search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Records"

    • பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் வலியுறுத்தினார்.
    • இத்தகைய பதிவுகளை சரிசெய்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் செயல்முறைகள் செயல் படுத்தப்பட உள்ளது.

    விருதுநகர்

    தமிழகத்தில் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் பாதுகாத்தல் மேம்படுத்துதல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றில் மிகுந்த முக்கியத்துவத்தை முதல்-அமைச்சர் அளித்து வருகிறார். முதல் கட்டமாக பழைய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை தனியார் நிறுவனங்களிடமிருந்தும், தனி நபர்களிடமிருந்தும் சேகரித்து தமிழ்நாடு ஆவண காப்பகத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது.

    வரலாற்று மதிப்புமிக்க பதிவுகள் நமது செழுமையான தேசிய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மாற்றும் விதமாக தனி நபர்களிடமிருக்கும் இத்தகைய பதிவுகளை சரிசெய்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் செயல்முறைகள் செயல்படுத்தப்பட உள்ளது.

    கலாசாரம் மற்றும் பராம்பரியத்தின் பெரிய தடயங்களை கால மாறுதல்கள் மற்றும் மனித அலட்சியம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு தனி யார்களிடம் உள்ள பதிவேடு களின் தேசிய பதிவேட்டில் இணைக்குமாறு தெரிவிக்க ப்பட்டுள்ளது. பதிவுகள் மேற்கொள்ளும் பொருட்டு கோவை, சேலம், திருச்சி ராப்பள்ளி, கடலூர், தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களில் மாவட்ட பதிவு அலுவலகங்கள் செயல்பட உள்ளது.

    எனவே விருதுநகர் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தினரிடமோ மற்றும் தனி நபர்களிடமோ பழமையான மற்றும் வராலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் ஏதேனும் இருப்பின் அப்பதிவுகளை மாவட்ட கலெக்டர் அலுவலக தொலைபேசி எண்கள் 04562-252601, 252602, 252603-மற்றும் 9445008161 ஆகியவற்றின் மூலம் மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியா ளரை (பொது) தொடர்பு கொண்டும் அல்லது அவர்களை நேரில் தொடர்பு கொண்டு தெரி விக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். 

    • சேலத்தில் நடைபெற்ற புதிய உலக கலாம் சாதனை போட்டியில் 150 ஆயுர்வேத மூலிகை செடிகளை அடையாளப்படுத்தி காட்டினார்.
    • மாறுவேடப்போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு தேசியஅளவில் சாதனை புரிந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளியில் 1-ம் வகுப்பு பயிலும் மாணவி சன்விகா சேலத்தில் நடைபெற்ற புதிய உலக கலாம் சாதனை போட்டியில் 150 ஆயுர்வேத மூலிகை செடிகளையும், அவற்றின் பெயர்களையும் 1 நிமிடம் 45 நொடிகளில் மிகத்தெளிவாக அடையாளப்படுத்தி காட்டினார்.

    மேலும் அன்று நடைபெற்ற மாறுவேடப்போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு தேசியஅளவில் சாதனை புரிந்தார். பல்வேறு சாதனைகள் புரிந்த சன்விகாவிற்கு"டேலண்ட் ஐகான்'' விருதினை கிரேட் சக்சஸ் அகாடமி வழங்கி கவுரவித்தது. மேலும் கராத்தே போட்டியில் தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

    மிகச்சிறிய வயதிலேயே பல்வேறு சாதனைகள் புரிந்த மாணவி சன்விகாவை பள்ளி தாளாளர்கார்த்திகேயன் ,முதல்வர் ,ஒருங்கிணைப்பாளர் , ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்தினர்.

    • பறவைகளின் பெயர் மற்றும் ஒலியினை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் கூறியுள்ளார்.
    • பல விருதுகளை பெற்ற சிறுமி கே.ஏ.ஆருண்யாவை பாராட்டி சால்வை அணிவித்தனர்.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சிசுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த கே.எஸ்.அருண் - எஸ்.ஐஸ்வர்யா ஆகியோரின் மகள் கே.ஏ.ஆருண்யா (வயது 3½).இன்னும் பள்ளிப்படிப்பை தொடங்கவில்லை. இந்த கல்வி ஆண்டில் தான் மங்கலம்-பூமலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு எல்.கே.ஜி. செல்ல உள்ளார். இந்த நிலையில் சிறுமி கே.ஏ.ஆருண்யா இதுவரை 7 விருதுகள் பெற்றுள்ளார்.

    அதன்படி வாரத்தின் 7 நாட்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கூறியுள்ளார். மேலும் மாதங்களின் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும்,நமது 4 தேசிய சின்னங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் , எண்கள் 1 முதல் 10 வரை தமிழ், ஆங்கிலம், இந்தியிலும், 14 விலங்குகள் மற்றும் பறவைகளின் பெயர் மற்றும் ஒலியினை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் கூறியுள்ளார்.

    இதற்காக சிறுமி கே.ஏ.ஆருண்யா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பெற்றுள்ளார். மேலும் பல விருதுகளை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26ந்தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் . இந்தநிலையில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி பல விருதுகளை பெற்ற சிறுமி கே.ஏ.ஆருண்யாவை பாராட்டி சால்வை அணிவித்தும்,பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.

    இதில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், மங்கலம் ஊராட்சி செயலாளர் ரமேஷ், மங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ரேவதிமுருகன்,ரபிதீன், எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த அபுதாஹிர் ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    ×