி.) மற்றும் 2 முதல் 19 வயது உள்ள குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள மகளிருக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா, சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் டாக்டர் ராம்கணேஷ் (புதுக்கோட்டை), டாக்டர் நமச்சிவாயம் (அறந்தாங்கி), தலைமையாசிரியர் சுசரிகா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆங்கில, தமிழ் படிப்பு திறன்களை ஒவ்வொரு மாணவரையும் வாசிக்க சொல்லி கேட்டறிந்தார்.
    • ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் போதுமான இருப்பு உள்ளதா?

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தென்பாதி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா எனவும், மருந்து, மாத்திரைகள் போதுமான இருப்பு உள்ளனவா எனவும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு வருகிறார்களா எனவும, பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கலந்துரையாடி சரியான, முறையான சிகிச்சை வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

    பின்னர், வைத்தீஸ்வரன்கோயில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2 மணி நேரம் அங்கேயே இருந்து பயிலும் மாணவர்களிடம் ஆங்கில படிப்பு திறனையும், மற்றும் தமிழ் படிப்புத் திறனையும் வாசிக்க சொல்லி ஒவ்வொரு மாணவரையும் கேட்டறிந்தார்.

    பின்னர், மாணவர்களுக்கு சமைக்கப்படும் உணவு பொருட்களின் தரத்தினை நேரில் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொ) பாபு, சீர்காழி வருவாய் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    • சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து அவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்து, மாத்திரைகள் குறித்து விசாரித்தார்.
    • முடிந்தவரை விரைவில் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள நம்பிக்கை மனநல காப்பகத்தில் கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.

    மனநலம் பாதிக்கப்பட்டு காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்த்து அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு, மருந்து, மாத்திரைகள் குறித்து விசாரித்தார்.

    மேலும், மனநல மருத்துவர் வருகை, மனநல மருத்துவ சிகிச்சை, காப்பகத்தில் பராமரி க்கப்படும் பதிவேடுகள் அனைத்தையும் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, குடிநீர், தங்குமிடம், சமையல் செய்யும் இடம், கழிவறைகள் ஆகியவற்றை பார்த்து சுகாதாரம் குறித்து அறிவுரை வழங்கினார்.

    மேலும், நீண்ட நாட்களாக தங்கி இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மனநல மருத்துவரின் ஆலோசனை பெற்று முடிந்தவரை விரைவில் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

    அதற்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் கூறினார்.

    மேலும், காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன், சமூக பணியாளர் சக்தி பிரியா, செவிலியர் சுதா, பயிற்சி அளிக்கும் வள்ளி, ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர்களிடம் இவர்களை விரைவில் குணமாக்கும் விதம்நம்மிடம் தான் உள்ளது என்பதை நினை வில் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் கூறுகையில்:-

    கலெக்டர் நேரில் வந்து காப்பகத்தை பார்வையிட்டு எங்களுடன் கலந்து பேசியது, நாங்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரை, ஆலோசனைகள் வழங்கியது எங்களது பணிகளை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என உத்வேகம் அளிக்கிறது என்றார்.

    ஆய்வின்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, தாசில்தார் மலர்க்கொடி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ரத்த சோகை தடுப்பு மற்றும் குடற்புழுவினால் உண்டாகும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியன தடுக்கப்படுகிறது.
    • ஆரோக்கியமான சமுதாயம் உருவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் விழா நடைபெற்றது. பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி தலைமை வகித்தார்.

    இதில் திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெகதீஷ் குமார் கலந்துகொண்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், தேசிய குடற்புழு நீக்க நாள் நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள சுமார் 5.7 லட்சம் குழந்தைகள் மற்றும் 20 - 30 வயது உள்ள 2.4 லட்சம் பெண்களுக்கு (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் தவிர) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு மற்றும் பெண்களுக்கு 16-9-2022 அன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ரத்த சோகை தடுப்பு மற்றும் குடற்புழுவினால் உண்டாகும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியன தடுக்கப்பட்டு ஆரோக்கியமான சமுதாயம் உருவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்ததார்.நிகழ்ச்சியில் மாவட்ட தாய் சேய் நல அலுவலர் புனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடலூரில் பரபரப்பு மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவமனையில் அனுமதி.
    • சூர்யா மற்றும் அவரது நண்பர் 2 பேரும் சத்யா வீட்டுக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

     கடலூர்:

    கடலூர் குண்டு உப்பலவாடியை சேர்ந்தவர் சத்யா (வயது 25). சம்பவத்தன்று அந்த பகுதியில் சைக்கிளில் சத்யா சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் சத்யாவை வழிமறித்து மொபைல் எண்ணை கேட்டார். அப்போது சத்யா மொபைல் நம்பர் தர மறுத்ததால் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த சத்யா தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சத்யாவின் தாய் சூர்யாவின் மனைவியிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதனை அறிந்த சூர்யா மற்றும் அவரது நண்பர் 2 பேரும் சத்யா வீட்டுக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட சத்யா மாத்திரை சாப்பிட்டு விட்டதால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் சூர்யா, காத்தமுத்து என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மருந்தின் தன்மையை பொறுத்தே டாக்டர்கள் சில மருந்துகளை சாப்பாட்டிற்கு முன்பும், சில மாத்திரைகளை சாப்பிட்டிற்கு பின்பு சாப்பிடவும் அறிவுறுத்துகின்றனர்.
    நாம் எடுத்து கொள்ளும் மருந்துகளை நமது உடல் ஏற்று கொள்வதிலும், அம்மருந்துகளை ரத்தத்தில் கலக்க செய்வதிலும் நமது உணவு பெரும்பங்கு வகிக்கின்றன. மருந்தின் தன்மையை பொறுத்தே டாக்டர்கள் சில மருந்துகளை சாப்பாட்டிற்கு முன்பும், சில மாத்திரைகளை சாப்பிட்டிற்கு பின்பு சாப்பிடவும் அறிவுறுத்துகின்றனர்.

    சில மருந்துகளை நாம் உண்டதும் அவை நமது வயிற்றில் அமிலத்தை அதிகம் சுரக்கச்செய்து வயிற்றில் பிரச்னை, நெஞ்செரிச்சல் போன்றவற்றை உண்டாக்குகின்றன. சில மருந்துகள் வாந்தி உணர்வையும் ஏற்படுத்துகின்றன. இம்மாதிரி மருந்துகள் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிடவே டாக்டர்களால் அறிவுறுத்தப்படுகிறது.

    இதுபோல மாத்திரைகளை பெரும்பாலும் வெதுவெதுப்பான நீரை அருந்தி மட்டுமே உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. காரணம் பால், தேநீர், காப்பி போன்றவை சில மாத்திரைகளோடு ரசாயன மாற்றம் அடைத்து உடலுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். சில மருந்துகள் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சல், வாந்தி உணர்வு போன்ற பக்கவிளைவுகளை தராது என்னும் நிலையில் அவை சாப்பாட்டிற்கு முன்பு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
    சீர்காழியில் தேவையான மாத்திரைகள் இல்லாததால் ஆரம்ப சுகாதார நிலையத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    சீர்காழி:

    சீசீர்காழி ஈசானியத்தெருவில் நகர ஆரம்ப சுகாதாரநிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கும், சிகிச்சைப்பெறவும் வந்து செல்கின்றனர். 

    இந்நிலையில் கடந்த கடந்த 25 நாட்களுக்கு மேலாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும், மருத்துவ பரிசோதனைகளுக்கு வரும் கர்ப்பிணி பெண்களும் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் மருத்துவர் இல்லாமல் கடந்த 20நாட்களுக்கு மேலாக அலைக்கழிப்பு செய்வதாலும், சுகர் மாத்திரை உள்ளிட்ட தேவையான மாத்திரைகள் கடந்த 6மாதமாக இருப்பு இல்லாததாலும் ஆவேசமடைந்து மருத்துவமனை முன்பு திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர். 

    முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை பணியிலிருந்த மருத்துவ செவிலியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×