என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Day of Persons with Disabilities"

    • முதல்-அமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித் தொகையை ரூ.1500 ஆக உயர்த்தி உள்ளார் என்று எம்.எல்.ஏ. பேசினார்.
    • மாற்றுத்திறனாளிகள் மீது முதல்-அமைச்சர் தீராத பற்று கொண்டு உள்ளதாகவும் எம்.எல்.ஏ. கூறினார்.

    சுரண்டை:

    சுரண்டை ஆலடிப் பட்டியில் உள்ள நிலா மனவளர்ச்சி குன்றிய இல்லத்திற்கு மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பழனி நாடார் எம்.எல்.ஏ. சென்று மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித் தொகையை ரூ.1500 ஆக உயர்த்தி உள்ளார். மாற்றுத்திறனாளிகள் இயற்கை அழகை கண்டு ரசிக்கும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் சாய்வு தளம் அமைத்துள்ளார்.

    ஊனமுற்றோர் என்ற வார்த்தையை நீக்கி மாற்றுத்திறனாளிகள் என அழைத்த பெருமை முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரையே சேரும்.மேலும் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பள்ளி குழந்தைகள் மீது தீராத பற்று கொண்டு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். கல்லூரி படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார். பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீது முதல்-அமைச்சர் தீராத பற்று கொண்டு உள்ளார் என பேசினார்.

    நிகழ்ச்சியில் பிரியா அழகுசுந்தரம், நிர்வாகி பால கணேஷ்,சிறப்பு ஆசிரியர் மதுபாலா,அமுதா, தெய்வேந்திரன்,ராஜ்குமார், செய்தி மாடசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • செங்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் ஒருமைச்சாவடி விழிப்புணா்வு கண்காட்சி முகாம் நடந்தது.
    • முகாமை நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை வாகை மரத்திடல் காந்தி சிலை முன்பு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பில் செங்கோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒருமைச்சாவடி விழிப்புணா்வு கண்காட்சி முகாம் நடந்தது. நகர்மன்ற தலைவா் ராம லெட்சுமி தலைமை தாங்கினார். முன்னாள் நகர்மன்ற துணை தலைவா் கணேசன் நகர்மன்ற உறுப்பினா் ராஜ்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனா்.

    செங்கோட்டை ஒன்றிய களப்பணியாளா் முத்துலெட்சுமி வரவேற்று பேசினார். அதனைத்தொடா்ந்து விழிப்புணா்வு கண்காட்சி முகாமை நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னா் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு பணியின் திட்ட ஒருங்கிணைப்பாளா் இசக்கிமுத்து மாற்றுதிறனா ளிகளுக்கு அரசு அளிக்கும் நலத்திட்ட உதவிகள் பெற மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும், அரசின் நலத்திட்டங்கள், அடையாள அட்டை பெறுவது எப்படி, சுயதொழில் உபகரணங்கள் பெற செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கி கூறினார்.

    முகாமில் விழிப்புணா்வு காட்சிகள் அடங்கிய பதாகைகள் வைக்க ப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் செங்கோட்டை ஒன்றிய களப்ப ணியாளா் இந்துமதி, மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். அமர்சேவா சங்கத்தின் சிறப்பு பள்ளி ஆசிரியா் ஈஸ்வரி நன்றி கூறினார்.

    ×