search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார்த்திகை தீப திருவிழா- செங்கோட்டை பகுதிகளில் விற்பனைக்கு குவிந்த விளக்குகள்
    X

    செங்கோட்டைக்கு விற்பனைக்கு வந்துள்ள அகல் விளக்குகள்.


    கார்த்திகை தீப திருவிழா- செங்கோட்டை பகுதிகளில் விற்பனைக்கு குவிந்த விளக்குகள்

    • செங்கோட்டை பகுதிகளில் ஒரு ரூபாய் முதல் ரூ.500 வரை விளக்குகள் விற்கப்படுகின்றன.
    • 2 ஆண்டுகளுக்கு முன்பு 50 பைசாவிற்கு விற்கப்பட்ட அகல்விளக்குகள் தற்போது ரூ.3-க்கு விற்கப்படுகிறது.

    செங்கோட்டை:

    கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு செங்கோட்டை பகுதிகளில் வெளி மாநிலங்களில் இருந்து தற்போது விற்பனைக்காக அகல் விளக்குகள் குவிந்துள்ளன.

    குறிப்பாக ரெடிமேட் பீங்கான் விளக்கு, மகா லெட்சுமி விளக்கு, நாகராஜா விளக்கு, கும்ப விளக்கு, தாமரை விளக்கு, அடுக்கு விளக்கு, கோபுர விளக்கு, தேங்காய் விளக்கு, பிரதோஷ விளக்கு, உருளி விளக்கு, ஸ்ரீதேவி விளக்கு என பல வகையான விளக்குகள் தள்ளுவண்டியில் விற்பனைக்கு வந்துள்ளன. ஒரு ரூபாய் முதல் ரூ.500 வரை விளக்குகள் விற்கப்படுகின்றன.

    இதுகுறித்து தள்ளு வண்டியில் விளக்குகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் மண்பாண்ட தொழிலாளி ஒருவர் கூறியதாவது:-


    "கார்த்திகை மண் விளக்குகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. நாங்கள் விருத்தாசலம், புதுச்சேரி, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம். மண் விலை அதிகரித்துள்ளதால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்ட அகல்விளக்குகள் ரூ.3-க்கு விற்கபடுகிறது.

    மேலும் மண் விளக்கு ஒரு ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்ற மண் விளக்கு 75 ரூபாயாகவும் அதிகரித் துள்ளது.விலை ஏற்றத்தால் பீங்கான் விளக்குகளுக்கு பொதுமக்களிடத்தில் அதிக வரவேற்பு கிடைக்கிறது.

    எங்களிடம் ரூ.3 முதல் ரூ.500 வரையிலான விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. எங்களிடம் சில்லரை விற்பனைக்காக வியாபாரிகள் மொத்தமாக வாங்கி கிராமங்களுக்கு கொண்டு சிறுகடைகளில் விற்பனை செய்வதால் அதிகளவில் லாபம் கிடைப்பதால் இதனை நம்பி ஏராளமானோர் இந்த சீசன் தொழிலை நம்பி களத்தில் இறங்கி உள்ளதாக கூறினார்.

    மெழுகு, பீங்கானால் ஆன ரெடிமேட் விளக்குகளின் வருகையால் மண்ணால் ஆன விளக்குகளின் விற்பனை மந்தமாகியுள்ளது. வீடுகளுக்கும் ரெடிமேட் விளக்குகளேயே வாங்கிச் செல்கின்றர்.

    மேலும் வழக்கமாக நகர்புறத்தில் மட்டுமே விற்பனையான ரெடிமேட் பீங்கானால் விளக்குகள் தற்போது கிராமங்களிலும் அதிகமாக விற்பனையாகிறது என்றார்.

    Next Story
    ×