என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Traffic Diversion"
- பெல்ஸ் சாலை தற்காலிகமாக ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
- கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை.
சென்னை:
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வருகிற 22 மற்றும் 26-ந்தேதிகளில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதையொட்டி 2 நாட்களும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்லாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்வதற்கு அனுமதி இல்லை.
பெல்ஸ் சாலை தற்காலிகமாக ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பாரதி சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. நேராக ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதிசாலை -பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம்.
பாரதி சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக வரும் வாகனங்கள் கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.
எம்.டி.வி. ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம்.
காமராஜர் சாலையில் இருந்து வரும் பி.ஆர். ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சிலை, பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக சென்று வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.
அனுமதி அட்டை இல்லாமல் அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக பி.டபிள்யு.டி. எதிராக உள்ள கடற்கரை உட்புறசாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாளையில் இருந்து சோதனை முறையில் நடைமுறைக்கு வருகிறது.
- வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, போக்குவரத்து மாற்றம் நாளையில் இருந்து சோதனை முறையில் நடைமுறைக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது சோதனை அடிப்படையில் 16.12.2023 முதல் செயல்படுத்தப்படும்.
முன்மொழியப்பட்ட திசைதிருப்பல்கள் பின்வருமாறு:
சோழிங்கநல்லூரில் இருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் தொரைப்பாக்கம் சந்திப்பு -> 200 அடி ரேடியல் சாலை → ரேடியல் சாலை சுங்கச்சாவடியில் புதிய யு திருப்பம் ->பிஎஸ்ஆர் மால் அருகே இடதுபுறம் திருப்பம் → பெருங்குடி சுங்கச்சாவடி டைடல் பூங்காவை அடையும் வகையில் திருப்பி விடப்படுகிறது.
காமாக்ஷி மருத்துவமனை சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வரும் வாகனங்கள் பிஎஸ்ஆர் மால் அருகே இடதுபுறம் (ராஜீவ் காந்தி சாலையில்) திருப்பிவிடப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய யு டர்ன் மூலம் சோழிங்கநல்லூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.
இதேபோல், மாநகராட்சி சாலையில் இருந்து தொரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையில் இடதுபுறமாக திருப்பி விடப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய யு டர்னில் சென்று தொரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.
வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கழிவுநீர் செல்வதற்கு ஏதுவாக வாறுகால் அமைக்கும் பணி இன்று முதல் தொடங்கியது.
- புதிய பாதையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
நெல்லை:
நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோட்டில் ஸ்ரீபுரம் சந்திப்பில் இருந்து ஊருடை யார்புரம் வழியாக தச்ச நல்லூர் செல்லும் சாலை யின் தொடக்கத்தில் ஸ்ரீபுரம் சந்திப்பு பகுதியில் அச்சாலையின் குறுக்காக கழிவுநீர் செல்வதற்கு ஏதுவாக வாறுகால் அமைக்கும் பணி இன்று முதல் தொடங்கியது.
தடுப்பு அமைப்பு
இந்த பணியை ஒட்டி சாலையில் குறுக்காக பேரி கார்டுகள் வைத்து தடுப்பு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த சாலை வழியாக ஊருடையார்புரம் செல்வதற்கும் இருபுறமும் உள்ள வணிக நிறுவனங்க ளுக்கு செல்லவும், பெட்ரோல், டீசல் ஏற்றி செல்வதற்கும் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகிறது. தற்போது வாறு கால் பணிகள் தொடங்கி உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் செல்வ தற்கு நெல்லை மாநகர போலீசார் சார்பில் ஏற்பாடு கள் செய்யப்பட்டு இருந்தது. அந்த புதிய நடைமுறை யானது இன்று முதல் அமலுக்கு வந்தது.
போக்குவரத்து மாற்றம்
அதன்படி ஸ்ரீபுரம் சந்திப்பு முதல் தச்சநல்லூர் வரை செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் ஸ்ரீபுரம் சந்திப்பில் இருந்து ஈரடுக்கு மேம்பாலம், சந்திப்பு பஸ் நிலையம், மதுரை ரோடு, முத்துராம் தியேட்டர் சந்திப்பு வழியாக தச்ச நல்லூர் சென்றன.
இரண்டாவதாக ஸ்ரீபுரம் சந்திப்பு முதல் ஊருடையான் குடியிருப்பு வரை சென்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாக னங்கள் ஈரடுக்கு மேம்பா லம், சந்திப்பு பஸ் நிலையம், மதுரை ரோடு, முத்துராம் தியேட்டர் சந்திப்பு, தச்சநல்லூர் சிவன் கோவில் தெரு வழியாக ஊருடையான் குடியிருப்புக்கு சென்றன.
இதேபோல் ஸ்ரீபுரம் சந்திப்பு முதல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வரை செல்லும் கனரக வாகனங்கள் ஸ்ரீபுரம் சந்திப்பில் இருந்து ஈரடுக்கு மேம்பாலம், சந்திப்பு பஸ் நிலையம், மதுரை ரோடு, முத்துராம் தியேட்டர் சந்திப்பு, தச்சநல்லூர் சிவன் கோவில் தெரு வழியாக இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் நிறுவனத்திற்கு சென்றன.
இதன் காரணமாக இந்த புதிய பாதையில் போக்கு வரத்து நெரிசல் காணப் பட்டது. அதனை ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் நின்று சரி செய்தனர்.
- பொள்ளாச்சி செல்லும் கனரக வாகனங்கள் கரும்புக்கடை ஆத்துப்பாலம் வழியாக செல்ல தடை
- பாலக்காடு சாலையில் இருந்து வரும் பஸ்கள் சுண்ணாம்பு காளவாய் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி புட்டுவிக்கி சாலை வழியாக உக்கடம் செல்லலாம்.
கோவை,
உக்கடம்-ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்கு றிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது,
உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் வழக்கம் போல கரும்புக்கடை, ஆத்துப்பாலம் வழியாக பொள்ளாச்சி சாலையை அடைந்து செல்லலாம். உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் கனரக வாகனங்கள் கரும்புக்கடை ஆத்துப்பாலம் வழியாக செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
அந்த வாகனங்கள் பேரூர் புறவழிச்சாலையை அடைந்து புட்டிவிக்கி சாலை வழியாக சுண்ணாம்பு காளவாய் சந்திப்பில் இடது புறம் திரும்பி பொள்ளாச்சி செல்லலாம்.
உக்கடம் கரும்புக்கடை ஆத்துப்பாலம் வழியாக பொள்ளாச்சி செல்லும் பஸ்கள் மட்டும் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப ஆத்துப்பாலம் வழியாக செல்ல அனுமதிக்கப்படும். போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தால் பொள்ளாச்சி செல்லும் பஸ்கள் பேரூர் புறவழிச்சாலையை அடைந்து புட்டுவிக்கி சாலை வழியாக சுண்ணாம்பு காளவாய் சந்திப்பில் இடது புறம் திரும்பி பொள்ளாச்சி செல்லலாம்.
பொள்ளாச்சியில் இருந்து உக்கடம் நோக்கி வரும் இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆத்துப்பாலம் பாலக்காடு ரோடு மின்மயானம் அருகில் யு-டேர்ன் எடுத்து கரும்புக்கடை வழியாக உக்கடம் வந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
பொள்ளாச்சியில் இருந்து ஆத்துப்பாலம் வழியாக நகருக்குள் வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் கரும்புக்கடை ஆத்துப்பாலம் வழியாக செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மாறாக குறிச்சி பிரிவில் இருந்து வலதுபுறம் திரும்பி போத்தனூர் கடைவீதி சந்திப்பில் இடது புறம் திரும்பி நஞ்சுண்டாபுரம் வழியாக ராமநாதபுரம் வந்து உக்கடம் செல்லலாம் அல்லது ஆத்துப்பாலத்தில் இருந்து இடதுபுறம் திரும்பி சுண்ணாம்பு காளவாய், புட்டுவிக்கி சாலை, சேத்துமா வாய்க்கால் வழியாக உக்கடம் வந்த டைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும். உக்கடத்திலிருந்து பாலக்காடு மார்க்கமாக செல்லும் வாகனங்கள், உக்கடத்திலிருந்து குனியமுத்தூர், கோவைப்புதூர், மதுக்கரை மார்க்கமாக பாலக்காடு செல்லும் வாகனங்கள் அனைத்தும் கரும்புக்கடை ஆத்துப்பாலம் வழியாக செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மாறாக பேரூர் புற வழிச்சாலையை அடைந்து புட்டுவிக்கி சாலை வழியாக சுண்ணாம்பு காளவாய் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பாலக்காடு சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள், பஸ் மற்றும் கனரக வாகனங்கள் ஆத்துப்பாலம் கரும்புக்கடை வழியாக செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாறாக பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் நோக்கி நகருக்குள் வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் குனியமுத்தூரை அடுத்து சுண்ணாம்பு காளவாய் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி புட்டு விக்கி சாலை சேத்துமா வாய்க்கால் வழியாக உக்கடத்தை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு மேம்பால பணிகள் முடிவடையும் வரை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மேட்லி சந்திப்பில் இருந்து மூப்பாரப்பன் சாலை வரை பர்கிட் ரோடு ஒருவழி சாலையாக மாற்றப்படுகிறது.
- ஜிம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் தண்டபாணி தெருவில் இடதுபுறம் திரும்பி மூப்பாரப்பன் சாலை வழியாக அண்ணாசாலை சி.ஐ.டி. நகர் அடையலாம்.
சென்னை:
சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை தியாகராயநகர் தெற்கு உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணா சாலை சி.ஐ.டி. நகர் 1-வது மெயின் ரோடு வரை இணைப்பு மேம்பாலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே தெற்கு உஸ்மான் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 13-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் ஒரு வாரம் சோதனை ஓட்டம் செய்யப்பட உள்ளது.
* அண்ணா சாலையில் இருந்து வரும் மாநகர பஸ்கள் மற்றும் வாகனங்கள் தியாகராயநகர் மேட்லி சந்திப்பு செல்வதற்கு கண்ணம்மாபேட்டை சந்திப்பில் இடதுபுறமாக திரும்ப வேண்டும். பின்னர், புதிய போக் சாலை சென்று முத்துரங்கன் சாலை வழியாக வலது புறமாக திரும்பி முத்துரங்கன் சாலை மேட்லி சந்திப்பில் வலது புறமாக திரும்பி தியாகராயநகர் பஸ் நிலையம், உஸ்மான் சாலையை சென்றடையலாம்.
* போத்தீஸ் மேம்பாலத்தில் இருந்து உஸ்மான் சாலை வரும் மாநகர பஸ்கள் (47,47A -வழித்தட எண்) இடதுபுறம் சென்று பர்கிட் சாலை வழியாகவும் மற்றும் தியாகராயநகர் பஸ் நிலையத்தில் இருந்து வெளி நுழைவுவாயில் வழியாக வரும் மாநகர பஸ்கள் அண்ணாசாலை செல்வதற்கு மேட்லி சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி பர்கிட் ரோடு வழியாக மூப்பாரப்பன் சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி சி.ஐ.டி. நகர் ரவுண்டானா அடைந்து இணைப்பு சாலை வழியாகவும் அல்லது 5-வது மெயின் ரோடு வழியாகவும் அண்ணா சாலையை அடையலாம்.
* மேட்லி சந்திப்பில் இருந்து மூப்பாரப்பன் சாலை வரை பர்கிட் ரோடு ஒருவழி சாலையாக மாற்றப்படுகிறது.
* போத்தீஸ் மேம்பாலத்தில் இருந்து உஸ்மான் சாலை வரும் இலகுரக வாகனங்கள் மேட்லி சந்திப்பில் வலது புறமாக திரும்பி மேட்லி சுரங்கப்பாதை வழியாக மேற்கு மாம்பலம் மற்றும் மேற்கு சைதாப்பேட்டையை அடையலாம்.
* ஜிம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் தண்டபாணி தெருவில் இடதுபுறம் திரும்பி மூப்பாரப்பன் சாலை வழியாக அண்ணாசாலை சி.ஐ.டி. நகர் அடையலாம்.
* வெங்கட் நாராயணா சாலையில் இருந்து தியாகராயநகர் செல்லும் வாகனங்கள் பர்கிட் சாலை மூப்பாரப்பன் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மூசா சாலை வழியாக தியாகராயநகர் சென்றடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மேம்பால தூண்கள் அமைக்கும் பணியின் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
- இப்பணிக்காக 306 தூண்கள் அமைக்க திட்டமிடப்பட்டன.
கோவை,
கோவை அவிநாசி சாலையில் மேம்பால தூண்கள் அமைக்கும் பணியின் காரணமாக லட்சுமி மில் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை அவினாசி சாலையில் உப்பிலி பாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை ரூ.1.621 கோடி மதிப்பில் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்ம ட்டப் பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிக்காக 306 தூண்கள் அமைக்க திட்டமிடப்பட்டன. தற்போது வரை 280-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தூண்கள் அமைக்க ப்படும் முக்கிய சந்திப்பு களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது லட்சுமி மில் சந்திப்பில் தூண்கள் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து காவல்து றையினர் கூறும் போது, நவஇந்தியா சந்திப்பு, புலியகுளம் சந்திப்பில் இருந்து காந்திபுரம் செல் லும் வாகனங்கள், லட்சுமி மில் சிக்னல் அருகே சில மீட்டர் தூரம் தள்ளி உள்ள சர்க்கியூட் ஹவுஸ் சாலையில் உள்ள இடை வெளி வழியாக யூடர்ன் செய்து காந்திபுரம் செல்ல லாம். காந்திபுரத்தில் இருந்து லட்சுமி மில் சந்திப்பு வழியாக புலிய குளம், அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகன ங்கள் லட்சுமி மில் சந்திப்பை அடைந்து அவி நாசி சாலையில் இடதுபுறம் திரும்பி, சில மீட்டர் தூரம் தள்ளி வைக்கப்பட்டுள்ள இடை வெளி வழியாக யூடர்ன் செய்து செல்ல வேண்டிய இடங்க ளுக்கு செல்ல லாம்.
இதே யூடர்ன் வழியாக குப்புசாமி நாயுடு மருத்து வமனை சந்திப்பில் இருந்தும்,புலியகுளம் செல்லும் வாக னங்களும் செல்ல லாம். நவஇந்தியா சந்திப்பில் இருந்து லட்சுமி மில் சந்திப்பு நோக்கி வருபவர்கள் மீண்டும் நவஇந்தியாவுக்கு யூடர்ன் செய்து செல்லவும் வழி வகை செய்யப்ப ட்டுள்ளது.
போக்குவரத்து காவல் துணை ஆணையர் மதிவா ணன் கூறும்போது, அவி நாசி சாலையில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும், சிக்னலுக்காக காத்திருக்காத வகையிலும், யூடர்ன் செய்து செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்ப ட்டுள்ளன. இதனால் வாக னங்கள் நெரிசலில் சிக்கா மல் சீராகசென்று வருகின் றன என்றார்.
- நத்தம் சாலையில் பறக்கும் மேம்பாலம் இன்று மாலை திறக்கப்படுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதுரை
மதுரை-நத்தம் சாலையில் பறக்கும் மேம்பாலம் இன்று மாலை திறக்கப்படுகிறது. பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நத்தம் சாலையில் ஊமச்சிக்குளம் செல்ல கோகலே ரோடு வழியாக விஷால்மால் முன்புள்ள பாலத்தில் ஏறி செல்ல வேண்டும். அய்யர் பங்களா, திருப்பாலை, ஊமச்சிகுளம் செல்லும் வாகனங்கள், இந்த மேம்பாலம் வழியாக சென்று 2.5 கி.மீ தொலைவில் உள்ள இறங்குபாதை வழியாக பேங்க் காலனி சந்திப்பை அடையலாம்.
நத்தம் சாலையில் ஐ.ஓ.சி சந்திப்பு, பீ.பீ.குளம், தபால் தந்தி நகர், எஸ்.பி. பங்களா சந்திப்பு, ரிசர்வ் லைன், ஆத்திகுளம், நாராயணபுரம் செல்ல வேண்டிய வாகனங்கள், பாலத்தின் மீது ஏறாமல் இடதுபுறம் உள்ள சாலை வழியாக விஷால்மால், ஐ.ஓ.சி ரவுண்டானா வழியாக பாலத்தின்கீழ் செல்லலாம்.
அழகர்கோவில், புதூர், மாவட்ட கோர்ட்டு, கே.கே.நகர், மாட்டுத்தாவணி, வழியாக செல்லும் சிறிய வாகனங்கள் நவநீத கிருஷ்ணன் கோவில் சாலை, பழைய அக்ரகாரம் தெரு, அப்துல் கபார்கான் சாலை, லாலா லஜபதிராய் சாலைகளை பயன்படுத்தி, பி.டி.ஆர்.சிலை வழியாக பாண்டியன் ஓட்டல், அழகர்கோவில் செல்ல வேண்டும்.
மாட்டுத்தாவணி, கே.கே.நகர், டாக்டர் தங்கராஜ் சாலை வழியாக வரும் வாகனங்கள் கக்கன் சிலை சந்திப்பில் வலதுபுறம் செல்லக்கூடாது. மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு திரும்பி செல்லும் வசதியை பயன்படுத்தி ரேஸ்கோர்ஸ் வழியாக அழகர்கோவில் சாலையை அடையலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
- உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- மொத்தம் 306 தூண்களில் 280 தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன.
கோவை,
கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிட்ரா சந்திப்பு, ஹோப்காலேஜ், அண்ணாசிலை, நவஇந்தியா, ஆகிய நான்கு இடங்களில் ஏறு மற்றும் இறங்கு தளங்கள் அமைக்கப்படுகின்றன. மொத்தம் 306 தூண்களில் 280 தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன.
தற்போது எஸ்ேஸா பங்க் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள சாலையின் மைய ப்பகுதியில் தூண்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக போக்குவரத்து மாற்றம ெசய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகர காவல்துறையினர் வெளியிட்ட செய்திக்கு றிப்பில், "அவிநாசி சாலை எஸ்ஸோ பங்க் பகுதியில் மேம்பால தூண் கட்டப்பட்டு வருகிறது. எனவே, பாரதிகாலனி பகுதியில் இருந்து அவிநாசி சாலையை அடையும் வாகனங்கள், அவிநாசி சாலையில் இடதுபுறமாக திரும்பி பில்லர் எண் 183-184 ஆகியவற்றுக்கு இடையே 'யு' டர்ன் செய்து செல்லலாம். பீளமேடு வழித்தடத்திலிருந்து வந்து பாரதிகாலனி சாலைக்கு செல்லும் வாகன ஓட்டு நர்கள் சுகுணா திருமண மண்டபத்துக்கு எதிரில் உள்ள பில்லர் எண் 197-198-க்கு இடையே 'யு' டர்ன் செய்து செல்லாம்" எனக் கூறப்பட்டுள்ளது.
- மதுரை பனகல் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது.
மதுரை
மதுரை மாநகரில் நாள்தோறும் பெருகிவரும் வாகன நெரிசலை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆவின் சந்திப்பு சாலை, வெளிமாவட்டத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சு வாகனங்கள் வந்து செல்லும் சாலையாக உள்ளது. அதேபோல பள்ளி-கல்லூரி வாகனங்கள் செல்லும் சாலையாகவும் உள்ளது.
ஆவின் சந்திப்பு முதல் திருவள்ளுவர் சிலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் திரளானோர் 2 மற்றும் 4 சக்கர வாக னங்களில் வந்து செல்கின்றனர். இதனால் வள்ளுவர் சிலை சந்திப்பிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
திருவள்ளுவர் சிலை முதல் ஆவின் ரோடு வரை செல்லும் சாலை குறுகலாக உள்ளது. அங்கு போக்கு வரத்து நெருக்கடி ஏற்படு கிறது. மேலும் இந்த சாலை அமைப்பானது போக்கு வரத்து சிக்னல் அமைக்க முடியாத வகையில் உள்ளது. இதன் காரணமாக போலீ சாரால் இந்த சந்திப்பில் போக்குவரத்தை எளிதாக கையாள முடியவில்லை.
அந்த பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப் பட்டிருந்தது. அது இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. அதன் அடிப்ப டையில் ஆவின் சந்திப்பில் இருந்து திருவள்ளுவர் சிலை வரை உள்ள சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.
இந்த சாலையில் திருவள்ளுவர் சிலை சந்திப்பில் இருந்து ஆவின் சந்திப்பிற்கு வாகனங்கள் செல்லலாம். ஆவின் சந்திப்பில் இருந்து திரு வள்ளுவர் சிலை சந்திப்பு வரை உள்ள சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.
இந்த சாலையில் திருவள்ளுவர் சிலை சந்திப்பில் இருந்து ஆவின் சந்திப்பிற்கு வாகனங்கள் செல்லலாம். ஆவின் சந்திப்பில் இருந்து வள்ளுவர் சிலை வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கே.கே. நகர் மேலமடையில் இருந்து ஆவின் வழியாக திருவள்ளுவர் சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் குருவிக்காரன் சாலை 2-வது தெரு, சினிப்பிரியா தியேட்டர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி குருவிக்காரன் 2-வது சாலை, காந்தி வீதி ராஜேசுவரி ஓட்டல் மற்றும் திருவள்ளுவர் சிலை சந்திப்பு வழியாக பனகல் சாலைக்கு வேண்டும்.
குருவிக்காரன்சாலை 2-வது சாலை ஒரு வழிப்பா தையாக மாற்றப்பட்டது. காந்தி வீதியில் இருந்து குருவிக்காரன் சாலைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கே.கே. நகர் மேல மடையில் இருந்து ஆவின் சந்திப்பு வழியாக செல்லும் பஸ்கள் குருவிக்காரன் சாலை 2-வது தெரு, சினிப்பிரியா தியேட்டர் வழியாக ராஜேசுவரி ஓட்டல் சென்று, சுப்புராமன் தெருவின் இடதுபுறம் திரும்பி அண்ணா பஸ் நிலையம் வழியாக சுப்புராமன் தெருவின் வடக்குத்தெரு வழியாக பனகல் சாலைக்கு செல்ல வேண்டும். இந்த சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.
பனகல் சாலை, சுப்புராமன் தெரு வழியாக அண்ணா சாலையில் இருந்து வடக்குத்தெரு, அண்ணா பஸ் நிலையம் செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வள்ளுவர்சிலை சந்திப்பில் உள்ள கோரிப்பாளையம் நோக்கி செல்லும் பஸ்களின் நிறுத்தம் அகற்றப்படுகிறது.
மதுரை பனகல் சாலையில் போக்கு வரத்து மாற்றம் செய்யப் பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது.
- புதுவை -கடலூர் சாலை மரப்பாலம் சந்திப்பில் இன்று ஒரு நாள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் அனுப்பப்பட்டது.
- புதுவை-கடலூர் சாலையில் மரப்பாலம் சந்திப்பில் வாகனங்கள் செல்ல பேரிகார்டு, டிரம் கொண்டு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுவை -கடலூர் சாலை மரப்பாலம் சந்திப்பில் இன்று ஒரு நாள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் அனுப்பப்பட்டது.
மின்துறையின் சேதமடை ந்த உயர் மின் அழுத்த கேபிள் ரோடு கிராசிங் குழாயை புதிதாக மாற்றி அமைக்கும் பணி நடந்தது. இதனால் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை கடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடலூர் செல்லும் பஸ்கள் மாற்றுபாதையில் அனுப்பப்பட்டது.
புதுவை-கடலூர் சாலையில் மரப்பாலம் சந்திப்பில் வாகனங்கள் செல்ல பேரிகார்டு, டிரம் கொண்டு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
புதிய பஸ் நிலையத்தில் இருந்து வரும் பஸ்கள் வெங்கடசுப்பாரெட்டியார் சதுக்கம் வழியாக இந்திரா காந்தி சிலை, வில்லியனூர், கரிக்கலாம்பாக்கம், அபிஷேகபாக்கம், தவளகுப்பம், நல்லவாடு ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்பி கடலூர் சாலையில் சென்றது.
கடலூரில் இருந்து வரும் வாகனங்கள் தவளகுப்பம் சந்திப்பில் திரும்பி வில்லியனூர் சென்று அரும்பார்த்தபுரம் வழியாக புதுவை பஸ் நிலையம் வந்து சென்றது. இதர வாகனங்கள் முருங்க ப்பாக்கம், மரப்பாலம் சந்திப்பில் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது.
- பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள வாய்க்கால் பாலம் அருகே பழமையான பாலம் ஒன்று உள்ளது.
- பணிகள் நடைபெறுவதால் பாலத்தின் மற்றொரு பகுதி வழியாக இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று செல்கின்றன.
செங்கோட்டை:
செங்கோட்டையை அடுத்த பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள வாய்க்கால் பாலம் அருகே பழமையான பாலம் ஒன்று உள்ளது.
புதிய பால பணி
கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய இணைப்பு பாலமாக அமைந்துள்ள இந்த பாலம் சேதமடைந்து காணப்பட்டதால் அதனை இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு கோரிக்கை வலுத்தது.
இதையடுத்து அந்த பாலத்தின் ஒரு பகுதியை இடித்துவிட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு பகுதி வழியாக இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று செல்கின்றன.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தினமும் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பிரானூர் பார்டர் வழியாக செல்லும் வாகனங்கள், கனரக லாரிகள், அய்யப்ப பக்தர்களின் கார்கள் அனைத்தும் ெசங்கோட்டை வனத்துறை சோதனை சாவடி, கணக்கப்பிள்ளை வலசை, தேன்பொத்தை, பண்பொழி, குத்துக்கல்வலசை வழியாக வழியாக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனால் பிரானூர் பார்டர் பாலம் பகுதியில் போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு இன்று முதல் போக்குவரத்து சீராக நடைபெற்றது.
- மயிலாப்பூரில் உள்ள கச்சேரி சாலையில் சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் நடக்கவுள்ளது.
- கடந்த 10-ந்தேதி முதல் ஒரு வாரம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
சென்னை :
சென்னை மயிலாப்பூரில் உள்ள கச்சேரி சாலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமான பணிகளை கருத்தில்கொண்டு, போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டு கடந்த 10-ந்தேதி முதல் ஒரு வாரம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இது நன்றாக செயல்பட்டதால், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கோரியப்படி இந்த போக்குவரத்து மாற்றங்கள் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கச்சேரி சாலை மற்றும் அதை சுற்றியுள்ள சாலைகளில் 24-ந்தேதி (நாளை) முதல் 3 ஆண்டுகளுக்கு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் வருமாறு:-
* முண்டக்கன்னி அம்மன் கோவில் தெருவில் இருந்து கச்சேரி சாலைக்கு வாகனங்கள் செல்வதை கட்டுப்படுத்தி, கல்விவாரு தெருவில் தற்போது உள்ள ஒருவழி பாதை அமைப்பு மாற்றியமைக்கப்பட்டு வாகனங்கள் கச்சேரி சாலையில் இருந்து முண்டக்கன்னி அம்மன் கோவில் தெருவுக்கு அனுமதிக்கப்படும்.
* லஸ் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலைய நோக்கி இலகு ரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, கல்விவாரு தெரு வழியாக முண்டக்கன்னி அம்மன் கோவில் தெரு மற்றும் பஜார் சாலை வழியாக செல்லலாம்.
* சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து கச்சேரி சாலை வழியாக லஸ் சந்திப்பை நோக்கி இலகு ரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, தேவடி தெரு, நடு தெரு மற்றும் ஆர்.கே.மடம் சாலை அல்லது மாதா சர்ச் சாலை வழியாகவும் செல்லலாம்.
* மாநகர பஸ் எண் '12 பி' லஸ் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் செல்ல தடை செய்யப்பட்டு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாகவும் திரும்பி வரும்போது வி.எம்.தெரு வரை வழக்கம்போல் வந்து டி.டி.கே.சாலை வழியாக செல்லலாம்.
* மாநகர பஸ் எண் '12 எக்ஸ்' லஸ் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் செல்ல தடை செய்யப்பட்டு, ஆர்.கே.மடம் சாலை மற்றும் தெற்கு கால்வாய் கரை சாலை வழியாகவும் திரும்பி வரும்போது மந்தைவெளி பஸ் நிறுத்தம் வரை வழக்கம்போல் வந்து வெங்கடகிருஷ்ணா சாலை மற்றும் ஆர்.கே.மடம் சாலை வழியாக செல்லலாம்.
மேற்கண்ட தகவல் சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்