என் மலர்

  புதிய கேஜெட்டுகள்

  இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2
  X

  இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்ஸ் ப்ரோ 2 இயர்பட்ஸ் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
  • புதிய பட்ஸ் ப்ரோ 2 மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

  ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் இயர்பட்ஸ் மாடல்களாக பட்ஸ் ப்ரோ சீரிஸ் இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது பட்ஸ் ப்ரோ சீரிசின் மேம்பட்ட வெர்ஷனை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ரெண்டர்களை 91மொபைல்ஸ் வெளியிட்டு உள்ளது. இதில் புதிய ஒன்பிளஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விவரங்கள் வெளியாகி உள்ளது.

  ரெண்டர்களின் படி புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட ட்வீக் செய்யப்பட்ட டிசைன் கொண்டிருக்கிறது. மேலும் இந்த இயர்பட்ஸ் ஒவல் வடிவம் கொண்டிருக்கிறது. தோற்றத்தில் புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ஆப்பிள் ஏர்பாட்ஸ் மாடலை நினைவூட்டும் வகையில் காட்சியளிக்கிறது. இதன் மேல்புறம் மேட் ஃபினிஷ், கீழ்புறம் கிளாஸி ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

  இந்த இயர்பட்ஸ் ஆலிவ் கிரீன் நிறம் கொண்டிருக்கிறது. இயர்பட்ஸ் கேசில் டைனாடியோ (Dynaudio) என்கிரேவிங் செய்யப்பட்டு உள்ளது. டைனாடியோ 1977 ஆண்டு துவங்கப்பட் டச்சு லவுட் ஸ்பீக்கர் பிராண்டு ஆகும். புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலின் டிரைவர்களை டைனாடியோ உருவாக்கி இருக்கிறதா அல்லது டியூனிங் போன்ற அம்சங்களை மட்டும் செய்திருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

  தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலில் 11mm டூயல் டிரைவர்கள், அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த வசதி மூலம் சத்தத்தை 45 டெசிபெல்கள் வரை குறைக்க முடியும். மேம்பட்ட சவுண்ட் பிக்-அப் வழங்க இயர்பட்களில் மூன்று மைக்ரோபோன்கள் வழங்கப்படலாம். இத்துடன் LHDC 4.0 கோடெக் மற்றும் ஸ்பேஷியல் சரவுண்ட் சவுண்ட் அம்சம் வழங்கப்படலாம்.

  புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல் ANC ஆன் செய்யப்பட்ட நிலையில், முழு சார்ஜ் செய்தால் ஆறு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. ANC ஆஃப் செய்தால் அதிகபட்சம் ஒன்பது மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. இதனுடன் வரும் சார்ஜிங் கேஸ் சேர்த்தால் அதிகபட்சம் 32 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கும் என கூறப்படுகிறது.

  Photo Courtesy: 91Mobiles

  Next Story
  ×