செஸ் போட்டியில் சிவன்மலை ஜேஸீஸ் பள்ளி மாணவர் சாதனை

17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் கலந்து கொ்ண்டு மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றார்.அகாடமிக் டைரக்டர் சாவித்திரி, முதல்வர் சுப்ரமணி ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.
செஸ் போட்டியில் சிவன்மலை ஜேஸீஸ் பள்ளி மாணவர் சாதனை
Published on

காங்கேயம் :

திருப்பூர் ஏஞ்சல் பொறியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் சிவன்மலை ஜேஸீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் அஜய் ஜோ லூயிஸ் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் கலந்து கொ்ண்டு மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றார்.

மாவட்ட அளவில் நடைபெற்ற டேக்வாண்டா போட்டியில் தனிநபர் மற்றும் குழுப்போட்டியில் 12ம் வகுப்பு மாணவர் கேசவன் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைவர் கோபால், தாளாளர் பழனிசாமி, பொருளாளர் மோகனசுந்தரம், அகாடமிக் டைரக்டர் சாவித்திரி, முதல்வர் சுப்ரமணி ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com