என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
செங்கோட்டை குலசேகரநாதர் கோவில் பிரதோச வழிபாடு
- குலசேகரநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்புஆராதனைகள் நடந்தது.
- சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழி பட்டனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது.
இதில் சுற்றுவட்டார பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனை போன்று ஆறுமுகசாமி ஒடுக்க கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது.
அதனைதொடர்ந்து சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழி பட்டனர். இதனை போன்று இலத்தூர், புளியரை, இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரதோச வழிபாடு நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி வேண்டுதலை நிறைவேற்றினர்.






