புதியம்புத்தூர் அருகே பொதுப்பாதை அடைக்கப்பட்டதை கண்டித்து பெண்கள் போராட்டம்

பொதுபாதையின் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 25 பெண்கள் நேற்று ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுப் பாதையை திறக்ககோரி ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு திரண்ட பொதுமக்கள்.
பொதுப் பாதையை திறக்ககோரி ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு திரண்ட பொதுமக்கள்.
Published on

புதியம்புத்தூர்:

புதியம்புத்தூர்-ஓட்டப்பிடாரம் ரோட்டில் சோனியா நகர் தெருவில் பொது பாதையை தனிநபர் அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தத் தெருவின் மேல் பகுதியில் உள்ளவர்கள் வேறு பாதையில் சுற்றி வந்து தங்கள் வீடுகளுக்கு சென்று வந்தனர். அடைக்கப்பட்ட பொது பாதையின் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே ஆத்திரமடைந்த 25 பெண்கள் நேற்று ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். பாதை ஆக்கிரமிப்பு சம்பந்தப்பட்ட மனுவை தாலுகா அலுவலகத்தில் கொடுத்தனர். இதனை அடுத்து தாசில்தார் பொறுப்பு, பிரபு போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அடைக்கப்பட்ட பாதை நிலவியல் பாதை என்பதை அறிந்து பாதையை அகற்ற உத்தரவிட்டார்

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் சிவபாலன் சம்பந்தப் பட்டவர்களிடம் பேசி அடைக்கப்பட்ட பாதை அகற்றப்பட்டது. இப் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செய லாளர் தட்சிணா மூர்த்தி தலைமையில் நடந்தது. பேச்சு வார்த்தை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com