search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pune"

    • ரத்தம் சொட்ட சொட்ட இந்த விவகாரத்தை வீடியோவாக பேசி அப்பெண் வெளியிட்டுள்ளார்.
    • அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

    புனேவில் ஜெரலின் டி சில்வா என்ற பெண் தனது 2 குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் பின்னே வந்த கார் இவரை முந்தி செல்ல முயற்சித்தது. ஆனால் முந்தி செல்ல முடியாமல் 2 கிமீ தூரம் ஸ்கூட்டரின் பின்புறம் கார் சென்றுள்ளது. இதனால் காரை ஓட்டி வந்த முதியவர் கோவமடைந்துள்ளார்.

    பின்பு ஸ்கூட்டருக்கு முன்பு காரை நிறுத்தி இறங்கிய முதியவர் கோபத்துடன் அப்பெண்ணின் முடியை பிடித்து இழுத்து முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் அப்பெண்ணின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது.

    பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட இந்த விவகாரத்தை வீடியோவாக பேசி அப்பெண் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

    வீடியோ வைரலானதை அடுத்து, தாக்கிய முதியவர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

    • தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் மகாராஷ்டிரா அரசு என்ற பலகையும், சிவப்பு சைரன்விளக்கையும் பயன்படுத்தி வந்தார்.
    • இவரது தாய் கையில் துப்பாக்கியுடன் விவசாயிகளை மிரட்டும் பழைய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது

    மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பூஜா கேத்கர் நியமிக்கப்பட்டிருந்தார். யு.பி.எஸ்.சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்ற இவர் பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்தது.

    இவர் தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் மகாராஷ்டிரா அரசு என்ற பலகையும், சிவப்பு சைரன்விளக்கையும் பயன்படுத்தி வந்தார். இதையடுத்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக பூஜா புனேயில் இருந்து வாசிம் மாவட்டத்திற்கு பணி இடம் மாற்றம் செய்யப்பட்டார்.தேர்வு செயல்பாட்டில் சலுகைகள் பெற அவர் தன்னை பார்வை பாதிக்கப்பட்டவர் என்று குறப்பிட்டிருந்தார் என்று  குற்றச்சாட்டும் எழுந்தது.

    இதைப்போல பூஜாவின் தந்தை திலீப்கேத்கர் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அகமத் நகரில் வஞ்சித் பகுஜன்கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்கப்பட்டார். அப்போது வேட்பு மனுத்தாக்கலின் போது தனக்கு ரூ.43 லட்சம் ஆண்டு வருமானம் இருப்பதாகவும், 40 கோடி சொத்து இருப்பதாகவும் திலீப் கணக்கு காட்டி இருந்தார். ரூ.40 கோடி சொத்து வைத்துள்ளவர் கிரீமிலேயரில் இல்லை என்று சான்று பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் அரசியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது தாய் கையில் துப்பாக்கியுடன் விவசாயிகளை மிரட்டும் பழைய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுதொடர்பாக பூஜாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பூஜாகேத்கர் மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் குழுவை அமைத்து உத்தர விட்டுள்ளது. இந்நிலையில் பூஜாவின் ஆடி சொகுசு காரை புனே போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். திருட்டு வழக்கில் சிக்கிய தனது உறவினர் ஒருவரை விடுவிக்கவும் பூஜா போலீசை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது

    • குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
    • அவர்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. நாங்கள் தான் கஷ்டத்தை அனுபவிக்க போகிறோம்' என்று பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

    பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வெளிப்படையாகவே இந்த வித்தியாசத்தை அன்றாடம் நம்மால பார்க்கவும் உணரவும் முடிகிறது. அந்த வகையில் சாலைகளில் பணக்காரர்கள் மற்றும் பெரும் புள்ளிகளின் சொகுசு கார்கள் இடித்து சாமானிய மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன.

    தற்போது மும்பையில் முக்கிய புள்ளி ஒருவரின் மகன் குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் 24 வயதுடைய அந்த இளைஞர் மிஹிர் ஷாம் என்பதும் மகாராஷ்டிர முதலவர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.

    தற்போது மிஹிர் தப்பித்த நிலையில் அவரின் தந்தை ராஜேஷ் ஷாவைவும் குடும்ப டிரைவரையும் போலீசார் கஸ்டடியில் எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் மிஹிர் ஷாமை முக்கிய குற்றவாளியாக குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை மும்பையின் உரோலி பகுதியில் உள்ள கோலிவாடா பகுதியில் தனது தம்பதி சென்ற இருசக்கரவாகனத்தின்மீது மிஹிர் ஷாம் ஓட்டிவந்த பிஎம்டபில்யூ சொகுசு கார் பின்னால் இருந்து மோதியதில் தூக்கிவீசப்பட்டு கார் பானட்டில் சிக்கி பெண் 100 மீட்டருக்கு இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார்.

    பெண்ணின் கணவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது விபத்து குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், 'கார் மோதியதில் நான் ஸ்கூட்டரில் இருந்து இடது புறமாக விழுந்துவிட்டேன். எனது மனைவி காரின் முன்புறம் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. நான் இப்போது என்ன செய்வேன். இவர்களெல்லாம் [விபத்து ஏற்படுத்திய இளைஞர் மற்றும் அவரது தந்தை] பெரிய ஆட்கள். அவர்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. நாங்கள் தான் கஷ்டத்தை அனுபவிக்க போகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விபத்து துரதிஷ்டவசமானது, சட்டம் தன் கடமையைச் செய்யும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தப்பியோடிய மிஹிரை தேடும் பணியில் போலீஸ் இறங்கியுள்ளது. 

     

    • 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • இந்த விபத்தில் அந்த சிறுவனை காப்பாற்ற மறைமுக வேலைகள் நடைபெற்றன.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து வழக்கில் சிறுவன் குற்றம் சாட்டப்பட்டவர், அவர் ஜாமினில் வெளிவந்திருந்தார். இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்த விபத்தில் அந்த சிறுவனை காப்பாற்ற மறைமுக வேலைகள் நடைபெற்றன. ஆனால் பொதுமக்கள், ஊடகங்கள் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக அந்த சிறுவனின் ஜாமின் ரத்து செய்யப்பட்டு சிறார் முகாமில் அடைக்கப்பட்டுள்ளான். அவரது தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காவல் அதிகாரிகள் இருவர் கடமை தவறியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் அந்த சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டார். கார் டிரைவர்தான் இந்த விபத்தை ஏற்படுத்தினார் என இந்த வழக்கை திசைதிருப்ப அந்த சிறுவனின் குடும்பத்தினர் சதி செய்துள்ளனர். இது தொடர்பாக டிரைவரின் குடும்பத்தினர் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    இதனையடுத்து புனே சொகுசு கார் விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை கண்காணிப்பு இல்லத்தில் தொடர்வது சட்டவிரோதமானது என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த சிறுவனின் காவலை அவரது தந்தை வழி அத்தையிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், புனே சொகுசு கார் விபத்தில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் தந்தை மற்றும் தாத்தா இருவருக்கும் புனே நீதிமன்றம் ஜாமினில் வழங்கியுள்ளது.

    • ஸ்வப்னில் தாவ்டே என்ற இளைஞர் தனது ஜிம்மில் இருந்த 32 பேர்களுடன் சேர்ந்து இந்த நீர்வீழ்ச்சிக்கு குளிக்க வந்துள்ளார்.
    • 2 நாட்களாக இளைஞரை தேடியும் அவரது உடல் இன்னமும் கிடைக்கவில்லை

    இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் வடமாநிலங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் புனேவில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தம்ஹினி காட் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குதித்து நீச்சல் அடிக்கும் போது அடித்து செல்லப்பட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்வப்னில் தாவ்டே என்ற இளைஞர் தனது ஜிம்மில் இருந்த 32 பேர்களுடன் சேர்ந்து இந்த நீர்வீழ்ச்சிக்கு குளிக்க வந்துள்ளார். வந்த இடத்தில் நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்டு இளைஞர் காணாமல் போயுள்ளார்.

    2 நாட்களாக இளைஞரை தேடியும் அவரது உடல் இன்னமும் கிடைக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தை அடுத்து, மழைக்காலங்களில் காடுகள் மலைகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று புனே வனத்துறை அதிகாரி துஷார் சவான் தெரிவித்துள்ளார்.

    • வெள்ளபெருக்கில் சிக்கிய அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
    • சுற்றுலா பயணிகள் யாரும் செல்லமால் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈபட்டுள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் லோனாவாலா பகுதியில் உள்ள பூஷி அணைக்கு அருகே உள்ள அருவியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.

    இந்த வெள்ளபெருக்கில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 சிறுவர்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், வெள்ளபெருக்கில் சிக்கிய அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    இச்சம்பவம் அப்பகுதியில் சுற்றுலா வந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பம் சிக்கிய வீடியோ சமூக தளத்தில் பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

    பூஷி அணைக்கு அருகே உள்ள அருவியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தால் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என தடை செய்யப்பட்டுள்ளது.

    சுற்றுலா பயணிகள் யாரும் செல்லமால் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈபட்டுள்ளனர்.



    • நீரில் மூழ்கி ஒரு பெண், 13 வயது சிறுமி உயிரிழந்துள்ளனர்.
    • மீட்பு குழுவினர் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் மூழ்கி சிறுமி உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் மாயமாகியுள்ளனர்.

    லோனாவாலா பகுதியில் உள்ள புஷி அணை அருகே நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

    நீரில் மூழ்கி ஒரு பெண், 13 வயது சிறுமி உயிரிழந்துள்ளனர். மேலும், 2 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனும் மாயமாகியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், விபத்தில் சிக்கிய அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    • சொகுசு கார் மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • சிறுவனை காப்பாற்ற மறைமுக வேலைகள் நடைபெற்றன.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து வழக்கில் சிறுவன் குற்றம் சாட்டப்பட்டவர், அவர் ஜாமினில் வெளிவந்திருந்தார். இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்த விபத்தில் அந்த சிறுவனை காப்பாற்ற மறைமுக வேலைகள் நடைபெற்றன.

    ஆனால் பொதுமக்கள், ஊடகங்கள் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக அந்த சிறுவனின் ஜாமின் ரத்து செய்யப்பட்டு சிறார் முகாமில் அடைக்கப்பட்டுள்ளான்.

    இந்நிலையில் புனே சொகுசு கார் விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை கண்காணிப்பு இல்லத்தில் தொடர்வது சட்டவிரோதமானது என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த சிறுவனின் காவலை அவரது தந்தை வழி அத்தையிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • இதை வெளியே சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டி பயமுறுத்தி வைத்துள்ளனர்.
    • கத்த முயன்ற சிறுமியை அவர்கள் அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர்

    பள்ளியில் நடத்தப்பட்ட குழந்தைகளுக்கான பாலியல் விழுப்புணர்வான குட் டச் பேட் டச் பயிற்சியின்மூலம் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பள்ளியொன்றில் நடந்த குட் டச் பேட் டச் விழுப்புணவர்வின்போது அப்பள்ளியில் பயின்று வரும் 13 வயது சிறுமி தான் தனது தந்தையாலும், ஒன்றுவிட்ட சகோதரனாலும், உறவினறாலும் தொடர்ச்சியாக வன்புணர்வு செய்யப்பட்டதாக கூறியது ஆசிரியர்களை அதிச்சிக்குள்ளாக்கியது.உடனே இதுகுறித்து போலீசிடம் தெரிவிக்கப்பட்டது.

    சிறுமியின் தந்தையும், ஒன்றிவிட்ட சகோதரனும், உறவுக்கார அங்கிள்- உம் தொடர்ச்சியாக சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளனர். மேலும் இதை வெளியே சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டி பயமுறுத்தி வைத்துள்ளனர்.

    துன்புறுத்தலின்போது கத்த முயன்ற சிறுமியை அவர்கள் அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த மூவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    • பலரும் இதுபோன்ற சாகசங்களை தடுக்க வேண்டும்.
    • 2 இளைஞர்கள் வீடியோவில் பதிவு செய்வது போன்றும் காட்சிகள் உள்ளது.

    சமூக வலைதளங்களில் அதிக லைக்குகளை பெற வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்களும், இளம்பெண்களும் பல்வேறு விதமான ரீல்ஸ் வீடியோக்களை தயாரித்து பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில வீடியோக்களில் அவர்கள் உயிரை பணயம் வைத்து எடுக்கும் சாகச காட்சிகள் பயனர்களை வியப்பில் ஆழ்த்தினாலும், சில நேரங்களில் அவை விபரீதத்திலும் முடிந்து விடுகிறது.

    இந்நிலையில் ரீல்ஸ் வீடியோவுக்காக இளம்பெண் ஒருவர் ஒரு கட்டிடத்தில் இருந்து அந்தரத்தில் தொங்குவது போன்று ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள ஒரு பழமையான கட்டிடத்தின் மேற்பகுதியில் நிற்கும் இளம்பெண் ஒருவர் ஒரு வாலிபரின் கையை பிடித்துக்கொண்டு கீழே அந்தரத்தில் தொங்குவது போன்று காட்சி உள்ளது.

    இதனை 2 இளைஞர்கள் வீடியோவில் பதிவு செய்வது போன்றும் காட்சிகள் உள்ளது. எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் இதுபோன்ற சாகசங்களை தடுக்க வேண்டும் என பதிவிட்டனர். 

    • பாராளுமன்றத்தில் பா.ஜ.க.வின் பலமும், பெரும்பான்மையும் குறைந்துள்ளது.
    • ஓரிருவர் மட்டுமே தங்கள் விருப்பப்படி ஆட்சியை நடத்தினர்.

    புனே:

    மராட்டியத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திரபவார் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் கட்சியின் 25-வது நிறுவன தினம் புனேயில் உள்ள அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சி தலைவர் சரத்பவார் பேசியதாவது:-

    ஆட்சி அதிகாரம் தற்போது பிரதமர் நரேந்திர மோடி கைகளுக்கு சென்றுள்ளது. ஆனாலும் தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, மக்களின் ஆணை அவர்களுக்கு சாதகமாக இல்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பெற்ற இடங்களை ஒப்பிடுகையில், இந்த முறை அவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பாராளுமன்றத்தில் அவர்களின் பலமும், பெரும்பான்மையும் குறைந்துள்ளது.

    ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கு தேசம் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறவில்லை என்றால், அவர்கள் பெரும்பான்மையை பெறுவது கடினமாகிவிடும்.

    கடந்த 5 ஆண்டுகளில் ஓரிருவர் மட்டுமே தங்கள் விருப்பப்படி ஆட்சியை நடத்தினர். நாட்டை பற்றி பரந்த கண்ணோட்டத்தில் அவர்கள் சிந்திக்கவில்லை. அதிகாரத்தை மையப்படுத்த அவர்கள் விரும்பினர்.

    ஆனால் அதிர்ஷ்டவசமாக மக்கள் நிலையை உணர்ந்து அதிகாரம் ஒன்று அல்லது 2 பேரின் கைகளில் குவிவதை தடுக்கும் வகையில் வாக்களித்துள்ளனர்.

    முழு அதிகார பரவல் நடக்கவில்லை என்றாலும், அதிகார பரவலாக்கத்தின் பாதையில் செல்லும் நிர்வாகத்தை உருவாக்குவதற்காக செயல்முறையை தொடங்கி உள்ளனர்.

    தற்போது மராட்டிய சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றுவதும், உழைப்பதும் என்னுடைய மற்றும் உங்களின் கூட்டு பொறுப்பாகும். இந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிகாரம் உங்களிடம் இருக்கும். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி சாமானிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுடன் நாம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இளைஞர் ஒருவர் போக்குவரத்துக் காவலரின் கால்களை மசாஜ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
    • ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 2 நாட்கள் காலை மற்றும் நைட் ஷிப்ட் பார்த்ததால் மிகவும் சோர்ந்து போனார்

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இளைஞர் ஒருவர் போக்குவரத்துக் காவலரின் கால்களை மசாஜ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சாலையோரம் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் பாதுகாப்பு காவலரின் கால்களை அந்த இளைஞர் மசாஜ் செய்வது பதிவாகியுள்ளது.

    சமீபத்தில் சிறுவன் குடிபோதையில் போர்ச்சே கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் உயிரிழந்த 2 ஐ.டி ஊழியர்கள் உயிரிழந்தனர். புனேவையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்த கல்யாணி நகர் பகுதியில்தான் இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

    போக்குவரத்துக் காவலரின் கால்களை இளைஞன் அமுக்கி விடும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவிய நிலையில் புனே போக்குவரத்து துணை ஆணையர் சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், எரவாடா போக்குவரத்து டிவிஷன் சப் இன்ஸ்பெக்டர் கொராடே (57) வாகன சோதனையில் ஈடுபட்டார்.

    ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 2 நாட்கள் காலை மற்றும் நைட் ஷிப்ட் பார்த்ததால் மிகவும் சோர்ந்து போனார். அவரது கால்கள் அதிக வலியெடுத்துள்ளது. இதனால் அங்கு வந்த இளைஞன் அவருக்கு தானாக முன்வந்து கால் அமுக்கி விட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×