search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bridge works"

    • ரூ. 30 கோடி செலவில் நடைபெறும் கீழக்கரை ரெயில்வே மேம்பால பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • அடுத்த மாதம் மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் -திருப்புல்லாணி ரோடு சக்கரகோட்டை வழியாக திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் ராமநாதபுரம் நகருக்கு வந்து சென்றனர்.

    இந்த நிலையில் சேதுநகர் ரெயில்வே கேட் மூடும் போது ராமேசுவரம் ரோட்டில் பழைய பஸ் நிலையம் வரை போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ரூ.30 கோடியில் சேதுநகர் ரெயில்வே கேட் அருகே புதியமேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2018-ல் தொடங்கியது.

    இந்த பாலம் ராமநாத புரத்தில் இருந்து சக்கர கோட்டை வழியாக துாத்துக்குடி, கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. கொரோனா பரவல், நிலம் கையகப்படுத்து வதில் தாமதத்தால் 4 ஆண்டுகளாக பாலப்பணி ஆமை வேகத்தில் நடந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக பணிகள் தீவிரமடைந்துள்ளன. தற்போது ரெயில்வே கேட் அருகே மேம்பாலத்தில் கிரேன் மூலம் பெரிய இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி நடக்கிறது. ராமநாதபுரம் - ராமேசுவரம் மார்க்கத்தில் ஒரு வழிப் பாதையாக பஸ்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.ராமேசுவரம் மார்க்கத்தில் வரும் பஸ்கள் பட்டணம் காத்தான் டி-பிளாக், கேணிக்கரை ரோட்டில் செல்கின்றன. இதற்காக சேதுநகர் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே கேட்டை நிரந்த ரமாக மூடியுள்ளனர்.

    பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் அடுத்த மாதம் மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    போர்க்கால அடிப்படை யில் பணிகளை துரிதமாக செய்து முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பூர் நகரப்பகுதியை நொய்யல் ஆறும், ரெயில்வே பாதையும் மூன்றாக பிரிக்கின்றன.
    • பாலம் கூடுதலாக இருந்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும்.

    திருப்பூர் :

    திருப்பூர் நகரப்பகுதியை நொய்யல் ஆறும், ெரயில்வே பாதையும் மூன்றாக பிரிக்கின்றன. இதன்காரணமாக வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் பாலம் கூடுதலாக இருந்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும். திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது நகரப்பகுதியில் வாகன நெரிசலை தீர்த்து வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கூலிபாளையம், அணைப்பாளையம், தோட்டத்து ப்பாளையம், எஸ்.ஆர்.சி., மில் பகுதியில் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. நொய்யலிலும் புதிய பாலம் கட்டப்பட்டது.

    அணைப்பாளையம் பகுதியில் வேலம்பாளையம் ரங்கநாதபுரம் பகுதியில் இருந்து துவங்கி ெரயில்வே பாலமாகவும், நொய்யல் பாலமாகவும் நீட்டித்து மங்கலம் ரோட்டை சென்றடையும் வகையில் பெரிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. குறிப்பாக அணைப்பாளையம் கிராமம் மாநகராட்சியில் இருந்தும் தொடர்பு இல்லாத பகுதியாக இருந்து வந்தது. இந்நிலையை மாற்ற பாலம் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது.

    பாலம் அமைக்கும் பணி துவங்கிய போது நிலம் எடுக்க மக்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். கோர்ட்டு வழக்கு காரணமாக பாலம் பணி பாதியில் நிற்கிறது. கடந்த 2009ல் தொடங்கிய சட்ட போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நிலம் எடுப்பு விவகாரத்தில் சுமூகமாக தீர்வு கிடைத்துள்ளதால் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. கலெக்டர் கிறிஸ்துராஜ், நிலம் எடுப்பு டி.ஆர்.ஓ., பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார்.

    இதுகுறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:- அணைப்பாளையம் பாலம் பணி நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. நிலம் எடுப்பு விவகாரம் காரணமாக இழுபறி ஏற்பட்டு வந்தது. தற்போது சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது. நிலம் எடுப்புக்கான இழப்பீடு வழங்க ஒரு கோடி ரூபாய் தேவையென அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். நீண்ட நாட்களாக பணிகள் கிடப்பில் இருந்ததால் திருத்திய திட்டமதிப்பீடு தயாரிக்க வேண்டும். திட்ட மதிப்பீடு தயாரானதும் அதற்கான நிர்வாக அனுமதியும் பெற்று புதிய டெண்டர் நடத்தி, பணிகள் விரைவில் துவங்கப்படும். ரிங்ரோடு பகுதியில், ெரயில்வே பாலமும் நொய்யல் ஆற்றுப்பாலமும் ஒரே பாலமாக அமையும் போது போக்குவரத்து நெரிசல் குறையும். பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, காலேஜ் ரோடு பகுதிகளில் ரெயில் பாதையை கடந்து மேம்பாலம் கட்ட திட்டமிட்டு பணிகள் நடந்தது. பல்வேறு காரணங்களால் இந்த பாலம் கட்டுமானப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கு பின் இதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில் தற்போது எஸ்.ஆர்.சி., மில்ஸ் பாலம் கட்டுமானப் பணி முற்றிலும் நிறைவடைந்துள்ளது. பாலம் முடிவடையும் சூர்யா நகர் பகுதியில் அணுகு சாலையாக தார் ரோடு அமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது.

    இதற்காக ஜல்லிக்கற்கள் பரப்பி மண் கொட்டி சமன் செய்யும் பணி நடக்கிறது. பாலம் துவங்கும் இடத்தில் சாய்வு தளத்தில் கற்கள் பதிக்கும் பணியும் முடிவடையும் நிலையில் உள்ளது.பாலம் முழுவதும் இரு புறங்களிலும் தெரு விளக்குகள் அமைக்க கேபிள் இணைப்பு அளித்து விளக்கு கம்பங்கள் அமைக்கும் வகையிலும் பணி தற்போது நடக்கிறது. இப்பணிகள் நிறைவடைந்த பின் பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்படும் எனத்தெரிகிறது.

    • ெரயில்வே மேம்பால பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
    • திருமங்கலம் நகராட்சியில் வார்டு வாரியாக பகுதி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சி யில் வார்டு வாரியாக பகுதி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. திருமங்கலம் -விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள வார்டுகள் 21, 21 26 மற்றும் 27 வார்டு களுக்கான பகுதி சபை கூட்டம் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் தலைமையில் நடந்தது.

    துணைத்தலைவர் ஆதவன்அதியமான் முன்னிலை வகித்தார். இதில் 4 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய டோல்கேட் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் அருண், திருமங்கலத்தில் பெரிய பிரச்சினையாக ெரயில்வே கேட் அமைந்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மேம்பால பணிக்காக பூமிபூஜை போடப்பட்டது. அதன்பின் பணிகள் தொடங்கவில்லை. விதிமுறை மீறி கப்பலூர் டோல்கேட் அமைந்துள்ளது இதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த நகராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் கூறுகையில், ெரயில்வே மேம்பால பணிகள் குறித்து தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் பணிகள் தொடங்கும். கப்பலூர் டோல்கேட் பிரச்சினை தொடர்பாக நாங்கள் பதவிக்கு வந்தவுடன் டோல்கேட்டை அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

    தற்போது டோல்கேட் எதிர்ப்புக்குழுவினர் முதல்வரை சந்திக்க வேண்டும். எங்களிடம் வழங்கிய கடிதத்தினை முதல்வருக்கு அனுப்பி உள்ளோம். தெற்குமாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் ஏற்பாட்டில் விரைவில் முதல்வரை இது தொடர்பாக சந்திக்க ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்றனர்.

    கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    முன்னாள் எம்.எல்.ஏ. லதா அதியமான், தி.மு.க. நகர செயலாளர் ஸ்ரீதர், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், சின்னசாமி, வினோத், ரவி, ராஜகுரு, முத்துகாமாட்சி, சாலிகாஉல்பத் ஜெய்லானி, ரம்ஜான்பேகம் ஜாகீர், பகுதி சபை செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அழகர்கோவில் சாலை பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • பறக்கும் மேம்பால பணிகள் நிறைவுபெற்றது.

    மதுரை

    மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை நகரில் நத்தம் சாலை மேம்பால கட்டுமான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக போக்குவரத்தில் சில மாறுதல்கள் செய் யப்பட்டன.

    இந்த நிலையில் மேம்பால கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த சாலைக ளில் நாளை (வியாழக்கிழமை) முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

    இதன்படி பாண்டியன் ஓட்டல் சந்திப்பில் இருந்து யூத் ஹாஸ்டல் (ரேஸ்கோர்ஸ் சாலை) நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. புதூரில் இருந்து அழகர்கோவில் சாலை மார்க்கமாக தல்லாகுளம், தமுக்கம் மற்றும் கோரிப்பாளையம் செல்ல வேண்டிய வாகனங்கள் பாண்டியன் ஓட்டல் சந்திப்பை கடந்து தொடர்ந்து அழகர்கோ வில் சாலையில் பயணித்து, அம்பேத்கர் சிலை, அவுட்போஸ்ட் வழியாக தல்லாகுளம் செல்ல வேண்டும்.

    புதூரில் இருந்து அழகர்கோவில் சாலை மார்க்கமாக கே.கே.நகர் ஆர்ச் செல்ல வேண்டிய வாகனங்கள், பாண்டியன் ஓட்டல் சந்திப்பை கடந்து அழகர்கோவில் சாலையில் தொடர்ந்து பயணித்து, அவுட்போஸ்ட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மதுரை மாநகராட்சி அலுவலக சாலை, மாவட்ட கோர்ட்டு வழியாக செல்ல வேண்டும்.

    நத்தம் சாலை, ஐ.ஓ.சி. சந்திப்பில் இருந்து கே.கே.நகர் ஆர்ச் செல்ல வேண்டிய வாகனங்கள், பாண்டியன் ஓட்டல் சந்திப்பில் வலது புறம் திரும்பி அழகர்கோவில் சாலையில் பயணித்து அவுட்போஸ்ட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மதுரை மாநகராட்சி அலுவலக சாலை, மாவட்ட கோர்ட்டு வழியாக செல்லவேண்டும். நத்தம் சாலை ஐ.ஓ.சி. சந்திப்பில் இருந்து தல்லாகுளம், தமுக்கம், கோரிப்பாளையம் செல்ல வேண்டிய வாகனங்கள் பாண்டியன் ஓட்டல் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அழகர்கோவில் சாலையில் பயணித்து அம்பேத்கர் சிலை, அவுட்போஸ்ட வழியாக செல்லவேண்டும்.

    மதுரை மாநகராட்சி அலுவலக சாலை-அவுட் போஸ்ட் சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி அம்பேத்கர் சிலை வழியாக பாண்டியன் ஓட்டல் சந்திப்புக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    கே.கே.ந கர் ஆர்ச்சில் இருந்து, அழகர்கோவில் சாலைக்கு கக்கன் சிலை, மதுரை மாநகராட்சி அலுவலக சாலை, அவுட்போஸ்ட் வழியாக வலதுபுறம் திரும்பி பாரதியார் பூங்கா, பாண்டியன் ஓட்டல் சந்திப்பு வழியாக தற்போது சென்று வரும் வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

    இந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் கக்கன் சிலையில் இருந்து வலதுபுறம் திரும்பி யூத் ஹாஸ்டல் (ரேஸ் கோர்ஸ் சாலை) பாண்டியன் ஓட்டல் வழியாக அழகர் கோவில் சாலைக்கு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×