என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாடுகளுக்கு சிகிச்சை அளித்த காட்சி.
கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
- குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சியில் நடந்தது
- 904 மாடுகளுக்கு சிகிச்சை
குடியாத்தம்:
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி காளியம்மன்பட்டி சாமியார்மலை பகுதியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு கொண்டசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார் தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எம்.சிவகவி, இ.தமிழ்சசெல்வி, எஸ்.சரவணன் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் கலந்து கொண்டு கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்து சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
கல்லப்பாடி கால்நடை மருத்துவர் எம்.ரமேஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.இந்த முகாமில் பசுமாடுகள், காளைமாடுகள், ஆடுகள், கோழிகள் மற்றும் வீட்டு வளர்ப்பு பிராணிகள் என 904 கால்நடைகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றன.
நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.






