என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chess competition"

    • ராமநாதபுரத்தில் மாநில செஸ் போட்டிக்கான தகுதி தேர்வு போட்டி நடந்தது.
    • 17-வது செஸ் போட்டியை முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நடத்தியது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில் ராமநாதபுரம் ரோட்டரி சங்க கோரல் சிட்டி இணைந்து மாநில செஸ் போட்டிக்கான தகுதி தேர்வு போட்டியாக மாவட்ட அளவிலான 17-வது செஸ் போட்டியை முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நடத்தியது.

    மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் அப்பா மெடிக்கல் சுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தேவி உலகராஜ், முன்னிலை வகித்தார். செயலாளர்- உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், ரோட்டரி சங்க கோரல் சிட்டி உதவி கவர்னர் செந்தில்குமார், தலைவர் சோமசுந்தரம், செயலாளர் ராஜேஷ், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    6 பிரிவுகளாக 5 சுற்றுகள் நடைபெற்ற இந்த போட்டிகளில் 58 பள்ளிகளில் இருந்து 415 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு சிறப்பு போட்டி நடந்தது. 5 பிரிவுகளிலும் முதல் 5 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகளும், கேடயமும் வழங்கப்பட்டது.

    ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். மாவட்ட செஸ் அசோசியேசன் செயலாளர் ரமேஷ், பொருளாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.

    • புதுவை அமலோற்பவம் பள்ளியில் நடந்த தேசிய சதுரங்க போட்டியில் தமிழக மாணவர் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார்.
    • 27 மாநிலங்களில் இருந்து பலர் பங்கேற்ற இந்த போட்டியில், தமிழகத்தில் மட்டுமே அதிகபட்சமாக 180 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அமலோற்பவம் பள்ளியில் நடந்த தேசிய சதுரங்க போட்டியில் தமிழக மாணவர் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார்.

    புதுவை அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி மாநில சதுரங்க கழகம் இணைந்து 33-வது ஆண்டு தேசிய சதுரங்க போட்டியை சதுரங்க வாகைசூடி 2022 என்ற தலைப்பில் நடத்தியது.

    வாணரப்பேட்டை அமலோற்பவம் ஆரம்ப பள்ளி கலையரங்கில் 13 வயதிற்கு உள்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கான தொடர் சதுரங்க போட்டி நடந்தது. கடந்த 11-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடந்த போட்டியில், நாடு முழுவதிலும் இருந்து 508 சிறுவர்-சிறுமிகள் பங்கேற்றனர்.

    27 மாநிலங்களில் இருந்து பலர் பங்கேற்ற இந்த போட்டியில், தமிழகத்தில் மட்டுமே அதிகபட்சமாக 180 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த தாக் ஷின் அருண் முதலிடம் பிடித்தார். டெல்லியை சேர்ந்த தாவிக் வாதவன், ராஜஸ்தான் பாரதிய யாஷ் ஆகியோர் 2-ம் இடம் பிடித்தனர்.

    பெண்கள் பிரிவில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஸ்னேகா ஹல்தர் முதலிடம் பிடித்தார். டெல்லி சச்சி ஜெயின், மேற்கு வங்கம் சபரியா கோஷ் ஆகியோர் 2-ம் இடத்தை பிடித்தனர்.

    விழாவிற்கு, சதுரங்க கழக தலைவர் சங்கர் வரவேற்றார். அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார் முன்னிலை வகித்தனர்.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினார். தேசிய சதுரங்க கழக ஆலோசகர் பரத்சிங் சவுகான், அமலோற்பவம் கல்விக்குழும தாளாளர் லூர்துசாமி, மாநில சதுரங்க கழக செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் கலந்து கொ்ண்டு மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றார்.
    • அகாடமிக் டைரக்டர் சாவித்திரி, முதல்வர் சுப்ரமணி ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.

    காங்கேயம் :

    திருப்பூர் ஏஞ்சல் பொறியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் சிவன்மலை ஜேஸீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் அஜய் ஜோ லூயிஸ் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் கலந்து கொ்ண்டு மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றார்.

    மாவட்ட அளவில் நடைபெற்ற டேக்வாண்டா போட்டியில் தனிநபர் மற்றும் குழுப்போட்டியில் 12ம் வகுப்பு மாணவர் கேசவன் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைவர் கோபால், தாளாளர் பழனிசாமி, பொருளாளர் மோகனசுந்தரம், அகாடமிக் டைரக்டர் சாவித்திரி, முதல்வர் சுப்ரமணி ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.

    • சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
    • எந்த துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றினாலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.

    தூத்துக்குடி:

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. விளை யாட்டு மேம்பாட்டு அணி யின் சார்பில் கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரி மைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி னார்.

    பின்னர் அவர் பேசு கையில், கலைஞர் நூற்றா ண்டு விழாவை ஒரு வருடம் முழுவதும் கொண்டாட வேண்டும். அவரது சாத னைகள் மற்றும் எல்லாத்து றையிலும் முத்திரை பதித்ததை நாட்டு மக்களுக்கு நினைவுப்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்ட திற்கி ணங்க வடக்கு மாவட்ட தி.மு.க. விற்குட்பட்ட எல்லா பகுதி களிலும் நலத்திட்ட உதவி களுடன் பல்வேறு நிகழ்ச்சி கள் நடை பெறுகின்றன. ஏற்கனவே விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    இதனையடுத்து சிறுவர், சிறுமிகளுக்கான சதுரங்க போட்டி நடத்தப் பட்டுள்ளது. இந்த போட்டியும் திறமைகள் அதிகம் தேவைப்படுகின்ற விளையாட்டாகும். எந்த துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றினாலும் முழு மையாக தன்னை ஈடுப டுத்திக் கொண்டு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். கல்வியும், விளையாட்டும் நமக்கு அவசியமானது என்பதை உணர்ந்து எதிர்கால தலைமுறை யின ராகிய நீங்கள் நல்ல பழக்க வழக்க ங்களுடன் எல்லாத் துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும் என்றார்.

    விழாவில் பள்ளி தாளாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமை ப்பாளரும், மாநகராட்சி மண்டலத் தலைவருமான வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்ப ழகன், துணை அமைப்பாளர் சின்னத்துரை, மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆரோ க்கிய ராபின், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் கருணா, மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் சிவகிரி விவேகா பள்ளி, வாசுதேவநல்லூர் தரணி இன்டர்நேஷனல் பள்ளி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    தென்காசி:

    இடைகால் சாம்பியன் செஸ் அகாடமி சார்பாக பள்ளி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சதுரங்க போட்டி சிவகிரி பாரத் பள்ளியில் நடைபெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    இந்த போட்டியில் சிவகிரி விவேகா பள்ளி, வாசுதேவநல்லூர் தரணி இன்டர்நேஷனல் பள்ளி, தரணி மெட்ரிகுலேஷன் பள்ளி,கண்ணா இன்டர்நேஷனல் பள்ளி , வாசுதேவநல்லூர் அகஸ்தியா பள்ளி, இடைகால் அரசினர் பள்ளி, ஏ.ஆர்.எஸ் மதார் குருகுலம் பள்ளி,ஆகிய பள்ளிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    சதுரங்க போட்டியில் கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காக சாம்பியன் செஸ் அகாடமி சார்பாக நடக்கும் போட்டியில் ஆனந்தன் பேசியதாவது:-

    அடுத்த ஆண்டுக்குள் தென்காசி மாவட்டத்தில் இருந்து கிராண்ட் மாஸ்டராக இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் குழந்தைகளை உருவாக்குவோம், அதற்கு பெற்றோர்கள் குழந்தைகளின் சிந்தனை திறன்களை வளர்க்கும் விதமான புத்தகங்கள், பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கிராமப்புற குழந்தைகள் தங்களது அடுத்த கட்ட சிந்தனை சார்ந்த போட்டிகளுக்கு தயாராகவும் , மிகவும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்றார்.

    போட்டியில் குழந்தை களும் , ஏராளமான பெற்றோர்களும் பொதுப் பிரிவில் ஆர்வமாக பங்கேற்று தங்களின் திறமையை வெளிக்காட்டி பரிசுகளை தட்டிச் சென்றனர். பள்ளி தாளாளர் டாக்டர் எஸ். எஸ். செண்பகவிநாயகம், விவேகா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் முருகேசன், ஐ.பி.எம். இந்திய தனியார் நிறுவனர் மாரிமுத்து, நடுவர்கள் பிரகாஷ்,சிவகணேஷ், மகாராஜன் உணவு பாதுகாப்பு வழங்கல், நெடுஞ்சாலை துறை போக்குவரத்து உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன், சேகர் கிராமப்புற ஆய்வாளர், சிவராமன் ஸ்ரீ குமரன் குரூப் ஆப் கம்பெனி, மருத்துவர் ரம்யா, மிரில்லா, தேவி ஆசிரியை ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போட்டியினை ஒருங்கினைப்பாளர் இசக்கி முத்து ஏற்பாடு செய்திருந்தார்.

    போட்டி நடந்த இடத்தில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான சிறு பிரசாரமும் வழங்கப்பட்டது. அத்துடன் சணல் மூலம் தயாரிக்கப்பட்ட மக்கும் பைகள் இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத முறையில் தேவிகா மகளிர் சுய உதவி குழு மூலம் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பின்பு அவை மக்களுக்கு வழங்கப்பட்டது.

    • தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க வளர்ச்சி கழகம் சார்பில் பாவூர்சத்திரத்தில் பொதிகை சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன
    • போட்டிகள் பொதுப்பிரிவு, 15,11 வயது பிரிவு, புதிய வீரர்கள் பிரிவு என 4 பிரிவுகளாக நடத்தப்பட்டன

    தென்காசி:

    தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க வளர்ச்சி கழகம் சார்பில் பாவூர்சத்திரத்தில் பொதிகை சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.போட்டிகள் பொதுப்பிரிவு, 15,11 வயது பிரிவு, புதிய வீரர்கள் பிரிவு என 4 பிரிவுகளாக நடத்தப்பட்டன. சதுரங்க கழக செயலர் வைகைகுமார் முன்னிலையில், தட்சணமாற நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன் போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டியின் நடுவர்களாக ராஜகாந்தன், அருண்குமார், வைதேகி ஆகியோர் செயல்பட்டனர்.

    15வயது மாணவர்கள் பிரிவில் தென்காசி ஆர்.சி. வீரமாமுனிவர் பள்ளி மாணவன் சுபாஷ், மாணவியர் பிரிவில் கடையம் அரசு பள்ளி மாணவி அக்ஷயா, 11வயது பிரிவில் செங்கோட்டை அரசு பள்ளி மாணவன் ஜெனோவின், மாணவிகள் பிரிவில் கல்லூரணி தேவி பள்ளி மாணவி பிரபாஷினி ஆகியோர் மாவட்ட பொதிகை சாம்பியன்களாக வெற்றி பெற்றனர்.இவர்கள் அனைவரும் பொதிகை சதுரங்க கோப்பை மாநில போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். மேலும் பொதுப்பிரிவில் அம்பை கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவன் சாம்ஜெப்ரி, புதிய வீரர்கள் பிரிவில் சுரண்டை அரசு பள்ளி மாணவன் கேசவன் முதலிடம் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுடன், பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது. 8 வயதுக்குட்பட்ட 14 வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட மூத்த சதுரங்க வீரர் பால கிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் மணிவண்ணன், சதுரங்க ஆர்வலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சதுரங்க கழக இயக்குனர் கண்ணன் செய்திருந்தார்.

    • மர்காஷியஸ் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் 372 சதுரங்க ஆட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

    நாசரேத்:

    ஒய்.எம்.சி.ஏ. சர்வதேச அமைப்பின் நிறுவனர் ஜார்ஜ் வில்லியம்ஸ் 201-வது பிறந்த நாளை முன்னிட்டு நாசரேத் ஒய்.எம். சி.ஏ. நிர்வாகம், நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் துத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி மர்காஷியஸ் பள்ளியில் நடைபெற்றது.

    நாசரேத் கனோன் ஆர்தர் மர்காஷியஸ் சபை மன்ற தலைவர் வெல்டன் ஜோசப் ஜெபம் செய்தார். தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளர் பிரேம் குமார் ராஜாசிங் போட்டியை தொடங்கி வைத்தார்.

    பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை பாதிரியார் மர்காஸிஸ் டேவிட் வெஸ்லி ஜெபம் செய்தார். நாசரேத் மர்காஷியஸ் பள்ளி தாளாளர் சுதாகர் தலைமை தாங்கினார். நாசரேத் ஓய். எம்.சி.ஏ.தலைவர் எபனேசர், துத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக செயலாளர் கற்பகவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாசரேத் ஓய்.எம்.சி.ஏ. நிர்வாக குழு உறுப்பினர் சுந்தரராஜ் வரவேற்றார். தூத்துக் குடி- நாசரேத் திருமண்டல தொடர்பு அதிகாரி ஜாண் சன், மர்காஷியஸ் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபகரன் பிரேம்குமார், நாசரேத் பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி, நகர தி.மு.க. பிரமுகர் ரவி, நாசரேத் மெர்க்கண்டைல் வங்கி கிளை உ தவி மேலாளர் தங்கபாண்டி ராஜகுமார், தொழிலதிபர் செந்தில்குமார், நகர காங்கிரஸ் பிரமுகர் கெர்சோம் கிறிஸ்டியான் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டனர். நாசரேத் ஓய்.எம்.சி.ஏ. செயலர் சாமுவேல் ராஜ் நன்றி கூறினார்.

    இதில் 70 பள்ளி, கல்லூரிகளில் இருந்து 372 சதுரங்க ஆட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாசரேத் ஓய்.எம்.சி.ஏ. நிர்வாகக் குழு உறுப்பினர்கள் புஷ்பராஜ், பர்னபாஸ் ஜெயக் குமார், ஆம்ஸ்ட்ராங் மற்றும் நிர்வாகிகளும் நாசரேத் மர்காஷியல் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    • ஹரி நந்தனா, ஜெகத் பிரபு மாநில அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொண்டனர்.
    • ஜகத் பிரபு மாநில அளவில் 2-ம் இடத்தையும், மாணவி ஹரி நந்தனா 7-ம் இடத்தையும் பிடித்தனர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவி ஹரி நந்தனா மற்றும் மாணவன் ஜெகத் பிரபு திருச்சி செஸ் அசோசியேஷன் நடத்திய மாநில அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொண்டனர். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் ஜகத் பிரபு மாநில அளவில் 2-ம் இடத்தையும், மாணவி ஹரி நந்தனா மாநில அளவில் 7-ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாசை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • தமிழக அரசு நடத்திய செஸ் போட்டியில் தென்காசி மாவட்ட அளவில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் முதலிடம் பெற்றார்.
    • 44- வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பார்வையாளராக கலந்து கொண்டு வெளிநாட்டு வீரர்களின் அணிவகுப்பில் தலைமை தாங்கி அழைத்துச் சென்றார்.

    சங்கரன்கோவில்:

    பாண்டியாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வரும் மாணவன் வசுந்தரன். இவர் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு நடத்திய செஸ் போட்டியில் தென்காசி மாவட்ட அளவில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் முதலிடம் பெற்றார்.

    பின்னர் 44- வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பார்வையாளராக கலந்து கொண்டு வெளிநாட்டு வீரர்களின் அணிவகுப்பில் தலைமை தாங்கி அழைத்துச் சென்றார். மேலும் தமிழக அரசின் ஏற்பாட்டின் படி விமானத்தில் செஸ் விளையாடினார்.இவரது சகோதரர் கார்த்தி குமார் என்பவரும் 19 வயதுக்குட்பட்ட செஸ் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    வெற்றி பெற்ற வசுந்தரனுக்கு பாண்டியாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை பராசக்தி தலைமை தாங்கினார்.ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் வரவேற்றுப் பேசினார்.ஆசிரியர்கள் மாரித் தங்கம், ஏஞ்சல் மலர் மெரினா, பெர்ஜிலின், அழகு மகேஸ்வரி, வர்மா, வீரலட்சுமி, சகாயம், ஹெலன், கவிதா, குருவம்மாள், அருணா, ஐஸ்வர்யா, கவிதா மற்றும் மாணவர்களும், பொதுமக்களும பாராட்டி பேசினர்.

    விழாவில் மாணவனுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டன. ஆசிரியர் வர்மா நன்றி கூறினார்.

    • அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்குள் செஸ் போட்டி இன்று நடந்தது.
    • போட்டியில் முதல் 3 இடங்கள் பிடிக்கும் மாணவ-மாணவிகள் அடுத்தடுத்த போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

    ஈரோடு:

    சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதையொட்டி தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவி களுக்கு இடையேயான செஸ் போட்டி நடத்த உத்தரவிடப்பட்டு இருந்தது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த போட்டியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகளுக்கு இடையே செஸ் போட்டி நடைபெறுகிறது.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்குள் செஸ் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டி ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையும், 11-12 வகுப்பு வரை என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    6 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 120-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகந்தி பார்வை யிட்டார். உடற்கல்வி ஆசிரியர்கள் உடன் இருந்தனர். போட்டியில் முதல் 3 இடங்கள் பிடிக்கும் மாணவ-மாணவிகள் அடுத்தடுத்த போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

    ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான செஸ் போட்டி கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான செஸ் போட்டி கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்றது. போட்டிக்கு கங்கை கொண்டசோழபுரம் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். 

    மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி போட்டியை பார்வையிட்டார். போட்டிகளில் நடுவர்களாக கண்ணதாசன், ஷாயின்ஷா, பாண்டியன், விஜய், ஆனந்த், கார்த்திக்ராஜன், பிரகாஷ், ராஜ், குமார், மோகன், சுப்ரமணியன், பழனிவேல் உள்பட பலர் பணியாற்றினர். 

    குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் 11,14,17,19 ஆகிய வயது பிரிவுகளில் 40 பள்ளிகளை சேர்ந்த 249 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போட்டியிட்டனர். இறுதியில் கங்கை கொண்டசோழபுரம் உடற்கல்வி ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.
    ×