search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OnePlus"

    • இதன் ஃபிளாஷ் யூனிட் கேமராவின் கீழ் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு CE4 ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நார்டு CE3 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாகி இருக்கும் புதிய நார்டு CE4 இந்திய சந்தையில் ஏப்ரல் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இது தொடர்பான டீசர்களில் புதிய ஸ்மார்ட்போன் அதன் முந்தைய வெர்ஷன்களில் இருந்த டிசைனை கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் இதன் ஃபிளாஷ் யூனிட் கேமராவின் கீழ் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    இதன் மேல்புறத்தில் ஐ.ஆர். பிளாஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுவதை ஒன்பிளஸ் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் நார்டு CE4 மாடலில் 6.7 இன்ச் AMOLED ஸ்கிரீன், 50MP பிரைமரி கேமரா, 8MP லென்ஸ் மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டது.

     


    புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஒட்டி ஒன்பிளஸ் நிறுவனம் சிறப்பு போட்டியை அறிவித்து இருக்கிறது. இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோருக்கு ஒன்பிளஸ் நார்டு CE4 மற்றும் நார்டு CE4 கேஸ் பரிசாக வழங்கப்படும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. மற்ற ஒன்பிளஸ் மாடல்களை போன்றே புதிய ஸ்மார்ட்போனும் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிகிறது.

    • குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    • ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போனிற்கு ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 11R அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் விலையில் அறிமுகமான ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போன் ரூ. 3 ஆயிரம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 39 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதன் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 37 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     


    ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போனின் 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 44 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இதன் விலை ரூ. 41 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் ஒன்கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    விலை குறைப்பு ஒன்பிளஸ் மற்றும் அமேசான் இந்தியா வலைதளங்களில் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்டிக் சில்வர் மற்றும் சோனிக் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 

    • ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது.
    • இத்துடன் "It's about time," என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டது. புதிய ஸ்மார்ட்வாட்ச் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், தற்போது இதற்கான டீசர் வெளியானது. முன்னதாக ஏப்ரல் 2021 வாக்கில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது.

    புதிய ஒன்பிளஸ் வாட்ச் 2 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இதற்காக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரில் ஸ்மார்ட்வாட்ச் டயல் மற்றும் வெளிப்புற வட்ட வடிவ டிசைன் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. இத்துடன் "It's about time," என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

    ஒன்பிளஸ் வாட்ச் 2 மாடலில் ஹோம் பட்டன் மற்றும் சுழலும் கிரவுன் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் கம்யூனிட்டியிலும் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் டீசர் படத்தை பகிர்ந்து, அது என்னவாக இருக்கும் என்று தவறான பதில்களை கமென்ட் செய்ய ஒன்பிளஸ் அதன் கம்யூனிட்டியில் இருப்பவர்களிடம் தெரிவித்துள்ளது. 

    • இந்த ஸ்மார்ட்போன் 108MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு CE 3 லைட் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஒன்பிளஸ் நார்டு CE 3 லைட் ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 108MP பிரைமரி கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன.

    ரூ. 19 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் நார்டு CE 3 லைட் ஸ்மார்ட்போன் தற்போது நிரந்தர விலை குறைப்பை பெற்று இருக்கிறது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் ஒன்பிளஸ் நார்டு CE 3 லைட் ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 2 ஆயிரம் விலை குறைக்கப்பட்டு ரூ. 17 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதே போன்று ஒன்பிளஸ் நார்டு CE 3 லைட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ. 21 ஆயிரத்து 999-இல் இருந்து ரூ. 19 ஆயிரத்து 999 என குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் நார்டு CE 3 லைட் ஸ்மார்ட்போனினை அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இந்தியா வலைதளங்களில் புதிய விலையில் வாங்கிட முடியும்.

     


    அம்சங்களை பொருத்தவரை நார்டு CE 3 லைட் ஸ்மார்ட்போனில் 6.73 இன்ச் FHD+ IPS LCD டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, அதிகபட்சம் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 108MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒ.எஸ். கொண்டிருக்கும் நார்டு CE 3 லைட் மாடலுக்கு தற்போது ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    • வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
    • சாதனத்தை ஒப்படைத்து அதற்கான பணத்தை திரும்ப பெறலாம்.

    ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. மெமரி மாடலில் UFS 3.1 ரக ஸ்டோரேஜ் வழங்கியுள்ளதாக அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகத்தின் போது, இதில் UFS 4.0 ரக ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளதாக ஒன்பிளஸ் அறிவித்து இருந்தது.

    இந்த விஷயம் அம்பலமானதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனினை வாங்கியவர்கள் மற்றும் முன்பதிவு செய்தவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு ஒன்பிளஸ் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்து இருந்தது.

     


    தற்போது, ஒன்பிளஸ் 12R மாடலின் 256 ஜி.பி. மெமரி மாடலை வாங்கியவர்கள் சாதனத்தை பயன்படுத்தியதில் திருப்தி அடையவில்லை எனில், மார்ச் 16-ம் தேதிக்குள் தங்களது சாதனத்தை ஒப்படைத்து அதற்கான பணத்தை திரும்ப பெறலாம் என்று ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது. 

    • ஒன்பிளஸ் பட்ஸ் 3 மாடலில் ANC வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய பட்ஸ் 3 மாடலில் IP55 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி உள்ளது.

    ஒன்பிளஸ் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் பட்ஸ் 3 சீரிஸ் இயர்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை இயர்பட்ஸ் ஆகும்.

    கிளாஸி ஃபினிஷ் டிசைன் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் பட்ஸ் 3 இயர்பட்ஸ் 10.4mm வூஃபர், 6mm டுவீட்டர் கொண்டிருக்கிறது. இதன் மூலம் பட்ஸ் 3 அல்ட்ரா வைடு 15Hz முதல் 40KHz வரையிலான ஃபிரீக்வன்சியை வழங்குகிறது. இத்துடன் 49db வரையிலான நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் இதை கொண்டு இரு நிலைகளில் ANC வசதியை பயன்படுத்தலாம்.

    இத்துடன் LHDC 5.0 ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட், டச் கண்ட்ரோல்கள், IP55 சான்று பெற்றிருக்கிறது. இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 44 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

    ஒன்பிளஸ் பட்ஸ் 3 அம்சங்கள்:

    10.4mm பேஸ் டிரைவர், 6mm டுவீட்டர்

    AAC, SBC கோடெக்

    LHDC 5.0, ஹை-ரெஸ் ஆடியோ

    அதிகபட்சம் 1Mbps வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் ரேட்

    3 மைக்குகள்

    டச் கண்ட்ரோல் வசதி

    94ms லோ-லேடன்சி

    3 நிலைகளில் ANC வசதி

    3D சரவுன்ட் ஸ்பேஸ், டைனமிக் பேஸ் தொழில்நுட்பம்

    யு.எஸ்.பி. டைப் சி சப்போர்ட்

    பட்ஸ்- 58 எம்.ஏ.ஹெச். பேட்டரி, கேஸ்- 520 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ANC-யுடன் அதிபட்சம் 28 மணி நேர பேக்கப்

    ANC பயன்படுத்தாமல் அதிகபட்சம் 44 மணி நேர பேக்கப்

    ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி- 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 7 மணி நேர பேக்கப்

    ஒன்பிளஸ் பட்ஸ் 3 இயர்பட்ஸ் மாடல் மெட்டாலிக் கிரே மற்றும் ஸ்பிலென்டிட் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 5 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான், ஒன்பிளஸ் ஆன்லைன் மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர், தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களில் பிப்ரவரி 6-ம் தேதி துவங்குகிறது. 

    • ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போனிற்கு ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 6.78 இன்ச் 1.5K AMOLED ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனிலும் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். 14 வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கும் நான்கு ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட், ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் அலர்ட் ஸ்லைடரும் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    ஒன்பிளஸ் 12R அம்சங்கள்:

    6.82 இன்ச் 2780x1264 பிக்சல் LTPO AMOLED டிஸ்ப்ளே

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்

    அட்ரினோ 740 GPU

    8 ஜி.பி., 16 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். 14

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், இன்ஃப்ரா-ரெட் சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யு.எஸ்.பி. டைப் சி

    5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    100 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    புதிய ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் கூல் புளூ மற்றும் ஐயன் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என்றும் 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 45 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான், ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் ஆஃப்லைனில் பிப்ரவரி 6-ம் தேதி துவங்குகிறது.

    • நான்கு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் வழங்கப்படுகின்றன.
    • இந்த ஸ்மார்ட்போனில் அலர்ட் ஸ்லைடர் வழங்கப்பட்டுள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 12 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.82 இன்ச் 2K AMOLED ஸ்கிரீன், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி, IRX கேமிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். 14 கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனிற்கு நான்கு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களும், ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்கப்படும் என ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது. இந்த மாடலிலும் மூன்று நிலைகளை கொண்ட அலர்ட் ஸ்லைடர் வழங்கப்பட்டுள்ளது.

     


    ஒன்பிளஸ் 12 அம்சங்கள்:

    6.82 இன்ச் 3168x1440 பிக்சல் குவாட் HD+ கர்வ்டு AMOLED ஸ்கிரீன்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர்

    அட்ரினோ 750 GPU

    12 ஜி.பி., 16 ஜி.பி. ரேம்

    256 ஜி.பி., 512 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். 14

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS

    48MP அல்ட்ரா வைடு கேமரா

    64MP ஆம்னிவிஷன் OV64B, பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா

    4-ம் தலைமுறை ஹேசில்பிலாட் கேமரா சிஸ்டம்

    32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், இன்ஃப்ரா-ரெட் சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.4

    யு.எஸ்.பி. டைப் சி

    5400 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    100 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    50 வாட் வயர்லெஸ் சார்ஜிங்

    ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஃப்ளோவி எமரால்டு, சில்கி பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 64 ஆயிரத்து 999 என்றும் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 69 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு அமேசான், ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஏற்கனவே துவங்கிவிட்டது. விற்பனை ஜனவரி 30-ம் தேதி துவங்க இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ஏராளமான சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    • ஆன்லைன் வலைதளங்களில் விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனிற்கு சிறப்பு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 30 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் வலைதளங்களில் விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.

    தற்தோதைய விலை குறைப்பு ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜிபி. மெமரி மாடல் மற்றும் 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் என இரண்டு வேரியண்ட்களுக்கும் பொருந்தும். முன்னதாக ஒன்பிளஸ் நார்ட் 3 ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இதன் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.

     


    ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனின் 16 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. முன்னதாக இதன் விலை ரூ. 37 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனின் இரண்டு வேரியண்ட்களின் விலையும் ரூ. 4 ஆயிரம் குறைந்துள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு 3 மாடலில் 6.74 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர், மாலி G57 10-கோர் GPU, 50MP OIS பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். 13.1, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 80 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளுடூத், யு.எஸ்.பி. டைப் சி போன்ற வசதிகள் உள்ளன.

    • ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன்.
    • ஒன்பிளஸ் 12R இரண்டு நிறங்களில் கிடைக்கும்.

    ஒன்பிளஸ் நிறுவனம் ஒருவழியாக தனது ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள போஸ்டரில் ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஒன்பிளஸ் 12R மாடல் அந்நிறுவனம் ஜனவரி 4-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யவிருக்கும் ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் ஐயன் கிரே மற்றும் கூல் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் இடதுபுறத்தில் அலர்ட் ஸ்லைடர் வழங்கப்படுகிறது.

     


    சீனாவை தொடர்ந்து ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் இந்தியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்னதாக R பிராண்டிங் கொண்ட ஸ்மார்ட்போன்களை ஒன்பிளஸ் இந்தியாவில் மட்டுமே விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போன் சேன்ட் கோல்டு நிறத்தில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 8 ஜி.பி. / 16 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 100 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    ஒன்பிளஸ் 12R ல்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். 14 கொண்டிருக்கலாம். இத்துடன் 6.78 இன்ச் OLED பேனல், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    • ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • வெளியீட்டு நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், புதிய ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த மாதம் ஒன்பிளஸ் தனது பத்தாவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. அந்த வகையில், ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன்கள் இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் ஜனவரி 23-ம் தேதி அறிமுகம் செய்யும் என்று அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் இரு ஸ்மார்ட்போன்களின் வெளியீடு இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது.

     


    முதல் முறையாக R-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவை தொடர்ந்து சீனாவிலும் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த மாடலில் அதிக பிரகாசமான டிஸ்ப்ளே மற்றும் மெட்டல் ஃபிரேம் வழங்கப்படுகிறது.

    • ஒன்பிளஸ் ஆடியோ சாதனங்களுக்கு அசத்தல் சலுகைகள்.
    • ஒன் கார்டு பயனர்கள் கூடுதல் பலன்களை பெறலாம்.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனினை இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் தனது இந்திய பயனர்களுக்காக சிறப்பு கம்யூனிட்டி சேல் அறிவித்து இருக்கிறது.

    இந்த சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் பேட், ஒன்பிளஸ் 10 ப்ரோ, ஒன்பிளஸ் ஆடியோ சாதனங்கள் உள்ளிட்டவைகளுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒன்பிளஸ் வலைதளத்தில் நடைபெற்று வரும் சிறப்பு கம்யுனிட்டி சேல், டிசம்பர் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் ஒன் கார்டு பயனர்கள் கூடுதல் பலன்களை பெற முடியும்.


     

    சலுகை விவரங்கள்:

    ஒன்பிளஸ் பேட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 35 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கார்டு அல்லது ஒன் கார்டு பயனர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த மாடலின் விலை ரூ. 30 ஆயிரத்து 499 என மாறிவிடும்.

    ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி மாடலுக்கும் குறிப்பிடத்தக்க சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போனுடன் ரூ. 17 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கார்டு மற்றும் ஒன் கார்டு பயனர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ. 66 ஆயிரத்து 999 விலை கொண்ட ஒன்பிளஸ் 10 ப்ரோ தற்போது ரூ. 44 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.

    ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கார்டு அல்லது ஒன் கார்டு பயனர்கள் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலை ரூ. 3 ஆயிரம் குறைந்த விலையில் வாங்கிட முடியும். அதன்படி இந்த இயர்பட்ஸ் ரூ. 8 ஆயிரத்து 999-க்கு கிடைக்கிறது. ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 2 சீரிஸ் மற்றும் புல்லட் வயர்லெஸ் சீரிஸ் மாடல்களுக்கும் இதே போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 2 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 1,499 என மாறி இருக்கிறது.

    ×