search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congratulations"

    • இதை பார்த்த ரசிகர்கள், நண்பர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்
    • "வாழ்நாள் முழுவதும் திருமண ஜோடிகள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்' என்று தெரிவித்து உள்ளார்.

    நடிகர் சித்தார்த் 'ஆயுத எழுத்து' படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பாய்ஸ், அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட படங்களில் நடித்து முக்கிய நடிகரானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'சித்தா' படம் ரசிகர்களிட நல்ல வரவேற்பு பெற்றது.

    இந்நிலையில் நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ்வை காதலித்து வந்தார். இவர் செக்க சிவந்த வானம், காற்று வெளியிடை, சைக்கோ போன்ற தமிழ் படங்களில் நடித்து உள்ளார்.

    இந்நிலையில் சித்தார்த்தும், அதிதி ராவும் தெலுங்கானாவில் ஒரு கோவிலில் ரகசிய திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இது திருமணம் அல்ல, நிச்சயதார்த்தம் என்று இருவரும் பதில் அளித்து உள்ளனர். இது வைரலாக பரவியது.

    இதை பார்த்த ரசிகர்கள், நண்பர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவும் சித்தார்த்- அதிதி ஜோடிக்கு இணைய தளத்தில் வாழ்த்துக்கள் கூறி உள்ளார். அதில் "வாழ்நாள் முழுவதும் திருமண ஜோடிகள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்' மனமாற வாழ்த்துக்கள் என்று தெரிவித்து உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரசிகர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான வேண்டுதல்கள், வாழ்த்து அட்டைகளை வெளியிட்டு உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
    • உலககோப்பை மாதிரியை 11 பேர் கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் இணைந்து 11மணி நேரம் உழைத்து தயாரித்து உள்ளனர்.

    திருச்சி:

    உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா வெற்றி பெற கிரிக்கெட் ரசிகர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான வேண்டுதல்கள், வாழ்த்து அட்டைகளை வெளியிட்டு உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

    திருச்சியில் ரசிகர்கள் சற்று வித்தியாசமாக 15 அடி பிரம்மாண்டமான கிரிக்கெட் உலகக்கோப்பை மாதிரி செய்து காட்சிக்கு வைத்துள்ளனர். அத்துடன் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து 'ஆல் தி பெஸ்ட் இந்தியா' என்ற வாசகத்துடன் கூடிய பேனரும் வைக்கப்பட்டு உள்ளது.

    திருச்சி மேலப்புலிவார்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதை நிறுவி உள்ளனர். இந்த உலககோப்பை மாதிரியை 11 பேர் கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் இணைந்து 11மணி நேரம் உழைத்து தயாரித்து உள்ளனர்.

    லட்சுமி நரசிம்மன் தலைமையிலான இந்தக் குழுவினர் பிரம்மாண்டமான உலகக் கோப்பை வைத்து வாழ்த்து தெரிவிப்பது இத்துடன் 3 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோப்பை திருச்சி, மேலப்புலிவார்டு ரோடு இப்ராஹிம் பூங்கா எதிர்வரிசையில் ஒரு வணிக வளாகத்தின் முன்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பலரும் இதை ஆர்வத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

    ஏற்கனவே திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் இந்தியாவில் நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக் கோப்பையையொட்டி 60 ஆண்டு காலம் சேகரித்து பாதுகாத்து வைத்திருந்த பழங்கால நாணயங்களை கொண்டு உலகக்கோப்பையை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கண்காட்சியில் கிரிக்கெட் உலக கோப்பையை வாழ்த்தும் வகையில் 1975-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை உள்ள இந்திய நாணயங்களை கொண்டு திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக செயலாளர் பத்ரி நாராயணனால் உருவாக்கப்பட்ட உலக கோப்பை மத்திய நூலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நாணயங்களில் இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ், திருச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது இந்த நாணயங்களால் வடிவமைக்கப்பட்ட உலக கோப்பை அருகே கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • வி.பி.எம்.பி.வடிவேல்-வி.சுதா இல்ல திருமண விழாவில் மணமக்களை திரளானோர் வாழ்த்தினர்.
    • சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நிச்சயதார்த்தம் நடந்தது.

    மதுரை

    மதுரை மாவட்டம் உசி–லம்பட்டி தாலுகா கருமாத் தூர் கிராமம் வடக்கம்பட்டி தொழிலதிபர் வி.பி.எம்.பி.வடிவேல்-வி.சுதா தம்ப தியரின் மகள் வி.கீர்த்திகா–வுக்கும், ஈரோடு குன்னூர் தொழிலதிபர் வி.மகேஸ்வ ரன்-எம்.பானுமதி ஆகியோ ரது மகனுமான எஸ்.வி.எம்.அருண் என்பவ ருக்கும் பெரியோர்களால் திரும ணம் நிச்சயிக்கப்பட்டது.

    அதன்படி வி.கீர்த்திகா -எஸ்.வி.எம்.அருண் ஆகி யோரது திருமண விழா நேற்று முன்தினம் (10-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கருமாத் தூர் மூணாண்டிபட்டி, மதுரை தேனி மெயின் ரோடு, அருள் ஆனந்தர் கல்லூரி அருகிலுள்ள வி.கே.எஸ்.வடிவேல் ஹைடெக் மகாலில் நடைபெற்றது.

    விழாவுக்கு எட்டுநாடு இருபத்தி நான்கு கிராமம், கருமாத்தூர் பதினெட்டுப் பட்டி கிராம பொதுமக்கள், வடக்கம்பட்டி இரண்டு தகப்பன் மக்கள் தலைமை தாங்கினர். வ.பால்ச்சாமி நாடார்-பா.மஞ்சனை அம்மாள் மகன்கள், தொழி லதிபர்கள் பி.துரைப்பாண்டி -டி.பெத்தம்மாள், பி.வெள்ளையப்பன்-வி.அனுசுயா தேவி, ஈரோடு, குன்னூர் நாடார் உறவின் முறை சங்க தலைவர் எஸ்.வேலுச்சாமி நாடார்-வி.காளீஸ்வரி மற்றும் தாய்மா மன்கள் முன்னிலை வகித்த னர்.

    திருமண விழாவில் அரசி யல் கட்சியினர், தொழிலதி பர்கள், உற்றார், உறவினர் கள், கல்வியாளர்கள், முக் கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    முன்னதாக சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நிச்சயதார்த்தம் நடந்தது. அன்று இரவு டி.வி. புகழ் மூக்குத்தி முருகன், பூஜா, ஸ்ரீநிதி, மீத்துஸ்ரீ, ஸ்ரீநிதி ஆனந்த் ஆகியோர் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவுக்கான ஏற்பாடு களை வி.கே.எஸ்.பட்டாசு தொழிற்சாலை தொழிலா ளர்கள், வி.கே.எஸ். கம்பி மத்தாப்பு கம்பெனி தொழி லாளர்கள், வி.கே.எஸ். விவசாய பண்ணை தொழி லாளர்கள், வி.கே.எஸ். வடி வேல் ஹைடெக் திருமண மண்டப தொழிலாளர்கள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • மாறுபாடற்ற உறுதியான நிலைப்பாடுகளால் லல்லுபிரசாத் ஒரு சமரசமற்ற சமூகநீதிப் போராளியாகத் திகழ்கிறார்.
    • பல்லாண்டுகள் அவர் மக்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வட இந்தியாவில் மண்டல் அரசியலை வலுப்படுத்த வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    முதுபெரும் அரசியல் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவருமான லல்லுபிரசாத் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்.

    மனிதர்களின் மரியாதைக்கு (இஜ்ஜத்) அவர் அளித்த முக்கியத்துவமானது அவரது அரசியலை தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்துக்கு மிக நெருக்கமானதாக்குகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடானாலும், சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காகக் குரல் கொடுப்பதானாலும், மதச்சார்பின்மையை நிலைநிறுத்துவதானாலும் தாம் எடுத்த மாறுபாடற்ற உறுதியான நிலைப்பாடுகளால் லல்லுபிரசாத் ஒரு சமரசமற்ற சமூகநீதிப் போராளியாகத் திகழ்கிறார்.

    அவரது 76-வது பிறந்தநாளில், மேலும் பல்லாண்டுகள் அவர் மக்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வட இந்தியாவில் மண்டல் அரசியலை வலுப்படுத்த வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பரமக்குடி யாதவா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்
    • பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர்.

    பரமக்குடி

    10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவில் பரமக்குடி யாதவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி யுவஸ்ரீ-496 மதிப்பெண்களும், மாணவர் அபிஷேக்-494 மதிப்பெண்களும் பெற்றனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்விக்குழு சார்பில் பரிசு வழங்கி பாராட்டினர்.

    இதில் கல்வி குழுத் தலைவர் மலேசியாபாண்டியன், கல்விக்குழு செயலாளரும், தாளாளருமான அழகர்சாமி, பொருளாளர் கண்ணன், துணைத் தலைவர் பாஸ்கரன், துணைச் செயலாளர் செல்லக்காரி, கல்வி குழு உறுப்பினர்கள் போஸ், சந்திரசேகரன், ஹரிகிருஷ்ணன், முதல்வர் பூமாதேவி மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர்.

    • தொழில்துறை அமைச்சராக பொறுப்பே ற்றுள்ள நண்பர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு வாழ்த்துகள்.
    • அவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

    நாகப்பட்டினம்:

    நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியி ருப்பதாவது, தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நண்பர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு வாழ்த்துகள்.

    கடந்த 2 ஆண்டுகளாக சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவில் அவர் தலைமையில் பயணித்ததில் அவரது செயல் திறனையும், கருத்தியல் உறுதியையும் கண்டு வியந்தேன். டெல்டா பகுதிக்கு அமைச்சர் இல்லையே என்ற குறை நீங்கியது.

    பின்தங்கி யுள்ள நாகப்ப ட்டினம் மாவட்ட த்திற்கு அதிக தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தர அவர் பாடுபடு வார் என்று நம்புகிறேன். அவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

    • வாழைக்கொல்லை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றன
    • இச்செயலை ஊர் பொதுமக்கள் வரவேற்றதுடன் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் வாழைக்கொல்லை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றன. தலைவர் புஷ்பராஜ் தலைமையில் ஆசிரியர்கள் கருணாகரன், அன்பகம், , வள்ளி, கீதா கிருத்திகா ஆகியோர் தமிழக அரசின் அறிவுரையின் படியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் , தொடக்கக் கல்வி,மற்றும் வட்டார கல்வி அலுவலர்களின் வழிகாட்டுதலின்படி 2023-2024 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் பொருட்டு வாழைக்கொல்லை குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாக வீதி வீதியாக சென்று மாணவர்களின் இல்லங்களிலேயே மாணவர்கள் சேர்க்கையை செய்தனர். இச்செயலை ஊர் பொதுமக்கள் வரவேற்றதுடன் பாராட்டுகளையும் தெரிவித்தனர்

    • விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் எஸ்.ஆர்.தங்கப்பாண்டி இல்ல திருமணம் நாளை மறுநாள் நடக்கிறது.
    • இதில் எம்.எல்.ஏக்கள்-முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள்.

    மதுரை

    மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் எஸ்.ஆர். தங்கப்பாண்டி இல்ல திருமணம் மதுரையில் நாளை மறுநாள் நடக்கிறது.

    நடிகர் விஜய் மக்கள் இயக்க மதுரை மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர். தங்கபாண்டி - அருணா தேவி ஆகியோரது மகன் எஸ். ஆர். டி. சஞ்சய், மதுரை கரிமேடு சரவணன்-சத்யா ஆகியோரது மகள் லத்திகா. இவர்களது திருமணம் நடிகர் விஜய்-சங்கீதா நல்லாசியுடன், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. புஸ்ஸி ஆனந்து நல்வாழ்த்துக்களுடன் மதுரை எல்லீஸ் நகர் 70 அடி ரோட்டில் உள்ள எம்.ஆர்.சி. மஹாலில் நாளை மறுநாள் 23-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

    மணமக்கள் சஞ்சய்-லத்திகா திருமண விழாவில் எம்எல்ஏக்கள் ஆர்.பி. உதயகுமார், ராஜன்செல்லப்பா, புதூர் பூமிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.கே. ராஜேந்திரன், திரைப்பட தயாரிப்பாளர் ஜி.என். அன்புசெழியன் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

    இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் எஸ்.ஆர்.தங்கபாண்டி குடும்பத்தினர் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • சிறந்த சேவையை பாராட்டி திருவாரூரில் நடந்த குடியரசு தின விழாவில் பாராட்டு.
    • சுதந்திர ்போராட்ட தியாகி ஜாம்பவானோடை நாராயணசாமி தேவரின் பேத்தி.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் ரஞ்சனி பிரியா. இவரது சிறந்த சேவையை பாராட்டி திருவாரூரில் நடந்த குடியரசுதின விழாவில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் சிறந்த மருத்துவருக்கான பாராட்டு சான்றிதழை ரஞ்சனி பிரியாவிடம் வழங்கினார்.

    விருது பெற்ற ரஞ்சனி பிரியா, சுதந்திரப ்போராட்ட தியாகி ஜாம்பவானோடை நாராயணசாமி தேவரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

    • 14 வயதுக்குட்பட்ட வில்வித்தை போட்டியில் 8-ம் வகுப்பு மாணவன் நித்திக் 2-ம் இடம்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமது வாழ்த்து தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்கள்,

    நாகை மாவட்டம் வேதாரண்யம் குரவப்புலத்தில் மாநில அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் பத்து வயதுக்குட்பட்ட பிரிவில் வில்வித்தை போட்டியில் திருவாரூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி 5ம் வகுப்பு பயிலும் ஹர்த்திக் ராமன், இரண்டாம் இடம் பிடித்துள்ளார், அதேபோன்று 14 வயதுக்குட்பட்ட பிரிவில் வில்வித்தை போட்டியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவன் நித்திக் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்,

    அதே போன்று காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவன் அபினவ் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறார்கள்.

    இவர்களுக்கு பள்ளி தலைவர் முனைவர் வெங்கட்ராஜுலு, செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி முனைவர் நிர்மலா ஆனந்த், தாளாளர் விஜயசுந்தரம், முதல்வர். ஜி.சுமித்தரா, துணை முதல்வர் மா.ஆனந்தி, நிர்வாக அலுவலர், சீதா கோபாலன், வில்வித்தை பயிற்சியாளர். குணசேகரன், மற்றும் உடற்கல்வி பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    • வாடிப்பட்டி அருகே பள்ளி தலைமை தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
    • முடிவில் ஆர்.சி. அமலி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.


    வாடிப்பட்டி


    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் சி.எஸ்.ஐ. பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமாருக்குவாடிப்பட்டி ஒன்றிய அனைத்து உதவி பெறும் பள்ளிகள் சார்பாக பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு சோழவந்தான் எபினேசர் துரை ராஜ் தலைமை தாங்கினார். கென்னடி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார் வரவேற்றார்.


    இந்த விழாவில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஷாஜகான், அகிலத்து இளவரசி, ஜெயசித்ரா, ராணி குணசீலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். வாடிப்பட்டி அனைத்து உதவி பெறும் பள்ளிகள்சார்பாக தலைமையாசிரியர் ராபின்சன்செல்வகுமாருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் ஆர்.சி. அமலி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டாலின் நன்றி கூறினார்.


    வேதாரண்யத்தில் பிளஸ்-2 மாணவர்கள் தங்கள் வகுப்பறைக்கு வர்ணம் தீட்டி ஆசிரியர்களின் ஆசியுடன் பிரியா விடை பெற்றனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கடிநெல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 301 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் இந்த ஆண்டு பிளஸ்2 வகுப்பில் 58 மாணவ- மாணவிகள் படித்து தேர்வு எழுதி உள்ளனர்.

    இந்த ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தங்கள் ஆசிரியருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்து மாணவ, மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தலா ரூ.300 வீதம் அளித்து ரூ.15,000 சேகரித்தனர்.

    இந்த தொகையில் தாங்கள் படித்த பள்ளியில்  2 வகுப்பறைகளுக்கு புதிதாக மாணவ-மாணவிகளே பெயிண்ட் அடித்து சுவர்களில் திருக்குறளையும் எழுதி புதுப்பொலிவு பெறச் செய்தனர்.

    ்மேலும் தங்களுக்கு பாடம் நடத்திய அனைத்து ஆசிரிர்்களுக்கும் பாராட்டு விழா நடத்தினர். விழாவிற்கு மாணவி மணிபாரதி தலைமை தங்கினார். மாணவன் ராஜதுரை வரவேற்றார்.

    விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொன்தர்மதுரை, பொரு ளாளர் ராமலிங்கம்,தலைமை யாசிரியர் பெருமாள், ஆசிரியர்கள் மதிவாணன், வடிவேல், வேம்பையன், கலை இலக்கிய பெருமன்ற நாகை மாவட்ட செயலாளர் அம்பிகாபதி ஆகியோர் கலந்து கொண்டு மாணவி களை வாழ்த்தினர். நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர்.தற்போது பள்ளிகளில் மாணவர்கள் பெஞ்ச், நாற்காலிகளை உடைப்பதும், ஆசிரியர்களை அடிக்க செல்வதும் ஆங்காங்கே  நடந்து   வருகிறது.  இதனால் பெற்றோர் மட்டுமல்லாது அனைத்து தரப்பிலும் இச்சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

    இந்நிலையில் இப்பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த வகுப்பறையை தூய்மைப்ப டுத்தியும், வண்ணம் தீட்டி, ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி அவர்களின் ஆசியுடன் பிரியா விடை பெற்ற சம்பவம் அனைத்து தரப்பிலும் பாராட்டுறையை பெற்றள்ளது. தெரிவிக்கும் நிகழ்ச்சி மற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

    பாராட்டு விழா நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் மற்றுகிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    ×