search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Awareness Camp"

  • ஞானியார்குடியிருப்பில் சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணர்வு முகாம் நடந்தது.
  • முகாமில் சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

  உடன்குடி:

  தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உடன்குடி அருகே உள்ள ஞானியார்குடியிருப்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் முகாமை தொடங்கி வைத்தார்.

  முகாமில் சிறந்த கிடேரி கன்றுகள் மற்றும் சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கினர். மேலும் தற்காலிக மலட்டுத்தன்மை நீக்குதல், குடற்புழு நீக்குதல், ஆண்மை நீக்கம்செய்தல், சினைப் பரிசோதனை, கருவூட்டல் செய்தல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. முகாமில் ஊராட்சித்தலைவர் காமராஜ், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் செல்வகுமார், கால்நடை டாக்டர் வினோத் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • சனி, ஞாயிறு நாட்களில் அருகில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று திருத்தம் செய்து கொள்ளலாம்.
  • மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  மெலட்டூர்:

  அம்மாபேட்டை அருகே உள்ள உக்கடை கிராமத்தில் பாபநாசம் விவேகானந்தா கல்வி சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், பெயர் மாற்றம், திருத்தம், நீக்குதல் ஆகியவை சனி, ஞாயிறு நாட்களில் அருகில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு நேரில் சென்று திருத்தம் செய்து கொள்ள பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள் விஜயலெட்சுமி. கயல்விழி , மேரி உட்பட ஏராளமான மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

  • சுத்தம் சுகாதாரம் குறித்து விளக்கம்
  • மாணவ மாணவிகள் சந்தேகங்களை வெளிப்படுத்தினர்

  கண்ணமங்கலம்:

  கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று, விடலைப் பருவ மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது நடைபெற்றது.

  முகாமிற்கு தலைமை ஆசிரியர் அருளரசு தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை தன்னார்வலர் ரேமாண்ட், கலந்து கொண்டு " மாணவ மாணவிகளுக்கு விடலை பருவ உடல் மாற்றங்கள் ஆண் பெண் உடல் சார்ந்த பிரசனைகள் சுத்தம் சுகாதாரம் குறித்து விளக்கமளித்தார்.

  மேலும் மாணவ மாணவிகளுக்கு எடுத்து கொடுப்பான் கலந்துரையாடல் மூலம் தங்கள் சந்தேகங்களை வெளிப்படுத்தினர்.

  • ஆலோசனைகள் வழங்கப்பட்டன
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

  ஆற்காடு:

  ஆற்காடு ஒன்றியம் கிளாம்பாடி ஊராட்சியில் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

  ஊராட்சி மன்ற தலைவர் சுதா பாலாஜி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் விஜயலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் ஜெயலலிதா, கவிதா, மீனா, பரிமளா, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை வித்யாலட்சுமி வரவேற்றார்.

  சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூகப் பணியாளர் பார்த்திபன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடு மைகள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, குழந்தை திருமணம், அதனால் ஏற்படும் பாதிப்புகள், போக்சோ சட்டம், காவலன் செயலி, குழந்தைகளுக்கான அவசர உதவி எண் 1098, பெண்களுக்கான அவசர உதவி எண் 181 உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  மேலும் பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க ஊக்குவித்தல் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் சக்தி லீலா, மகளிர் குழு தலைவி மகேஸ்வரி, இளைஞரணி தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமையில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  • வள்ளியூர் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இன்றைய காலகட்டத்தில் மாணவிகள் தங்களை தாங்களே தற்காத்து கொள்வதற்கான கருத்துக்களை அறிவுரையாக கூறினார்.

  வள்ளியூர்:

  வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமையில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வணிக மேலாண்மையியல் துறை தலைவி ரஞ்சிதம் வரவேற்று பேசினார். கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் வாழ்த்துரை வழங்கினார்.

  நிகழ்ச்சியில் வள்ளியூர் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இன்றைய காலகட்டத்தில் மாணவிகள் தங்களை தாங்களே தற்காத்து கொள்வதற்கான கருத்துக்களை அறிவுரையாக கூறினார்.

  • உணவு பாதுகாப்பு துறை மற்றும் ஆண்டிபட்டி நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து உரிமை இணையவழி விண்ணப்ப மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.
  • அரசு கூறியுள்ள விதிமுறைகளை பின்பற்றி உணவுப் பொருள்களை தயார் செய்ய வேண்டும் என்று விதிமுறைகளை விளக்கி கூறினார்.

  ஆண்டிபட்டி:

  ஆண்டிபட்டியில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் ஆண்டிபட்டி நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து உரிமை இணையவழி விண்ணப்ப மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.

  ஆண்டிபட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜவகர் ஜோதிநாதன் தலைமை வகித்து விழிப்புணர்வு உரையாற்றினார். ஆண்டிபட்டி ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் பாண்டியன், செயலாளர் சுப்பு, பொருளாளர் அர்ஜுனன், துணைத் தலைவர் கர்ணா பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மிட்டாய் தயாரிப்பு உரிமையாளர்கள் சங்க தலைவர் அக்கினி குமார், செயலாளர் சரவணன், பொருளாளர் நாகராஜன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

  உணவு பாதுகாப்பு அலுவலர் ஜவகர் ஜோதிநாதன் பேசும்போது, ஆண்டிபட்டி நகரில் அமைந்துள்ள ஹோட்டல் மற்றும் மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் அரசு கூறியுள்ள விதிமுறைகளை பின்பற்றி உணவுப் பொருள்களை தயார் செய்ய வேண்டும் என்று விதிமுறைகளை விளக்கி கூறினார்.

  குறிப்பாக உணவு கூடங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் குறிப்பிட்ட அளவு பயன்படுத்திய பின் அதை அரசு வழங்கியுள்ள டின்களில் ஊற்றி சேகரம் செய்து வைத்து , மாதா மாதம் அரசு மூலமாகவே அதனை பயோ டீசல் தயாரிப்புக்காக மறு சுழற்சி அடிப்படையில் கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

  கடைக்காரர்கள் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்று விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி நகர் பகுதியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் மிட்டாய் சங்க உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • முகாமில் 1086 கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
  • வெறி நோய் தடுப்பூசி மற்றும் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் முதலிய சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

  உடுமலை:

  தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உடுமலை கோட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கொழுமம் ஊராட்சி குளத்துப்பாளையம் கிராமத்தில் நேற்று சிறப்பு கால்நடை மருத்துவ சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் 1086 கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது.சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு மேலாண்மைக்கான விருதுகளும் சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் கார்த்திகேயன்,பிரகாஷ், ராஜ்குமார் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் கார்த்தி,பத்மா கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை மற்றும் தடுப்பூசி பணியினை மேற்கொண்டனர்.

  இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை உடுமலை கோட்ட உதவி இயக்குனர் வி. ஜெயராமன் கூறியதாவது:-

  உடுமலை கோட்டத்தில் மொத்தம் 60 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தலா 20 முகாம்கள் வீதம் 2024 ம் ஆண்டு மார்ச் வரை நடைபெற உள்ளது.முகாம் நடைபெறும் இடம் மற்றும் நாள் குறித்த விபரம் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தகம் மற்றும் ஊராட்சி மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.முகாமில் சிகிச்சை, மலடு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம், தாது உப்பு, வெறி நோய் தடுப்பூசி மற்றும் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் முதலிய சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்கள் பகுதியில் நடைபெற உள்ள சிறப்பு கால்நடை மருத்துவ சுகாதார விழிப்புணர்வு முகாமுக்கு கால்நடைகளை கொண்டு வந்து மேற்படி சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

  • விழிப்புணர்வு முகாமில் சுமார் 250 கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
  • வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

  நெடுஞ்சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் ஆறுமுக நயினார், கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன், இயக்குனர் ஜார்ஜ் கிளிங்டன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

  மேலும், புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை பற்றி புகையிலை கட்டுப்பாட்டுப் பிரிவு மாவட்ட ஆலோசகர் டாக்டர் வேணுகா எடுத்துரைத்தார்.சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் சுமார் 250 கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

  பின்னர், வாகைக்குளம் சுங்கச்சாவடி அருகே வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.முகாமில், நெல்லை சாலை பாதுகாப்பு அலகு உதவிக் கோட்டப்பொறியாளர் சசிகலா, தூத்துக்குடி ஆர்.டி.ஓ., விநாயகம், சுகாதார பணிகள் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், சமூக சேவகர் ரோசரி பாத்திமா, போக்குவரத்துக்கு இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள், நெடுஞ்சாலை சாலைப்பாதுகாப்பு அலகு உதவிப் பொறியாளர்கள் லட்சு மிப்பிரியா மற்றும் செல்வன், பேராசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை நெடுஞ்சாலை, உதவி பொறியாளர் ஜெயஜோதி மற்றும் கல்லூரி நிர்வாக மேலாளர் விக்னேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

  • கால்நடை உதவிமருத்துவரை விவசாயிகள், கால்நடைவளர்ப்போர் அணுகலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
  • நோய் தடுப்பு மற்றும் நோய்தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

  திருப்பூர்:

  திருப்பூர் மாவட்டத்தில் தமிழக அரசால் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் "சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்" நடத்தும் திட்டம் 2023-24ம் நிதியாண்டில் நடைமுறைபடுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் நோய்வாய்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழுநீக்கம் செய்தல்,நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, சுண்டுவாத அறுவைசிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய்தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

  இத்திட்டமானது திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 20 முகாம்கள் வீதம் 260 முகாம்கள் அக்டோபர் 2023 மாதம் முதல் கால்நடை மருத்துவ வசதி இல்லாத குக்கிராமங்களிலும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடத்தப்படவுள்ளது. இவ்வாய்ப்பினை கால்நடை வளர்ப்போர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறும், மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவிமருத்துவரை விவசாயிகள், கால்நடைவளர்ப்போர் அணுகலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.    

  • கிடேரி கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் தாது உப்புக் கலவைகள் வழங்கப்பட்டது.
  • கன்று பேரணி நடத்தி சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

  ஆலங்குளம்:

  ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமமான நெட்டூர் கிராமத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

  ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் நெட்டூர் கால்நடை மருத்துவர் ராமசெல்வம் மற்றும் வீராணம் கால்நடை மருத்துவர் சந்திரன் ஆகியோர் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, சினை பரிசோதனை, செயற்கைமுறை கருவூட்டல், மடிவீக்க நோய் சிகிச்சை போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

  மேலும் கிடேரி கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் தாது உப்புக் கலவைகள் வழங்கப்பட்டது. சிறந்த கால்நடை பராமரிப்பு மேலாண்மை விருது மற்றும் கன்று பேரணி நடத்தி சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் நெட்டூர் கால்நடை மருத்துவர் ராமசெல்வம் நன்றி கூறினார்.

  முகாமில் கால்நடை ஆய்வாளர் மகேஷ் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் கீதா பிச்சையா மற்றும் கால்நடை வளர்க்கும் ஏராளமான விவசாயிகள் தங்கள் கால்நடைகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.