என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    8000mAh பேட்டரியுடன் இந்தியா வரும் புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்
    X

    8000mAh பேட்டரியுடன் இந்தியா வரும் புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

    • புதிய ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போனும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும்.
    • இந்திய மாடலில் 50MP + 50MP இரட்டை பின்புற கேமராக்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்தியாவில் ஒன்பிளஸ் 15 சிரீசின் அடுத்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 15R அடுத்த மாதம் 17ஆம் தேதி அறிமுகப்படுத்துவதை ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் 16 கொண்டிருக்கும். இத்துடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP66, IP68, IP69 மற்றும் IP69K மதிப்பீடுகளுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வாழ்நாள் முழுக்க உத்தரவாதத்துடன் கிரீன் லைன் (பச்சை கோடு) பிரச்சினை ஏற்படாது என ஒன்பிளஸ் உறுதியளிக்கிறது.

    புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக் மற்றும் மிண்ட் பிரீஸ் வண்ணங்களில் வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இந்த வார இறுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஒன்பிளஸ் ஏஸ் 6T-ஐ போலவே இருக்கும் என தெரிகிறது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 மற்றும் 8000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.


    இதன் இந்திய மாடலில் 50MP + 50MP இரட்டை பின்புற கேமராக்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் சீன வெர்ஷனில் 50MP + 8MP கேமரா சென்சார்கள் இடம்பெறுகின்றன.

    இந்த ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விவரங்கள் அடுத்த வாரங்களில் வெளியிடப்படும் என்று ஒன்பிளஸ் கூறுகிறது. வழக்கம் போல், புதிய ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போனும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும். அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஒன்பிளஸ் இந்தியா ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும்.

    Next Story
    ×