என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை விழிப்புணர்வு முகாம்
    X

    கால்நடை விழிப்புணர்வு முகாமை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    கால்நடை விழிப்புணர்வு முகாம்

    • ராஜபாளையம் அருகே கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இந்த முகாமை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி புத்தூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, கால்நடைகளை சிறப்பாக பராமரித்த பயனாளிகளுக்கு பரிசுக ளையும், சான்றிதழ்களை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக கால்நடை வளர்ச்சிக்கு எவ்வித திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

    தற்போது மு.க.ஸ்டா லின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ஊசிகள், மருந்துகள் என அனைத்தும் கட்டணமில்லாமல் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறார்.

    மேலும் அனைத்து கிராமங்களிலும் கால்நடை மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    இந்த நிகழ்வில் கால்நடை உதவி இயக்குநர் ராஜேஸ்வரி, மருத்துவர் கோவிந்தசாமி மற்றும் சேகர், பயனாளிகள், பொதுமக்கள் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×