search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "most runs"

    உள்ளூர் ஒருநாள் தொடரில் 257 ரன்கள் குவித்த டி ஆர்சி ஷார்ட், 50 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெயரையும், உலக அளவில் 3-வது வீரர் என்ற பெயரையும் படைத்துள்ளார். #AustraliaCricket #DArcyShort #WAvQL
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான 50 ஓவர் ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. மேற்கு ஆஸ்திரேலியா - குயின்ஸ்லாந்து அணிகள் இன்று மோதின. முதலில் பேட்டிங் செய்த மேற்கு ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 387 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

    இந்த அணியில் மூன்றாவது வீரராக களமிறங்கிய டி ஆர்சி ஷார்ட், 148 பந்துகளில் 23 சிக்சர்கள் விளாசி 257 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 50 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் குவித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தையும் அவர் பிடித்துள்ளார்.

    கடினமான இலக்குடன் களமிறங்கியுள்ள குயின்ஸ்லாந்து அணி 25 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் போட்டிகளில் 13 முறை 200 ரன்களுக்கும் அதிகமாக குவித்து சாதனை படைத்துள்ளது. #RoyalChallengersBangalore #IPL2018 #VIVOIPL

    பெங்களூர்:

    ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்து கொண்டது. 

    இப்போட்டியில், பெங்களூர் அணி புதிய சாதனையை படைத்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் 13-வது முறையாக 200 ரன்களை கடந்த முதல் அணி என்ற சாதனையை பெங்களூர் அணி படைத்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற பெருமையும் பெங்களூர் அணியிடமே உள்ளது. பெங்களூர் அணி, புனே அணிக்கு எதிராக எடுத்த 272 ரன்களே ஐபிஎல் போட்டிகளில் பதிவான அதிகபட்ச ஸ்கோராகும். 



    பெங்களூர் அணியை தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி உள்ளது. சென்னை அணி 11 முறை 200 ரன்களை கடந்துள்ளது. அதில் இந்த சீசனில் 4 முறை 200 ரன்களை கடந்துள்ளது. மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி 9 முறை 200 ரன்களை கடந்து அந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. #RoyalChallengersBangalore #IPL2018 #VIVOIPL
    ஐபிஎல் 11-வது சீசனில் அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் பட்டியலில் பெரும்பாலான இடங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். #CSK #msdhoni
    சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு ஆண்டுகள் தடைக்குப்பின் தற்போது 11-வது சீசனில் களம் இறங்கியுள்ளது. இரண்டு ஆண்டு தடையால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்த சீசனுக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 30 வயதிற்கு மேற்பட்ட அனுபவ வீரர்களை குறிவைத்து எடுத்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய ஹர்பஜன் சிங் மற்றும் அம்பதி ராயுடு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடிய ஷேன் வாட்சன் ஆகியோரை எடுத்தது.

    இந்த மூன்று பேரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக அம்பதி ராயுடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். யாரும் எதிர்பார்க்காத வகையில் கேப்டன் எம்எஸ் டோனி கடந்த 9 சீசனை விட ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகிறார். இதனால் அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.



    அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் 3 இடங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் ஆக்கிரமித்துள்ளது. அம்பதி ராயுடு 535 ரன்களுடன் 4-வது இடத்தில் உள்ளார். ஷேன் வாட்சன் 424 ரன்களுடன்  8-வது இடத்திலும், எம்எஸ் டோனி 413 ரன்களுடன் 9-வது இடத்திலும் உள்ளனர். முதல் 10 இடத்தில் 3 இடங்களை கைவசப்படுத்தியுள்ளனர்.

    சென்னை அணி பிளே-ஆஃப்ஸ் சுற்றை உறுதியாக்கியுள்ளதால் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பட்லர், கேஎல் ராகுல் ஆகியோரை இந்த மூன்று பேரும் பின்னுக்குத் தள்ள வாய்ப்புள்ளது.



    அதேபோல் அதிக சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில் அம்பதி ராயுடு 29 சிக்சர்களடன் 3-வது இடத்திலும், எம்எஸ் டோனி 29 சிக்சர்களடன் 5-வது இடத்திலும், வாட்சன் 26 சிக்சர்களுடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.
    ×