சித்தார்த் - அதிதி திருமணம் : வாழ்த்து சொன்ன நயன்தாரா

இதை பார்த்த ரசிகர்கள், நண்பர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்"வாழ்நாள் முழுவதும் திருமண ஜோடிகள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்' என்று தெரிவித்து உள்ளார்.
சித்தார்த் - அதிதி திருமணம் : வாழ்த்து சொன்ன நயன்தாரா
Published on

நடிகர் சித்தார்த் 'ஆயுத எழுத்து' படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பாய்ஸ், அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட படங்களில் நடித்து முக்கிய நடிகரானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'சித்தா' படம் ரசிகர்களிட நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ்வை காதலித்து வந்தார். இவர் செக்க சிவந்த வானம், காற்று வெளியிடை, சைக்கோ போன்ற தமிழ் படங்களில் நடித்து உள்ளார்.

இந்நிலையில் சித்தார்த்தும், அதிதி ராவும் தெலுங்கானாவில் ஒரு கோவிலில் ரகசிய திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இது திருமணம் அல்ல, நிச்சயதார்த்தம் என்று இருவரும் பதில் அளித்து உள்ளனர். இது வைரலாக பரவியது.

இதை பார்த்த ரசிகர்கள், நண்பர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவும் சித்தார்த்- அதிதி ஜோடிக்கு இணைய தளத்தில் வாழ்த்துக்கள் கூறி உள்ளார். அதில் "வாழ்நாள் முழுவதும் திருமண ஜோடிகள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்' மனமாற வாழ்த்துக்கள் என்று தெரிவித்து உள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com