search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விராட் கோலி படைத்த சாதனைகள்
    X

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விராட் கோலி படைத்த சாதனைகள்

    • சென்னையைப் பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி 9-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
    • நடப்பு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

    பெங்களூரு:

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை அணியை வீழ்த்து 7-வது வெற்றியை பெற்று 14 புள்ளிகளை எட்டியது. புள்ளிகளில் சம அளவில் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் சென்னையை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி 9-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

    சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு வீரர் விராட்கோலி 47 ரன்கள் எடுத்தார். ஐ.பி.எல். தொடரில் இந்த மைதானத்தில் 89 ஆட்டங்களில் ஆடி இருக்கும் அவர் 3,005 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டியில் ஒரே மைதானத்தில் 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

    மேலும், விராட் கோலி 33 ரன்னை தொட்டபோது ஒட்டுமொத்த டி20 போட்டியில் இந்திய மண்ணில் 9,000 ரன் மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்திய மண்ணில் விராட் கோலி மொத்தம் 268 டி20 போட்டிகளில் ஆடி 9,014 ரன்கள் எடுத்துள்ளார்.

    நடப்பு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 37 சிக்சர்கள் அடித்துள்ளார்.

    Next Story
    ×