என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவரின் சாதனையை பாராட்டி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பரிசு வழங்கிய காட்சி.
சர்வதேச வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற பள்ளி மாணவனுக்கு பாராட்டு
- சாதனை படைத்த மாணவர் தமிழக முதல்-அமைச்சருக்கும், மாவட்ட செயலருக்கும் தனது நன்றியினை தெரிவித்தார்.
- சிவபத்மநாதன் பொன்னாடை அணிவித்து ரொக்கப் பரிசாக ரூ. 10 ஆயிரம் வழங்கி பாராட்டினார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த குற்றாலத்தைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 13) என்கிற மாணவர் நேபாளத்தின் தலைநகர் காட்மண்டூவில் நடைபெற்ற சர்வதேச சப்ஜூனியர் பிரிவினருக்கான வில்வித்தைப் போட்டியில் கலந்துகொண்டார்.
போட்டியில் முதலிடம் சாம்பியன்சிப் வென்று தங்கப்பதக்கம் பரிசு மற்றும் பாராட்டுச் சான்று பெற்று பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரின் சாதனையைப் பாராட்டி தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க . செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் பொன்னாடை அணிவித்து ரொக்கப் பரிசாக ரூ. 10 ஆயிரம் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பள்ளி செயலர் ஐ.சி.சண்முக வேலாயுதம், தலைமை ஆசிரியர் ஆறுமுகம், பெற்றோர் ராஜேஷ்- பாக்கியலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் ராஜேஸ்வரி, பயிற்சியாளர் வைரமுத்து, குற்றாலம் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சாதனை படைத்த மாணவர் தமிழக முதல்-அமைச்சருக்கும், மா வட்ட செயலருக்கும் தனது நன்றியினை தெரிவித்தார்.






