என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "tablet"
- இந்த டேப்லெட் 8300 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
- இந்த டேப்லெட் இருவித நிறங்களில் கிடைக்கிறது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டேப்லெட்- ரியல்மி பேட் 2 லைட் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 10.5 இன்ச் 2K LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. மெல்லிய டிசைன் மற்றும் வீகன் லெதர் ஃபினிஷ் கொண்ட புது ரியல்மி டேப் 8300 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டேப்லெட்-இல் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி ஆடியோ, குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்படுகிறது.
கனெக்டிவிட்டிக்கு வைபை, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் ஸ்பேஸ் கிரே, நெபுளா பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- மே மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- ஹாட்ஸ்பாட் மூலம் ஒரே க்ளிக்-இல் கனெக்ட் செய்து கொள்ளலாம்.
சியோமி நிறுவனம் தனது ரெட்மி பேட் ப்ரோ 5ஜி வெர்ஷனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக ரெட்மி பேட் ப்ரோ வைபை வெர்ஷன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பிறகு மே மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த வரிசையில், புதிய டேப்லெட்-இன் 5ஜி மாடல் அறிமுகமாக இருக்கிறது. புதிய வெர்ஷன் வெளியீடு குறித்து சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் அறிவித்தார். இதோடு, புதிய டேப்லெட் கொண்டு சியோமி மற்றும் ரெட்மி போன் பயன்படுத்துவோர் அவற்றின் ஹாட்ஸ்பாட் மூலம் ஒரே க்ளிக்-இல் கனெக்ட் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள டீசர்களில் ஸ்டைலஸ் மற்றும் கீபோர்டு உடன் பாதுகாப்பு கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. 5ஜி சப்போர்ட் தவிர இந்த டேப்லெட்-இன் டிசைன், இதர அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது.
ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த டேப்லெட் ரெட்மி K70 அல்ட்ரா மாடலுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
- ஆப்பிள் அந்த விளம்பர வீடியோவுக்கு மன்னிப்பு கோரியது.
- கேலக்ஸி டேப் மாடலுக்கு விளம்பரமாக அமைந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தான் மேம்பட்ட ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்தது. மேலும், புதிய ஐபேட் ப்ரோ மாடலுக்கான விளம்பர வீடியோ ஒன்றை ஆப்பிள் வெளியிட்டது.
இந்த வீடியோவில் கணினிகள், லேப்டாப்கள், பெயிண்ட், இசை கருவிகள் என கலை சார்ந்த பொருட்கள் அனைத்தையும் அழகாக அடுக்கி வைத்து, அவற்றை ராட்சத நசுக்கு இயந்திரம் கொண்டு நசுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விளம்பர வீடியோவுக்கு பலத்தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஆப்பிள் அந்த விளம்பர வீடியோவுக்கு மன்னிப்பு கோரியது.
ஐபேட் ப்ரோ மாடலுக்கான ஆப்பிள் விளம்பர வீடியோ தொடர்பான சர்ச்சை சற்று ஓய்ந்துள்ளது. இந்த நிலையில், சாம்சங் நிறுவனம் ஐபேட் ப்ரோ விளம்பர விவகாரத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ஆப்பிள் வெளியிட்ட வீடியோவுக்கு பதில் அளிக்கும் வகையிலும், கேலக்ஸி டேப் மாடலுக்கு விளம்பரமாகவும் அமைந்துள்ளது.
சாம்சங் தற்போது வெளியிட்டுள்ள விளம்பர வீடியோவில், கீழே உடைந்து இருக்கும் ஏராளமான பொருட்களில் பெண் ஒருவர் இசைக்கருவியை எடுத்து வந்து இருக்கையில் அமர்கிறார். பிறகு அருகில் உள்ள டேப் ஒன்றில் இசைக்கருவியை இயக்கும் குறிப்புகளை பார்த்துக் கொண்டே இசைக்கருவியை வாசிக்க ஆரம்பிக்கிறார்.
வீடியோவில் அந்த பெண் பயன்படுத்தும் டேப்லெட் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் மாடல் ஆகும். இந்த வீடியோ முடிவில் கிரியேடிவிட்டியை நசுக்கிவிட முடியாது (creativity can never be crushed) எனும் வாசகமும் இடம்பெறுகிறது. இத்துடன் கேலக்ஸி டேப் S9 அல்ட்ரா மாடலும் காண்பிக்கப்படுகிறது. சாம்சங் வெளியிட்ட புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
- ஐபேட் ப்ரோ மாடலுக்காக ஆப்பிள் நிறுவனம் விளம்பர வீடியோ வெளியிட்டது.
- விளம்பர வீடியோவுக்கு ஆன்லைனில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மாடல்களை சமீபத்தில் அப்டேட் செய்தது. புதிய ஐபேட் ப்ரோ மாடலில் OLED டிஸ்ப்ளே, புதிய 13 இன்ச், M4 சிப்செட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஐபேட் ப்ரோ மாடலுக்காக ஆப்பிள் நிறுவனம் விளம்பர வீடியோ வெளியிட்டது.
விளம்பர வீடியோவின் படி மிகப்பெரிய நசுக்கு இயந்திரம் ஒன்று இசை வாத்தியங்கள், கணினிகள், ஆர்கேட் இயந்திரங்கள், பெயிண்ட், சிற்பங்கள், கேமராக்கள் மற்றும் ஏராளமான பொருட்களை நசுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவில் நசுக்கப்படும் பொருட்கள் அனைத்தும் புதிய ஐபேட் ப்ரோ என்று ஆப்பிள் நிறுவனம் வீடியோ மூலம் வெளிப்படுத்த முயற்சிக்கிறது.
ஆப்பிள் வெளியிட்டுள்ள ஐபேட் ப்ரோ விளம்பர வீடியோவுக்கு பலரும் ஆன்லைனில் எதிர்ப்பு தெரிவித்தனர். பலரும் இந்த வீடியோ மனித முயற்சி மற்றும் பயனுள்ள கருவிகள் அழிக்கப்படுவது, மோசமான விளம்பரமாக அமைந்துள்ளது என கமென்ட் செய்து வருகின்றனர். வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ஆப்பிள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான அறிக்கையில், "ஆப்பிள் நிறுவனத்தில் எங்களது டி.என்.ஏ.-வில் கிரியேட்டிவிட்டி உள்ளது. இதன் மூலம் சாதனங்களை அழகாக வடிவமைத்து, உலகளவில் கிரியேட்டர்களை ஊக்கப்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எங்களின் குறிக்கோள் பயனர்கள் தங்களது கற்பனை மற்றும் யோசனைகளை ஐபேட் மூலம் வெளிப்படுத்த ஏராளமான வழிகளை ஏற்படுத்தி கொடுப்பது ஆகும். இந்த வீடியோவில் எங்களது மார்க் தவரிவிட்டது, மன்னித்துவிடுங்கள்," என்று தெரிவித்துள்ளது.
- மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் சப்போர்ட் உடன் கிடைக்கிறது.
- ஐபேட் ப்ரோ மாடல் முற்றிலும் புதிய M4 சிப்செட் கொண்டிருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்களை அப்டேட் செய்து புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி புதிய ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்கள் 11 இன்ச் மற்றும் 13 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது.
புதிய ஐபேட் ஏர் மாடல் ஆப்பிள் நிறுவனத்தின் M2 சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த பிராசஸர் ஏ.ஐ. சார்ந்த அம்சங்களை இயக்குவதற்கு ஏற்ற திறன் கொண்டிருக்கிறது. புதிய ஐபேட் ஏர் மாடலுடன் மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் சப்போர்ட் உடன் கிடைக்கிறது.
நான்கு வித நிறங்களில் கிடைக்கும் புதிய ஐபேட் ஏர் மாடல் குறைந்தபட்சம் 128 ஜி.பி. மெமரியுடன் கிடைக்கின்றன. புதிய ஐபேட் ஏர் மாடல்கள் ஐந்துவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் அதிகபட்சம் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 12MP கேமரா, டச் ஐ.டி., வைபை 6E போன்ற வசதிகள் உள்ளன.
ஐபேட் ப்ரோ மாடல் முற்றிலும் புதிய M4 சிப்செட் கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் ப்ரோ உள்ளிட்ட சாதனங்களையும் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச வெளியீட்டை ஒட்டி புதிய சாதனங்களின் இந்திய விலையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஐபேட் ஏர் 2024 11 இன்ச் வைபை 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 900
ஐபேட் ஏர் 2024 11 இன்ச் வைபை+செல்லுலார் 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 990
ஐபேட் ஏர் 2024 13 இன்ச் வைபை 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 900
ஐபேட் ஏர் 2024 13 இன்ச் வைபை+செல்லுலார் 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 94 ஆயிரத்து 900
புதிய ஐபேட் ஏர் (2024) மாடல் புளூ, பர்பில், ஸ்பேஸ் கிரே மற்றும் ஸ்டார்லைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், விற்பனை மே 15 ஆம் தேதி துவங்குகிறது.
ஐபேட் ப்ரோ 11 இன்ச் வைபை 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 99 ஆயிரத்து 900
ஐபேட் ப்ரோ 11 இன்ச் வைபை+செல்லுலார் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900
ஐபேட் ப்ரோ 13 இன்ச் வைபை 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900
ஐபேட் ப்ரோ 13 இன்ச் வைபை+செல்லுலார் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 900
ஐபேட் ப்ரோ மாடல் சில்வர் மற்றும் ஸ்பேஸ் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், விற்பனை மே 15 ஆம் தேதி துவங்குகிறது.
ஆப்பிள் பென்சில் ப்ரோ விலை ரூ. 11 ஆயிரத்து 900
11 இன்ச் மேஜிக் கீபோர்டு விலை ரூ. 29 ஆயிரத்து 900
13 இன்ச் மேஜிக் கீபோர்டு விலை ரூ. 33 ஆயிரத்து 900
- புதிய ஐபேட் ப்ரோ மாடல் இருவித அளவுகளில் கிடைக்கிறது.
- ஐபேட் ப்ரோவுடன் மேஜிக் கீபோர்டு அறிமுகம்.
முற்றிலும் புதிய ஐபேட் ஏர் மாடல்களை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஐபேட் ப்ரோ மாடல் மூலம் ஆப்பிள் முதல்முறையாக OLED டிஸ்ப்ளேக்களை வழங்கியுள்ளது. புதிய ஐபேட் ப்ரோ மாடல் 11 இன்ச் மற்றும் 13 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கிறது.
புதிய ஐபேட் ப்ரோ மாடல் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட புதிய M4 சிப்செட் கொண்டிருக்கிறது. இது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய பிராசஸர் ஆகும். இது முந்தைய பிராசஸர்களை விட அதிவேக செயல்திறன் வழங்கும் திறன் கொண்டுள்ளது.
மென்பொருள் சார்ந்த எடிட்டிங் அம்சங்களை கொண்டிருக்கும் புதிய ஐபேட் ப்ரோ, மேம்பட்ட ஆடியோ எடிட்டிங் வசதி கொண்டுள்ளது. இத்துடன் தலைசிறந்த கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது. இத்துடன் கேமரா சென்சார் லேண்ட்ஸ்கேப் பக்கமாக மாற்றப்பட்டு இருக்கிறது.
புதிய ஐபேட் ப்ரோவுடன் மேஜிக் கீபோர்டும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேஜிக் கீபோர்டு மாடல் புதிய ஐபேட் ப்ரோவுடன் ஒற்றுப்போகும் வகையில் இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் முற்றிலும் புதிய ஆப்பிள் பென்சில் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
முற்றிலும் புதிய ஆப்பிள் பென்சில் - ஆப்பிள் பென்சில் ப்ரோ என அழைக்கப்படுகிறது. இந்த சாதனம் ஏராளமான புதிய வசதிகளை கொண்டிருக்கிறது. மேம்பட்ட ஐபேட் ப்ரோ 256 ஜி.பி., 512 ஜி.பி., 1 டி.பி. மற்றும் 2 டி.பி. என நான்குவித மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- ஐபேட் ஏர் மாடல் இரண்டு அளவுகளில் கிடைக்கிறது.
- ஐபேட் ஏர் அதிகபட்சம் 1 டி.பி. மெமரி கொண்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது லெட் லூஸ் (Let Loose) நிகழ்ச்சியில் முற்றிலும் புதிய ஐபேட் ஏர் மாடல்களை அறிமுகம் செய்தது. ஆப்பிள் வரலாற்றில் முதல்முறையாக ஐபேட் ஏர் மாடல் 11 இன்ச் மற்றும் 13 இன்ச் என இருவித அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஐபேட் ஏர் மாடல் ஆப்பிள் நிறுவனத்தின் M2 சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த பிராசஸர் ஏ.ஐ. சார்ந்த அம்சங்களை இயக்குவதற்கு ஏற்ற திறன் கொண்டிருக்கிறது. புதிய ஐபேட் ஏர் மாடல் மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் சப்போர்ட் உடன் கிடைக்கிறது.
நான்கு வித நிறங்களில் கிடைக்கும் புதிய ஐபேட் ஏர் மாடல் குறைந்தபட்சம் 128 ஜி.பி. மெமரியுடன் கிடைக்கின்றன. புதிய ஐபேட் ஏர் மாடல்கள் ஐந்துவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் அதிகபட்சம் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 12MP கேமரா, டச் ஐ.டி., வைபை 6E போன்ற வசதிகள் உள்ளன.
- ரெட்மி பேட் SE 10 வாட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
- 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
சியோமி ஸ்மார்ட் லிவிங் நிகழ்ச்சியில் அந்நிறுவனம் ரெட்மி பேட் SE மாடலை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாடலில் 11 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. வீடியோ கால் மேற்கொள்ள 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டிக்கு வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. 8000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி பேட் SE 10 வாட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இத்துடன் டால்பி அட்மோஸ் வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் ரெட்மி பேட் SE மாடலின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த டேப்லெட் கிராபைட் கிரே மற்றும் லாவெண்டர் பர்பில் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி பெறலாம். இதன் விற்பனை ஏப்ரல் 24 ஆம் தேதி துவங்குகிறது.
- புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி பேட் SE மாடல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு செய்யப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி இந்தியாவில் ஸ்மார்ட் லிவிங் 2024 நிகழ்வை அறிவித்துள்ள சியோமி, அதில் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
புது சாதனங்களில் ஒன்று டேப்லெட் மாடலாக இருக்கும் என்று கூறப்பட்டது. தற்போது இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், சியோமி நிறுவனம் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. டீசரில் ரெட்மி பேட் SE மாடல் அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது. இதில் டேப்லெட் மட்டுமின்றி அதன் டிசைன், நிறங்கள் மற்றும் சில அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய சந்தையில் ரெட்மி பேட் SE மாடல் கிரீன், கிரே மற்றும் லாவண்டர் என மூன்று நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கும். டிசைனை பொருத்தவரை இந்த மாடல் அதன் ஐரோப்பிய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலில் 11 இன்ச் FHD+ 1900x1200 LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது.
இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 14 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கப்படும் என்று தெரிகிறது. சர்வதேச சந்தையில் ரெட்மி பேட் SE மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரம் என துவங்குகிறது.
- இந்த டேப்லெட் மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர் கொண்டிருக்கிறது.
- ரியல்மி பேட் 2 மாடலில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி பேட் 2 வைபை மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய P1 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் இந்த டேப் அறிமுகமாகி இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ரியல்மி பேட் 2 வைபை மாடலில் 11.5 இன்ச் 2K LCD ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
7.2mm அளவில் மிக மெல்லிய மெட்டல் பாடி மற்றும் குளோயிங் ஸ்பைஸ் டிசைன் கொண்டிருக்கும் ரியல்மி பேட் 2 வைபை மாடல் 8360 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
ரியல்மி பேட் 2 வைபை அம்சங்கள்:
11.5 இன்ச் 2K 2000x1200 LCD ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர்
Arm Mali-G57 MC2 GPU
6 ஜி.பி. ரேம்
128 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யு.ஐ. 4
8MP பிரைமரி கேமரா
8MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ்
குவாட் ஸ்பீக்கர்கள்
வைபை, ப்ளூடூத் 5.3, யு.எஸ்.பி. டைப் சி
8360 எம்.ஏ.ஹெச். பேட்டரி
33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
ரியல்மி பேட் 2 வைபை மாடல் இமேஜினேஷன் கிரே மற்றும் இன்ஸ்பிரிஷேன் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- புது ஐபேட்கள் இருவித அளவுகளில் கிடைக்கும்.
- இதுவே வெளியீட்டை தாமதப்படுத்தி இருக்கிறது.
ஆப்பிள் நிருவனம் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களை மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், புது ஐபேட் மாடல்களின் வெளியீடு தாமதமாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி புதிய ஆப்பிள் டேப்லெட் மாடல்கள் மே மாத வாக்கில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து ஆப்பிள் வல்லுநரான மார்க் குர்மேன் வெளியிட்டுள்ள தகவல்களில், "ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களை மே மாத துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது."
"புது ஐபேட் ப்ரோ மாடல்களில் OLED டிஸ்ப்ளே தொழில்நுட்பம், மேஜிக் கீபோர்டு, புதிய M3 சிப்செட்கள் வழங்கப்படலாம். புதிய ஐபேட் ஏர் மாடல்கள் 11.9 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய ஐபேட் மாடல்களின் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். புது ஐபேட் ப்ரோ மாடல்களில் உள்ள OLED டிஸ்ப்ளேவை அசெம்பில் செய்ய சிக்கலான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியிருப்பதே, வெளியீட்டை தாமதப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு ஜூன் 10 ஆம் தேதி துவங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தது. இந்த நிகழ்வு ஆப்பிள் பார்க் வளாகத்தில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. ஜூன் 10 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் டெவலப்பர்கள் ஆப்பிள் குழுவினரை நேரில் சந்தித்து உரையாட சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது.
- 465 கிராம் எடையில் மிக மெல்லிய டிசைன் கொண்டுள்ளது.
லெனோவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய டேப்லெட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய லெனோவோ டேப் M11 மாடல் முன்னதாக 2024 சர்வதேச நுகர்வோர் மின்சாதன நிகழ்வில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய லெனோவோ டேப் M11 மாடல் 7.15mm அளவில், 465 கிராம் எடையில் மிக மெல்லிய டிசைன் கொண்டுள்ளது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை 11 இன்ச் 90Hz டிஸ்ப்ளே, 1920x1200 WUXGA ரெசல்யூஷன், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டி.யு.வி. ரெயின்லாந்து மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் HD சான்று பெற்றுள்ளது. இந்த டேப்லெட் மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர், மாலி G52 GPU, 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டிருக்கிறது.
லெனோவோ டேப் M11 அம்சங்கள்:
11 இன்ச் 1920x1200 WUXGA டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர்
மாலி G52 GPU
8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
13MP பிரைமரி கேமரா
8MP செல்ஃபி கேமரா
ஆண்ட்ராய்டு 13
குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி
3.5mm ஆடியோ ஜாக், வைபை, ப்ளூடூத் 5.1
7040 எம்.ஏ.ஹெச். பேட்டரி
15 வாட் சார்ஜிங் வசதி
லெனோவோ டேப் பென் மற்றும் கீபோர்டு சப்போர்ட்
லெனோவோவின் புதிய டேப் M11 மாடல் சீஃபார்ம் கிரீன் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் இந்தியா வலைதளத்தில் நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்