தங்கம் விலை உயருகிறது, அரிசி விலை ஏன் உயரவில்லை?: 'காலா வில்லன்' நானா படேகர் கேள்வி

விவசாயிகளின் குறைகளை அரசு தீர்க்க அரசுக்கு நேரமில்லை" என நடிகர் நானா படேகர் தெரிவித்துள்ளார். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம், தற்போதைய சூழ்நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
தங்கம் விலை உயருகிறது, அரிசி விலை ஏன் உயரவில்லை?: 'காலா வில்லன்' நானா படேகர் கேள்வி
Published on

"தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால், அவர்களின் குறைகளைத் தீர்க்க அரசுக்கு நேரமில்லை" என நடிகர் நானா படேகர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் வறட்சிப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் 'நாம்' என்ற அறக்கட்டளையை நடிகர் மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து நானா படேகர் நடத்தி வருகிறார். அதன் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பட்டேகர் விவசாயிகளின் குறைகளை அரசு தீர்க்கவில்லை என்ற விமர்சனங்களை முன் வைத்தார்.

அப்படிப்பட்ட அரசிடம் விவசாயிகள் எதையும் கோரக் கூடாது. விவசாயிகள், நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டுவர வேண்டும். எந்த அரசு ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.

இளம் தலைமுறைக்கு நீங்கள் என்ன மாதிரியான லட்சியத்தை முன்வைக்கிறீர்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள். என்னால் அரசியலில் சேர முடியாது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம். தற்போதைய சூழ்நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகர் கிஷோர் ஆதரவு தெரிவித்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரலானது

அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமானதா? குறைந்தபட்ச ஆதார விலை (MSP) வழங்குகிறோம் என்று கூறி, ஆட்சிக்கு வந்த பாசாங்குத்தனமான இந்த அரசியல்வாதிகளை கூட விட்டு விடுவோம். ஆனால், விவசாயிகள் விளைவித்ததை சாப்பிட்டு உயிர்வாழும் இந்த தேசபக்தர்கள் கூட இவர்களை துரோகிகள் என முத்திரை குத்துகிறார்கள். இவர்களை எப்படி இந்தியர்கள் என சொல்லமுடியும்?

விவசாயிகள் போராட்டத்தின்போது சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டன, சுவர்கள் எழுப்பப்பட்டன, குழிகள் வெட்டப்பட்டன, துப்பாக்கிகள் சுடப்பட்டன, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. ஒவ்வொரு நாளும் தனது வார்த்தையை மாற்றிக்கொள்ளும் மோடியின் அரசாங்கம் அனைத்தையும் செய்தது. மற்றொரு பக்கம் தேசம் முழுவதற்கும் உணவு கொடுக்கும் விவசாயிகளின் மீது தேசவிரோதி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது.

மதவெறி கொண்ட கூட்டத்தின் உறுதியான வாக்குறுதிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியும், அவரது அரசும், அவர்களது பக்தர்களும், விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். ஆகவே அவர்களுக்கு உணவு கொடுப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும்.

ஆனால் இந்த நன்றி கெட்ட மக்களுக்கு மட்டுமல்ல, விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவளிக்கும் கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள்... இந்த விவசாயிகள் தேசவிரோதிகள் எனும் முத்திரைக்கு தகுதியானவர்களா?" என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com