

சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள எடமணல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளியின் சார்பாக 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் நிகழ்விற்கு தலைமை வகித்தார்.
உதவி தலைமை ஆசிரியர் கீதா வரவேற்புரையாற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் எஸ். பரிமளா செல்வராஜ் மாணவர்களுக்கான விளை யாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து சிறப்பித்தார்.
பள்ளி மாணவ மாணவியர் தடகளம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலைவாணி, பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் சவீதா, பத்திரிக்கையாளர் என்.பிரசன்ன வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமு மற்றும் பள்ளி மேலாண்மைகுழு உறுப்பி னர்கள் ஆகியோர் பரிசுகள் வழங்கி மாணவர்களை பாராட்டினர்.
விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், ராஜ துரை, சக்தி, ராம் சதீஷ்குமார், நேதாஜி, விவேகானந்தன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு போட்டிகளை நடத்தினர் போட்டி ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர், செல்வராஜன் மற்றும் விஜய மீனாட்சி ஆகியோர் செய்திருந்தனர்.