என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வலியுறுத்தல்"
- இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றன.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
கருமத்தம்பட்டி,
கருமத்தம்பட்டி, சோமனூர் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகவும் மேலும் நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் இவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும் கூறப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி இப்பகுதி சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற இந்த சாலையோரத்தில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பு கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம் பவர் ஹவுஸ் பகுதியில் தரைமட்டபாலம் கட்டப்பட்டது. கடந்த சில தினங்களாக சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
இப்பகுதியில் கடந்த ஒரு சில வருடத்திற்கு முன்பு வரை தொடர்ந்து மழைநீர் சாலையில் தேங்கி நின்று சாலை பழுதைடந்து அவ்வ ப்போது விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இதனை அடுத்து தொடர்ந்து இப்பகு தியில் தரைமட்ட பாலம் கட்ட கோரிக்கை விடுத்து வந்தோம். இதனையடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மழைநீர் செல்ல தரைமட்ட பாலம் கட்டப்பட்டது.
ஆனால் தரைமட்ட பாலம் கட்டப்பட்டு எவ்வித பயனும் இல்லை. கிருஷ்ணா புரம், பவர் ஹவுஸ், சோமனூர் போன்ற பகுதிகளில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. செந்தில் நகர் பகுதியில் இருந்து வரும் மழைநீர் கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை யில் தேங்கி நின்றதால் அப்பகுதியில் இருந்த தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்தது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே இதுகுறித்து கருமத்தம்பட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீர் செல்ல ஏதுவாக வடிகால் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தேஜஸ்-வந்தே பாரத் ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
- மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.
விருதுநகர்
100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதிய நிலுவை வழங்காவிட்டால் விருதுநகர் வரும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கருப்பு கொடி காட்டு வேன் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு 14 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. விருதுநகர் மாவட் டத்திற்கு மட்டும் ரூ.87 கோடி வழங்கப்பட வேண்டி உள் ளது. தமிழகத்திற்கு ரூ.2,250 கோடி வர வேண்டி உள்ள தாக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அர சுக்கு கடிதம் எழுதி உள்ளார். பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. அடுத்த வாரம் விருதுநகர் வருகை தரும் மத்திய நிதி மந் திரி 100 நாள் வேலைத்திட்ட ஊதிய நிலுவை வழங்காவிட்டால் அவருக்கு கருப்பு கொடி காட்டுவேன். தீபாவளிக்கு முன்பு இந்த பணியாளர்களுக்கு ஊதிய நிலுவை வழங்க வேண்டும்.
கமல்ஹாசன் இந்தியா கூட்டணியில் இணைவதை வரவேற்கிறேன். அவரது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். இதற்கு நாங்கள் ஆதரவு தருவோம். ஜி.எஸ்.டி.யை பொருத்தமட்டில் ராகுல் காந்தி பிரதமரானால் மாற்றி அமைக்கப்படும். மத்திய அரசு ஏழை மக்க ளுக்கான ரெயில்களுக்கு கட்டணத்தை அதிகரித்துள் ளது வருத்தம் அளிக்கிறது. தேஜஸ் போன்று வந்தே பாரத் ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும். தேஜஸ்ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும்.
ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு வசதியாக கூடுதல் ரெயில் பெட்டி களை இணைப்பதுடன் கட்டணத்தையும் மத்திய அரசு குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விருதுநகர்- மதுரை ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதிய நிலுவை வழங்ககோரி மாணிக்கம்தாகூர் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பாலகிருஷ்ணசாமி, சிவகுருநாதன், வக்கீல் சீனிவாசன், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள். 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அரியலூர் செஞ்சிலுவை சங்க தேர்தலை மீண்டும் நடத்த வலியுறுத்தல்
- இந்தியன் செஞ்சிலுவைச் சங்க மீட்பு மற்றும் வளர்ச்சிக் குழு கூட்டத்தில் தீர்மானம்
அரியலூர்,
இந்தியன் செஞ்சிலுவைச் சங்க மீட்பு மற்றும் வளர்ச்சிக் குழு கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
அரியலூரில் கடந்த 20.10.2023 அன்று நடைபெற்ற இந்தியன் செஞ்சிலுவைச் சங்கத் தேர்தல், சங்க விதிகளின் படி நடைபெறவில்லை. ஆகவே அன்று நடைபெற்ற தேர்தலை கலெக்டர் ரத்து செய்ய வேண்டும்.
நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தல் நடத்தி, அதன் பிறகு மாவட்ட பொறுப்பாளர்களை தேர்வை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, இந்தியன் செஞ்சிலுவைச் சங்க மீட்பு மற்றும் வளர்ச்சி குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கலையரசன் தலைமை வகித்தார். முன்னாள் செயலரும், வக்கீலுமான பாஸ்கர், முன்னாள் துணைத் தலைவர் செல்வராஜ், தா.பழூர் ஒன்றிய உறுப்பினர்ராஜேந்திரன், முன்னாள் கொள்கை பரப்புச் செயலர்இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
- ராமநாதபுரம் கலெக்டர் வலியுறுத்தினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ஹாஜா மஹாலில் இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சக மும், தமிழ்நாடு அரசு கைத் தறி துறையும் இணைந்து நடத்தும் மாவட்ட அளவி லான சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.
எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி கண் காட்சியை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய தாவது:-
கைத்தறி கண்காட்சி வருகிற 9-ந்தேதி வரை நடைபெறுகின்றன. இதன் நோக்கம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்பதே ஆகும். இந்த கண்காட்சி யில் 25-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன.
இதில் பல்வேறு ஊர்க ளில் சிறப்பு வாய்ந்த கைத்தறி ரகங்கள் கிடைக் கும். மேலும் தமிழக அரசு வாடிக்கையாளர்களுக்கு பருத்தி ரகங்களுக்கு ஆடை ஒன்று 30சதவீதமும், பட்டு ரகங்களுக்கு ரூ. 300 வரை தள்ளுபடியும் வழங்கப்படு கிறது. சங்க கமிஷனாக 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படு கின்றது. மேலும் இந்த சிறப்பு கண்காட்சிக்கு இலவச அனுமதி வழங்கப் படுகிறது
கடந்த ஆண்டு நடத்தப் பட்ட கண்காட்சியில் ரூ.65.89 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. பண்டிகைகளுக்கு கைத்தறி ஆடைகளை வாங்கி நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கைத்தறி துறை உதவி இயக்குநர் ரகுநாத், ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம், பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேதுகருணாநிதி, ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் பிரபாகரன், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் சேஷய்யன், கோதண்ட ராமன், கைத்தறித்துறை ஆய்வு அலுவலர் ரத்தின பாண்டி, கைத்தறி அலுவலர் லட்சுமி வெங்கட சுப்பிர மணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கூட்டத்திற்கு சங்க தலைவர் முத்துப் பாண்டி தலைமை தாங்கினார்.
- கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.
கோவை,
கோவை சிங்காநல்லூர் நாடார் சங்க மாதாந்திர ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா சிங்காநல்லூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் முத்துப் பாண்டி தலைமை தாங்கினார்.
கவுரவ தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் வின்சென்ட், பொருளாளர் விநாயகம் ஆகியோர் வரவேற்று பேசினர். மேலும் துணைத் தலைவர்கள் நாராயண, குணசிங், செல்வகுமார், உச்சித ராஜா, செல்வன், பென்னியமீன் ஜெபராஜ், பிரின்ஸ், கொள்கை பரப்புச் செயலாளர்கள் செல்வன், ஜானி டேனியல் ராஜ், ராஜ சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு மற்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் வாழ்த்து கூறினர்.
மேலும் சிங்காநல்லூர் நாடார் சங்கத்திற்கு அதிக உறுப்பினர்கள் சேர்த்து பலப்படுத்துவது, மற்றும் உறுப்பினர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் பொது மக்களுக்கு அவதி தரும் எஸ்.ஐ .எச். எஸ். காலனி ெரயில்வே மேம்பாலத்தை உடனடியாக முடித்து தர வேண்டும், மேலும் சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் வழியில் உள்ள நொய்யல் ஆற்று பாலத்தின் மீது கட்டப்படும் உயர்மட்ட பாலத்தை விரைந்து முடித்து தர வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
- சிறப்பு கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது.
- விவசாயிகள் கண்டிப்பாக கிசான் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும்.
கருமத்தம்பட்டி,
கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணியூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிரந்திகுமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் நடந்த கூட்டத்தில் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன். தொடர்ந்து ஊராட்சியில் சிறப்பாக செயலாற்றிய காவலர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பேசுகையில் கூறியதாவது:-
2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கிராமத்துக்கான ஒதுக்கீடு அதிகரித்து உள்ளது. இதற்கான சவால்களும் அதிகமாக உள்ளன. இருந்தபோதிலும் அதை நோக்கி செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
கோவையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நிலத்தடி நீரை சேமிக்க ஏதுவாக மழைநீர் பாதுகாப்பு திட்டங்கள் மேம்படுத்த ப்பட்டு வருகிறது. தனியார் கட்டிடமாக இருந்தாலும் அரசு கட்டிடமாக இருந்தாலும் மழை நீரை கட்டாயம் சேமிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திடக்கழிவு மேலாண்மையை பொருத்தவரை மக்கும்-மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து குப்பைகளை அகற்றி வருகிறோம்.
இதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் முன்னெடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் கண்டிப்பாக கிசான் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் அவர்களுக்கு பயிர் கடன் வாங்குவதற்கான பல்வேறு பயன்கள் கிடைக்கும். மேலும் எந்தவிதமான அடமானமும் இன்றி ரூ.60 ஆயிரம் வரை கடன் பெற இயலும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சூலூர் எம்.எல்.ஏ வி.பி.கந்தசாமி மற்றும் அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அரசின் திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
- விவசாயிகள் முழுமையாக அறிந்து பயன் பெற்று தங்கள் வாழ்வா தாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான் குடி ஆகிய பகுதிகளில் வேளாண்துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண் பொறியியல் துறைகளின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காக்கின்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மானியத்துடன் கூடிய வேளாண் இடு பொருட்கள் மற்றும் உயிர் உரங்கள், நிலத்தின் தன்மை கேற்றவாறு பயிரிடுவதற்கு உரிய வழிகாட்டுதல்கள், சோலார் மின்வசதி, ஆழ்துளை கிணறு ஏற்படுத் துதல் மற்றும் காய்கறி, பழ விதைகள் உள்ளிட்ட பல் வேறு வசதிகளை அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டு அவர்களின் நலன் காக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் கடைகோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசின் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் முழு மையாக அறிந்து பயன் பெற்று தங்கள் வாழ்வா தாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் தனபாலன், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) முரேஷ்குமார், வேளாண்மை உதவி இயக்குநர்கள் ரவிசங்கர், தங்கபாண்டியன், உதவி செயற்பொறியாளர் வேளாண் பொறியியல் துறை இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உரிய கல்வி தகுதி, அனுபவம் இருந்தும் 35 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் நகராட்சி தெருவிளக்கு ஊழியர்கள் பரிதவிக்கின்றனர்.
- முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.
மதுரை
தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி தெரு விளக்குகளை கடந்த 1989ம் ஆண்டு வரை மின்வாரியம் மூலம் பராமரிப்பு செய்து வந்தது. மின்வாரியத்தில் பணி சுமை அதிகமாக இருப்பதால் நகராட்சி பகுதிகளில் உள்ள அதிக அளவு தெருவிளக்குகள் பராமரிப்பு இல்லாமல் இருள் சூழ்ந்த நிலை இருந்து வந்தது.
இதனால் நகராட்சி மக்கள் பிரதிநிதிகள் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் நகராட்சியே தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் அதன் அடிப்படையில் நகராட்சி ஊழியர்களை நியமித்து தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அதன் அடிப்படையில் நகராட்சிகளில் தெருவிளக்கு பராமரிப்பு செய்ய ஊழியர்கள் நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கினார்.
நகராட்சிகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட தொழிற்கல்வி பெற்றவர்களை மின்கம்பியாளர்களாகவும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை மின்கம்பி உதவியாளர்களாகவும் நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவுப்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் வேலைவாய்ப்புதுறை மூலம் பணி நியமனம் செய்யப் பட்டனர். ஆனால் பணி விதிகள் ஏதும் உருவாக்கப்படவில்லை. பின்பு நகராட்சி தெருவிளக்கு பராமரிப்பு பணி ஊழியர்கள் பணி விதிகள் மற்றும்பதவி உயர்வு வழங்க பல்வேறு கட்டபோராட்டங்கள் அரசு ஊழியர் சங்கத்துடள் இணைந்து நடத்தினர்.
அதன் விளைவாக கடந்த 2008-ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குதுறை அரசு ஆணை 113-ல் மின்கம்பியாளர்க ளுக்கு மின்பணியாளர் நிலை மின்கம்பியாளர்களாக வும் 1-ம், மின்கம்பி உதவியாளர்களுக்கு பயிற்சி அளித்து உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட பிரச்சினையில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தடை ஆணை வழங்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டது.
அதன்பிறகும் மின்கம்பியாளர்களுக்கும், மின் பணியாளர் நிலை 2ல் உள்ளவர்களுக்கும் முறை முன்னுரிமை பட்டியல் வெளியிட்டும் பதவி உயர்வு வழங்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அரசு ஆணை 10ல் மின்கம்பி யாளர் பணியிடம் இல்லாமல் செய்து விட்டனர்.
தற்போது மின்பணியாளர் நிலை 2ல் உள்ளவர்களுக்கு மட்டும் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மின்கம்பி யாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்த 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளநிலை உதவியாளர்கள் இன்று ஆணையாளர் வரை பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஆனால் 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்த மின்கம்பியாளர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட தொழில் பயிற்சி முடித்தும் இதுவரை பதவி வழங்கப்படவில்லை.
இதனால் நகராட்சி தெரு விளக்கு பராமரிப்பு ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. எனவே தமிழக முதல்வர் நகராட்சி தெரு விளக்கு பராமரிப்பு ஊழியர்கள் மீது கருணை கொண்டும் 35வருட பணியை கருத்தில் கொண்டும் விரைவில் ஒய்வு பெறும் நாட்களை நெருங்கி விட்ட ஊழியர்களுக்கு தற்போது நகராட்சியில் அதிக எண்ணிக்கையில் காலியாக உள்ள பணி மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என நகராட்சி மாநகராட்சி பொறியியல் பிரிவு ஊழியர்கள் சங்க தலைவர் ஐவன் மற்றும் பொதுச் செயலாளர் திருமூர்த்தி ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
- மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலை 108 இருந்து 150 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும்.
- 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வால்பாறை,
கோவை மண்டல தி.மு.க விவசாய அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் வால்பாறையில் நடைபெற்றது.
மாநில விவசாய அணி துணைத்தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுதாகரன் வரவேற்றார்.
மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலை 108 இருந்து 150 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும். கொப்பரை கொள்முதல் நிதியை 3 மடங்காக உயர்த்தி தர வேண்டும்.
பசுமை வாரியத்தின் 10.11.2021 தேதியிட்ட நடவடிக்கையை திரும்ப பெற நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
நீட் தேர்வை திரும்ப பெற நடந்து வரும் கையெழுத்து இயக்கத்திற்கு விவசாய அணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தர்மலிங்கம், குறிஞ்சி சிவகுமார், அல்லி பட்டி மணி, மதுரை கணேஷ், அப்துல் ஹமீது, டேம் வெங்கடேஷ், கோழிக்கடை கணேஷ், ஜே.பாஸ்கர், சுரேஷ்குமார் மற்றும் விவசாய அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.