search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt. high school"

    • ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாததால் மருத்துவ உள் ஒதுக்கீடு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • தங்களுடைய மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்துவிடும் என்று தனியார் பள்ளிகள் கருதுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் 70அரசு பள்ளிகள் உட்பட 119மேல்நிலைப்பள்ளிகள் இருப்பதாக மாவட்ட கல்வி அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரம் நகராட்சியில் 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமே உள்ளன.

    ராமநாதபுரத்தில் அரசு இருபாலர் பள்ளியோ அல்லது ஆண்கள் மேல் நிலைப்பள்ளியோ கிடையாது என்பதால் வேறு வழியின்றி தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி யிலேயே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரம் நகராட் சிக்குட்பட்ட பகுதியில் இருபாலர் பயிலக்கூடிய அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இந்த கோரிக்கை அரசால் பரிசீலனை செய்யப்படாமல் உள்ளது.

    ஒருவேளை இருபாலார் பயிலக்கூடிய அரசு மேல்நிலைப்பள்ளி நகரில் அமையும் பட்சத்தில் தங்களுடைய மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்துவிடும் என்று தனியார் பள்ளிகள் கருதுகின்றனர்.

    இந்த சூழலில் மருத்துவ கனவு மேலும் ஒரு தலைவலியாக மாறியுள்ளது. மாவட்ட தலைநகரில் வசித்து வரும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிரத்தை எடுத்து படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும் அரசு அறிவித்துள்ள மருத்துவ உள் இட ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது.

    6முதல் 12-ம்வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே 7.5சதவீத உள் இட ஒதுக்கீடு என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் தங்களது குழந்தைகளை படிக்க வைத்தும் உள் ஒதுக்கீடு பெற முடியவில்லையே? என்று பல பெற்றோர்கள் வேதனையில் உள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் பாலமுத்துவிடம் கேட்ட போது, ராமநாதபுரம் மாவட்ட தலைநகரில் அரசு பள்ளி இல்லை என்பதற்கு காரணம் இடம் இல்லை என்று தெரிவித்தார்.

    தற்போது அரசு அறி வித்துள்ள மருத்துவ உள் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர விண்ணப் பிக்க வேண்டு மெனில் அரசு பள்ளியில் மட்டுமே படித்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில் அரசுமேல்நிலைப்பள்ளியே இல்லாமல் இது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தட்சி ணாமூர்த்தி கூறுகையில், வாலிபர் சங்கமும், மாணவர் சங்கமும் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வா கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு பள்ளி அமைப்பதற்கு உண்டான இடவசதி இல்லை எனக்கூறி வரு கின்றனர்.ஆனால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் ளேயே தனியார் பள்ளி இயங்குவதற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுத்துள்ளனர்.

    இது குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த முருகன் கூறுகையில், கூலித்தொழிலாளியான எனது மகள் ராமநாதபுரம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 முடித்து தற்போது கல்லூரியில் பயின்று வருகிறார். என்னுடைய மகள் படிப்பதற்கு அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத தால் 10-ம் வகுப்பு படித்து முடித்த அவரை எங்கு சேர்ப்பது? என்று தெரியாமல் கலக்கத்தில் உள்ளேன் என்றார்.

    • எடமணல் அரசு உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடந்தது.
    • மாணவர்கள் தடகளம், நீளம் தாண்டுதல் உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள எடமணல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளியின் சார்பாக 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

    பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் நிகழ்விற்கு தலைமை வகித்தார்.

    உதவி தலைமை ஆசிரியர் கீதா வரவேற்புரையாற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் எஸ். பரிமளா செல்வராஜ் மாணவர்களுக்கான விளை யாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து சிறப்பித்தார்.

    பள்ளி மாணவ மாணவியர் தடகளம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலைவாணி, பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் சவீதா, பத்திரிக்கையாளர் என்.பிரசன்ன வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமு மற்றும் பள்ளி மேலாண்மைகுழு உறுப்பி னர்கள் ஆகியோர் பரிசுகள் வழங்கி மாணவர்களை பாராட்டினர்.

    விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், ராஜ துரை, சக்தி, ராம் சதீஷ்குமார், நேதாஜி, விவேகானந்தன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு போட்டிகளை நடத்தினர் போட்டி ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர், செல்வராஜன் மற்றும் விஜய மீனாட்சி ஆகியோர் செய்திருந்தனர்.

    • சிதம்பரபுரம் ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் பேபி முருகன் தலைமையில் தூய்மை நடைபயண விழிப்புணர்வு முகாம் ஆத்துக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் முருகன், சிதம்பரபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகன், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    வள்ளியூர்:

    ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட சிதம்பரபுரம் ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் பேபி முருகன் தலைமையில் தூய்மை நடைபயண விழிப்புணர்வு முகாம் ஆத்துக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சையா மற்றும் பிளாரன்ஸ் விமலா கலந்து கொண்டனர். கழிப்பறையால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், கழிப்பறைகளை எப்படி பராமரிக்க வேண்டும் எனவும், கழிப்பறைகளினால் சுகாதாரம் எந்த அளவுக்கு மேம்படுகிறது என்பது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சையா எடுத்துக் கூறினார்.

    பின்பு உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தூய்மை நடை பயணம் மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் முருகன், சிதம்பரபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகன், வார்டு உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் மகேஷ் நன்றி கூறினர்

    • சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    விழாவில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சண்முகவேல், துணைத்தலைவர் சுப்ரமணியன், பொய்கை மாரியப்பன், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் வைத்தியநாதன் வரவேற்றார்.

    ×