என் மலர்
நீங்கள் தேடியது "மதவெறி"
- PUCL மற்றும் APCR நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
- ஆர்எஸ்எஸ், சிவ் பிரதிஷ்டான் மற்றும் இந்து ராஷ்டிர சேனா போன்ற குழுக்கள் இந்து கிராமவாசிகளின் மனதைக் கெடுத்துள்ளன.
மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள போட் மற்றும் பிராங்குட் கிராமங்களில், வகுப்புவாத அச்சுறுத்தல்கள் மற்றும் சமூக-பொருளாதார புறக்கணிப்புகள் காரணமாக முஸ்லிம் குடும்பங்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவர்களில் பலர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசிப்பவர்கள். கிராமங்களைச் சேர்ந்த இந்துத்துவா அடிப்படைவாதிகள், இவர்களை பூர்வீகமற்ற முஸ்லிம்கள் என்று கூறி புறக்கணிப்பை நியாயப்படுத்துகின்றனர்.
மனித உரிமை அமைப்புகளான PUCL மற்றும் APCR நடத்திய உண்மை கண்டறியும் விசாரணையில், அச்சமான சூழல், வணிகங்கள் மூடல், சீர்குலைந்த வாழ்க்கை மற்றும் குடும்ப இடம்பெயர்வுகள் கண்டறியப்பட்டன.
மே 2 அன்று, பாட் கிராமத்தில் பாஜக மற்றும் பிற வலதுசாரி அமைப்புகள், அம்மன் சிலையை அவமதித்ததாக முஸ்லிம்களைக் குற்றம் சாட்டி பேரணிகள் நடத்தினர். இதைத் தொடர்ந்து, பூர்வீகமற்ற முஸ்லிம்களைப் புறக்கணிக்கக் கோரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
PUCL இது தொடர்பாக புனே கிராமப்புற காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தது. சுவரொட்டிகள் அகற்றப்பட்டாலும், பேக்கரிகள், சலூன்கள் போன்ற முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல கடைகள் மூடப்பட்டே கிடக்கின்றன. காவல்துறையிடம் புகார் அளித்தும் வணிகங்களைத் திறக்க எந்தப் பாதுகாப்பும் கிடைக்கவில்லை என்று முஸ்லிம்கள் தெரிவித்தனர்.
ஒரு பேக்கரி உரிமையாளர், தனது குடும்பம் 40 ஆண்டுகளாக வசித்தாலும், உத்தரப்பிரதேசத்தில் தங்கள் பூர்வீகம் என்பதால் வெளியாட்கள் என்று முத்திரை குத்தப்படுவதாகக் கூறினார். மூடப்பட்ட பல முஸ்லிம் பேக்கரிகள் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துள்ளன.
இந்து ராஷ்டிர சேனா உறுப்பினர் தனஞ்சய் தேசாய், முஸ்லிம் வணிகர்களை கடைகளை விட்டு வெளியேறும்படி மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஒரு பழைய இரும்பு கடைக்கு தீ வைக்கப்பட்டதில் ரூ. 20 லட்சம் இழப்பு ஏற்பட்டது, ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. மத இடங்களும் இலக்காகின. முஸ்லிம்களின் நடமாட்டம் வாட்ஸ்அப் குழுக்களால் கண்காணிக்கப்பட்டது.
பலர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தங்கள் பூர்வீக கிராமங்களுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். இதனால் குழந்தைகளுடைய கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் காங்கிரஸ் தாலுகா தலைவர் அசோக் மாத்ரே, ஆர்எஸ்எஸ், சிவ் பிரதிஷ்டான் மற்றும் இந்து ராஷ்டிர சேனா போன்ற குழுக்கள் இந்து கிராமவாசிகளின் மனதைக் கெடுத்துள்ளதாகக் கூறினார்.
பொருளாதார புறக்கணிப்புகளை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று PUCL கண்டித்துள்ளது. சிவில் உரிமைக் குழுக்கள் இந்த மீறல்களை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றன.
- பழங்குடியின மாணவர்களை ஏந்திக்கொள்ளும் பெருந்தலைவர் எம்.சி.ராஜா பெயரிலான சீரமைக்கப்பட்ட விடுதிக் கட்டடத்தைத் திறந்து வைத்தேன்.
- பழங்குடியினருக்கான 1000 குடியிருப்புகளைத் திறந்து வைத்து, 49,542 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்.
சமத்துவ நாள் விழாவில் பழங்குடியினருக்கான 1000 குடியிருப்புகளை திறந்து வைத்தேன். மதெவறியை மாய்த்து மனிதநேயம் காப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
கல்வி எனும் பேராயுதத்தைத் துணைக்கொள்ளச் சென்னை நோக்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களை ஏந்திக்கொள்ளும் பெருந்தலைவர் எம்.சி.ராஜா பெயரிலான சீரமைக்கப்பட்ட விடுதிக் கட்டடத்தைத் திறந்து வைத்தேன்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களையும் நிதிகளையும் வழங்கி, தொழில் முனைவோர்களை உருவாக்கி, மாணவர்களை உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி, வன்கொடுமைகளைக் குறைத்து, சமத்துவத்தை நிலைநாட்டும் பொற்கால ஆட்சியாக இருக்கும் நமது திராவிட மாடல் அரசின் சமத்துவ நாள் விழாவில் பழங்குடியினருக்கான 1000 குடியிருப்புகளைத் திறந்து வைத்து, 49,542 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்.
மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விவசாயிகள் விளைவித்ததை சாப்பிட்டு உயிர்வாழும் இந்த தேசபக்தர்கள் கூட இவர்களை துரோகிகள் என முத்திரை குத்துகிறார்கள்.
- விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவளிக்கும் கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள்
விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பும் மோடிக்கும், அவரது அரசுக்கும், அவர்களது தேசபக்தர்களுக்கும் உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும் என நடிகர் கிஷோர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமானதா? குறைந்தபட்ச ஆதார விலை (MSP) வழங்குகிறோம் என்று கூறி, ஆட்சிக்கு வந்த பாசாங்குத்தனமான இந்த அரசியல்வாதிகளை கூட விட்டு விடுவோம். ஆனால், விவசாயிகள் விளைவித்ததை சாப்பிட்டு உயிர்வாழும் இந்த தேசபக்தர்கள் கூட இவர்களை துரோகிகள் என முத்திரை குத்துகிறார்கள். இவர்களை எப்படி இந்தியர்கள் என சொல்லமுடியும்?
விவசாயிகள் போராட்டத்தின்போது சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டன, சுவர்கள் எழுப்பப்பட்டன, குழிகள் வெட்டப்பட்டன, துப்பாக்கிகள் சுடப்பட்டன, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. ஒவ்வொரு நாளும் தனது வார்த்தையை மாற்றிக்கொள்ளும் மோடியின் அரசாங்கம் அனைத்தையும் செய்தது. மற்றொரு பக்கம் தேசம் முழுவதற்கும் உணவு கொடுக்கும் விவசாயிகளின் மீது தேசவிரோதி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது.
மதவெறி கொண்ட கூட்டத்தின் உறுதியான வாக்குறுதிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியும், அவரது அரசும், அவர்களது பக்தர்களும், விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். ஆகவே அவர்களுக்கு உணவு கொடுப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும்.
ஆனால் இந்த நன்றி கெட்ட மக்களுக்கு மட்டுமல்ல, விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவளிக்கும் கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள்... இந்த விவசாயிகள் தேசவிரோதிகள் எனும் முத்திரைக்கு தகுதியானவர்களா?" என நடிகர் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
- விவசாயிகளின் குறைகளை அரசு தீர்க்க அரசுக்கு நேரமில்லை" என நடிகர் நானா படேகர் தெரிவித்துள்ளார்.
- விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம், தற்போதைய சூழ்நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
"தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால், அவர்களின் குறைகளைத் தீர்க்க அரசுக்கு நேரமில்லை" என நடிகர் நானா படேகர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் வறட்சிப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் 'நாம்' என்ற அறக்கட்டளையை நடிகர் மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து நானா படேகர் நடத்தி வருகிறார். அதன் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பட்டேகர் விவசாயிகளின் குறைகளை அரசு தீர்க்கவில்லை என்ற விமர்சனங்களை முன் வைத்தார்.
அப்படிப்பட்ட அரசிடம் விவசாயிகள் எதையும் கோரக் கூடாது. விவசாயிகள், நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டுவர வேண்டும். எந்த அரசு ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.
இளம் தலைமுறைக்கு நீங்கள் என்ன மாதிரியான லட்சியத்தை முன்வைக்கிறீர்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள். என்னால் அரசியலில் சேர முடியாது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம். தற்போதைய சூழ்நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகர் கிஷோர் ஆதரவு தெரிவித்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரலானது
அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமானதா? குறைந்தபட்ச ஆதார விலை (MSP) வழங்குகிறோம் என்று கூறி, ஆட்சிக்கு வந்த பாசாங்குத்தனமான இந்த அரசியல்வாதிகளை கூட விட்டு விடுவோம். ஆனால், விவசாயிகள் விளைவித்ததை சாப்பிட்டு உயிர்வாழும் இந்த தேசபக்தர்கள் கூட இவர்களை துரோகிகள் என முத்திரை குத்துகிறார்கள். இவர்களை எப்படி இந்தியர்கள் என சொல்லமுடியும்?
விவசாயிகள் போராட்டத்தின்போது சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டன, சுவர்கள் எழுப்பப்பட்டன, குழிகள் வெட்டப்பட்டன, துப்பாக்கிகள் சுடப்பட்டன, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. ஒவ்வொரு நாளும் தனது வார்த்தையை மாற்றிக்கொள்ளும் மோடியின் அரசாங்கம் அனைத்தையும் செய்தது. மற்றொரு பக்கம் தேசம் முழுவதற்கும் உணவு கொடுக்கும் விவசாயிகளின் மீது தேசவிரோதி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது.
மதவெறி கொண்ட கூட்டத்தின் உறுதியான வாக்குறுதிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியும், அவரது அரசும், அவர்களது பக்தர்களும், விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். ஆகவே அவர்களுக்கு உணவு கொடுப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும்.
ஆனால் இந்த நன்றி கெட்ட மக்களுக்கு மட்டுமல்ல, விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவளிக்கும் கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள்... இந்த விவசாயிகள் தேசவிரோதிகள் எனும் முத்திரைக்கு தகுதியானவர்களா?" என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
- இவரை போன்ற ஒருவரின் வாய், மரியாதை மிக்க கடவுள் ராமரின் பெயரை உச்சரிப்பது என்பது பாவச்செயல்.
- இஸ்லாம் எப்படி பயங்கரவாதிகளால் இழிவுப்படுத்தப்பட்டதோ, அதேபோல் மோடியால் இந்து மதம் இழிவுப்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான "தலைமைச் செயலகம்" சீரிஸ் கடந்த 17ஆம் தேதி வெளியானது.
இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் கிஷோர் பிரதமர் மோடியை விமர்சித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "மோடி பொது வாழ்க்கைக்கு மட்டுமல்ல, மனிதனாக இருக்கவும் தகுதியில்லாதவர். இவரை போன்ற ஒருவரின் வாய், மரியாதை மிக்க கடவுள் ராமரின் பெயரை உச்சரிப்பது என்பது பாவச்செயல். உண்மைக்கு புறம்பான, நெறிமுறையற்ற கருத்துகளை கூறுவதால் அவர் வெட்கப்பட வேண்டும்.
அவரது வார்த்தைகள், செயல்பாடுகள் என அனைத்தும், உலகில் அவரை விட பெரிய பொய்யர், பெரிய கோழை, அதிக திமிர் கொண்டவர், மோசமானவர், கொடூரமானவர், முட்டாள், கீழ்த்தரமானவர், உணர்வற்றவர், மக்களுக்கு எதிரானவர், ஆபத்து நிறைந்தவர், ஊழல் நிறைந்த சர்வாதிகாரி என்பதை காட்டுகிறது.
பாஜக ஆட்சியில் இருந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும், விவசாயிகள், இராணுவ வீரர்கள், பெண்கள், குழந்தைகள், மருத்துவமனைகள், கல்லூரிகளின் வளர்ச்சி குறித்தும், செய்த பணிகள் குறித்தும் பேசும் திறன் மோடிக்கு இல்லை. வெறும் பொய் சொல்லி வெறுப்பை மட்டுமே பரப்புகிறார். மேலும் கற்பனையாக வாக்கு ஜிகாத், ஊடுருவல்காரர்கள், பாகிஸ்தானியர்கள் என்று இந்த நாட்டு மக்களை கூறி வருகிறார்.
அதோடு பிற கட்சியை சுட்டிக்காட்டி அவர்கள் உங்கள் வீடு, எருமை, சைக்கிள் உள்ளிட்ட சொத்துகளை எடுத்து கொள்வார்கள் என்றும், கோயில்களை பூட்டிவிடுவார்கள் என்றும் பேசி வருகிறார். இப்படியான அதிகாரப்பசி மற்றும் போலி இந்துவாக நடந்து கொள்வதால் இஸ்லாம் எப்படி பயங்கரவாதிகளால் இழிவுப்படுத்தப்பட்டதோ, அதேபோல் மோடியால் இந்து மதம் இழிவுப்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக நடிகர் கிஷோர், மோடியை விமர்சித்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு வைரலானது குறிப்பிடத்தக்கது.






