என் மலர்

  நீங்கள் தேடியது "Nana Patekar"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனுஸ்ரீ தத்தாவிடம் “25 பைசா” இழப்பீடு கேட்டு நடிகை ராக்கி சாவந்த் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். #MeToo #RakhiSawant #TanushreeDutta
  காலா படத்தில் நடித்தவரும், பிரபல இந்தி நடிகருமான நானா படேகர் 2008-ம் ஆண்டு நடந்த ஒரு படப்பிடிப்பில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக, பாலியல் புகார் கூறி இந்தி திரையுலகில் நடிகை தனுஸ்ரீதத்தா பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

  இந்தப் புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், தனுஸ்ரீதத்தா நானா படேகருக்கு எதிராக மும்பை போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இதற்கிடையே நடிகர் நானா படேகருக்கு ஆதரவாக நடிகை ராக்கி சாவந்த் களம் இறங்கினார். இவர் ‘தனுஸ்ரீதத்தா ஒரு பொய்யர்' எனக் கூறியதுடன், அவர் போதைக்கு அடிமையானவர். ஓரின சேர்க்கையாளர். என்னிடம் தவறாக நடந்துகொண்டார் என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பாக ராக்கி சாவந்துக்கு எதிராக ரூ.10 கோடி கேட்டு ஒரு அவதூறு வழக்கை தனுஸ்ரீதத்தா தொடர்ந்து உள்ளார்.  மேலும் சமீபத்தில் தனுஸ்ரீ தத்தா அளித்த பேட்டியிலும் ராக்கி சாவந்தை கடுமையாக தாக்கி பேசியதாக தெரிகிறது. இந்த நிலையில் தனுஸ்ரீ தத்தாவிடம் “25 பைசா” இழப்பீடு கேட்டு ராக்கி சாவந்த் வழக்கு தொடர்ந்துள்ளார்.

  இதில் “ நான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி நல்லபெயரை சம்பாதித்து வைத்திருக்கிறேன். சமீப காலமாக தனுஸ்ரீ தத்தா கூறிவரும் மோசமான மற்றும் இழிவுபடுத்தும் பேச்சுகளால் எனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டதுடன், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இதை மீண்டும் ஈடுசெய்ய பல ஆண்டுகள் ஆகும்.

  எனவே எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய தனுஸ்ரீ தத்தா “25 பைசா” இழப்பீடு வழங்கவேண்டும். மேலும் ஊடகங்கள் முன் பகிரங்கமாக மன்னிப்பு கோர கோர்ட்டு உத்தரவிடவேண்டும்” என கூறியுள்ளார். #MeToo #RakhiSawant #TanushreeDutta

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா கூறிவந்த பாலியல் புகாருக்கு நடிகர் நானா படேகர் பதிலளித்துள்ளார். #TanuShreeDutta #NanaPatekar #Harassment
  பாலிவுட்டின் மூத்த நடிகர் நானாபடேகர். இவர் தமிழில் பொம்மலாட்டம், காலா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் இவர் மீது இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டை கூறி இருந்தார்.

  2008-ம் ஆண்டு ஹார்ன் ஒகே பிளீஸ் என்ற இந்தி படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறினார். அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இது பாலிவுட் வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனுஸ்ரீ தத்தா தமிழில் விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ளார்.

  இந்த பாலியல் புகார் தொடர்பாக நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, உள்பட 4 பேர் மீது மும்பை ஒஹிவாரா போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக நானா படேகர் உள்ளிட்டோர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தன் மீதான பாலியல் புகாரை அவர் தொடர்ந்து மறுத்து வந்தார்.  இதற்கிடையே தனுஸ்ரீ தத்தா புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நானா படேகருக்கு சினிமா மற்றும் டி.வி. நடிகர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

  இதற்கு நானா படேகர் பதில் அனுப்பி உள்ளார். அவர் கொடுத்த விளக்கத்தில் கூறி இருப்பதாவது:-

  என் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது. ஆதாரமற்றது. தவறானது. தனுஸ்ரீ தத்தாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்.

  இவ்வாறு அந்த பதிலில் நானா படேகர் தெரிவித்துள்ளார்.

  மாநில மனித உரிமை ஆணையமும் நானா படேகருக்கு இந்த விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் என்று பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். #TanushreeDutta
  பிரபல பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் நடிகர் விஷாலுடன் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் கூறியுள்ளார்.

  2008-ம் ஆண்டு ‘ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற இந்தி படத்தின் பாடல் காட்சி படமாக்கப்படும் போது அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம் சாட்டி இருந்தார்.

  தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை நானா படேகர் மறுத்து வந்தார். தனு ஸ்ரீதத்தா பொய் கூறுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர்சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகிய 4 பேர் மீது தனுஸ்ரீ தத்தா மும்பை ஒஹிவாரா போலீசில் புகார் அளித்தார்.

  இந்த புகாரை தொடர்ந்து நானா படேகர் உள்பட 4 பேர் மீது போலீசார் 354 மற்றும் 509 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  இதற்கிடையே நானா படேகரை உடனே கைது செய்ய வேண்டும். அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று ஒஹிவாரா போலீசில் நடிகை தனுஸ்ரீதத்தா வலியுறுத்தி உள்ளார்.

  இது தொடர்பாக அவர் சார்பில் வக்கீல் நிதின் அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

  பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மிகுந்த செல்வாக்கு உள்ளவர்கள். அவர்கள் நெருக்கடி கொடுத்து சாட்சிகளை கலைத்து வெளியே வரக் கூடியவர்கள். இதனால் நானாபடேகர் உள்பட 4 பேரை உடனே கைது செய்ய வேண்டும். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும்.

  இவ்வாறு ஒஹிவாரா போலீசில் அளித்துள்ள மனுவில் தனு ஸ்ரீதத்தா தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது போலீசில் புகார் அளித்துள்ள தனுஸ்ரீ தத்தா, கொடுத்த வாக்குமூலத்தை அடுத்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #TanusreeDutta #NanaPatekar
  பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தமிழில் நடிகர் விஷாலுடன் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

  இந்த நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறியுள்ளார்.

  2008-ம் ஆண்டு ‘ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற இந்தி படத்தில் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம்சாட்டி இருந்தார். தனுஸ்ரீயின் இந்த குற்றச்சாட்டு பாலிவுட் உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

  இந்த பாலியல் புகாரை நானா படேகர் தொடர்ந்து மறுத்து வருகிறார். தனுஸ்ரீ பொய் சொல்வதாக தெரிவித்தார்.

  இந்த நிலையில் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர்சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகிய 4 பேர் மீது தனுஸ்ரீ தத்தா மும்பை ஒஹிவாரா போலீசில் புகார் அளித்தார். தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நானா படேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்ய வேண்டும் என்று அவர் புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.  இதற்கிடையே தனுஸ்ரீ தத்தா ஒஹிவாரா போலீஸ் நிலையத்துக்கு சென்று நானா படேகருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தார். ஏற்கனவே கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் அவரிடம் வாக்குமூலம் பெற்றனர்.

  தனுஸ்ரீ அளித்த புகாரை தொடர்ந்து நானாபடேகர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  இதுகுறித்து மும்பை மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் மனோஜ் குமார் சர்மா கூறும் போது, “நானா படேகர் உள்ளிட்டோர் மீது 354 மற்றும் 509 ஆகிய சட்ட பிரிவுகளின் கீழ் நாங்கள் வழக்குபதிவு செய்துள்ளோம்“ என்றார்.

  இதை தொடர்ந்து நானா படேகர் மீது மும்பை போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். அவரை போலீசார் விரைவில் கைது செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TanusreeDutta #NanaPatekar

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகை தனுஸ்ரீதத்தா, பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருக்கும் நிலையில், அவர் பொய் சொல்வதாக நானா படேகர் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார். #TanushreeDutta #NanaPatekar
  பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. 2005-ம் ஆண்டு வெளியான ‘ஆசிக் பனாயா ஆப்னே’ என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

  பல்வேறு படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து தனுஸ்ரீதத்தா பிரபலம் ஆனார். தமிழில் நடிகர் விஷாலுடன் இணைந்து தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்துள்ளார்.

  இந்த நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான நானா படேகர் மீது தனுஸ்ரீதத்தா கூறிய பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  2008-ம் ஆண்டு “ஹார்ன் ஒகே பிளீஸ்” என்ற இந்தி படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று புகார் கூறி இருந்தார். மேலும் அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டேன் என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.

  அதோடு நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங்க் ஆகியோர் மீது மும்பை ஓகீவாரா போலீஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  தனுஸ்ரீதத்தா கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கு நானா படேகர் ஏற்கனவே மறுத்து இருந்தார்.  இந்த நிலையில் அவர் மீண்டும் இந்த குற்றச்சாட்டை மறுத்து இருக்கிறார். இது தொடர்பாக நானா படேகர் தனது வீட்டு முன்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

  இந்த புகார் தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பே நான் விளக்கம் அளித்துவிட்டேன். இந்த புகார்கள் பொய்யானது. தனுஸ்ரீ தத்தா பொய் சொல்கிறார். என்னுடைய வக்கீல்கள் இது குறித்து பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். இதனால் என்னால் அதிகமாக இதுபற்றி பேச இயலாது. இதற்காக மன்னித்து கொள்ளுங்கள்.

  இவ்வாறு நானா படேகர் கூறியுள்ளார்.

  மேலும் அவர் நிருபர்களை சந்தித்து விரிவாக கொடுக்க இருந்த பேட்டியையும் ரத்து செய்தார். #TanushreeDutta #NanaPatekar

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலிவுட் நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை தனுஸ்ரீ தத்தா அளித்த புகாரின் அடிப்படையில் நானா படேகர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். #TanushreeDutta #NanaPatekar
  மும்பை :

  சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகளை நடிகைகள் உரக்க பேச ஆரம்பித்து உள்ளனர். படுக்கைக்கு அழைத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு ஸ்ரீரெட்டி திரையுலகை கதிகலங்க வைத்தார். இப்போது தனுஸ்ரீதத்தாவும் பாலியல் ஆசாமிகளுக்கு எதிராக மல்லுக்கட்டி இருக்கிறார். இவர் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

  காலா படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தவர் நானா படேகர். பாலிவுட்டில் பிரபலமான நடிகரான இவர் மூன்று முறை தேசிய விருதை வென்றவர் இவர் மீது, பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இதுகுறித்து அவர் கூறியதாவது,

  கடந்த 2008-ஆம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, தகாத இடங்களில் கை வைத்து தனக்கு பாலியல் தொந்தரவு அளித்தார்.

  ஹீரோயின் மட்டுமே இடம்பெறக்கூடிய அந்த பாடலில் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த நானா படேகரை நான் கண்டித்த போது, தனக்கு பிடித்ததை நான் செய்வேன் என்னை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்று சத்தமாக கூறினார்.
  நானா படேகரின் இந்த செயலுக்கு படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர் ஆகிய அனைவரும் ஆதரவாக செயல்பட்டனர் என அவர் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுக்கு பின்னர் பாலிவுட் பிரபலங்கள் பலரும் தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவு அளித்தனர்.  இந்நிலையில், மும்பை ஒஷிவாரா காவல் நிலையத்திற்கு இன்று வந்த தனுஸ்ரீ தத்தா,  நடிகர் நான படேகர் மீது புகார் அளித்தார், மேலும் கனேஷ் ஆச்சார்யா என்பவர் மீதும் அவர் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் நானா படேகர் மற்றும் கனேஷ் ஆச்சார்யா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். #TanushreeDutta #NanaPatekar
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நானா படேகர் மீது பாலியல் புகார் கொடுத்திருக்கும் நடிகை தனுஸ்ரீ தந்தா, படப்பிடிப்பில் போதையில் இருந்ததாக அவர் மீது ராக்கி சாவந்த் புகார் கூறியுள்ளார். #TanushreeDutta
  சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகளை நடிகைகள் உரக்க பேச ஆரம்பித்து உள்ளனர். படுக்கைக்கு அழைத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு ஸ்ரீரெட்டி திரையுலகை கதிகலங்க வைத்தார். இப்போது தனுஸ்ரீதத்தாவும் பாலியல் ஆசாமிகளுக்கு எதிராக மல்லுக்கட்டி இருக்கிறார். இவர் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் கதாநாயகியாக நடித்தவர். தேசிய விருதுகள் பெற்ற பிரபல இந்தி நடிகர் நானா படேகர் படப்பிடிப்பில் பாலியல் தொல்லை கொடுத்ததாக தனுஸ்ரீ புகார் கூறினார். இதனை வெளியில் சொல்லக்கூடாது என்று அவரது ஆட்கள் என்னை மிரட்டினார்கள் என்றும் தெரிவித்தார்.

  தற்போது இந்தி டைரக்டர் விவேக் அக்னிகோத்ரி மீதும் தனுஸ்ரீத்தா புகார் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “சாக்லேட் படத்தின் படப்பிடிப்பில் இர்பான் கான் நடித்த காட்சி படமாகிக் கொண்டு இருந்தது. எனக்கும் அந்த காட்சிக்கும் தொடர்பு இல்லை. ஆனால் டைரக்டர் என்னிடம் வந்து இர்பான்கானுக்கு நன்றாக நடிப்பு வர வேண்டும். இதற்காக உனது ஆடைகளை களைந்து விட்டு அவர் முன்னால் போய் நில்லு என்றார். நான் அதிர்ச்சியானேன். இதைக் கேட்டு இர்பான்கானும் அதிர்ச்சியாகி எனக்கு நடிக்க தெரியும். அதற்காக இப்படியெல்லாம் சொல்லாதீர்கள்” என்று கண்டித்ததாக தெரிவித்தார்.

  இந்த நிலையில் தனுஸ்ரீதத்தாவை விமர்சித்து நடிகை ராக்கி சாவந்த் கூறியதாவது:-  தனுஸ்ரீ குற்றம்சாட்டும் அந்த தேதியில் நானும் படப்பிடிப்பு அரங்கில் இருந்தேன். என்னிடம் ஒரு பாடலுக்கு ஆடவேண்டும் என்று நானா படேகர் கேட்டுக்கொண்டார். நானும் சம்மதித்தேன். அப்போது தனுஸ்ரீதத்தா 4 மணிநேரம் சுயநினைவு இல்லாமல் இருப்பதாக சொன்னார்கள். அவருக்கு பதிலாகத்தான் என்னை ஆட அழைத்து இருந்தார்கள். தனுஸ்ரீ அதிக போதையில் மயக்கத்தில் இருந்தார். அவரைப்பற்றி கவலைப்படாதே நீ நடித்துக்கொடு என்று நானா படேகர் என்னிடம் கூறினார். நான் நடித்து கொடுத்தேன்” என்று அவர் கூறினார்.

  இந்த நிலையில் 2008-ல் படப்பிடிப்பு அரங்குக்கு வெளியே தனுஸ்ரீதத்தா காரை சிலர் கும்பலாக சேர்ந்து உடைத்தும் டயரை கிழித்தும் சேதப்படுத்தும் வீடியோ இணையதளத்தில் இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீ தத்தா, தற்போது ராஜ்தாக்கரே மீது புகார் கூறியிருக்கிறார். #TanushreeDutta
  பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. 2005-ம்ஆண்டு வெளியான ‘ஆசிக் பனாயா ஆப்னே’ என்ற இந்தி படத்தின் மூலம் அவர் அறிமுகம் ஆனார்.

  பல்வேறு படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து தனுஸ்ரீதத்தா பிரபலம் ஆனார். தமிழில் நடிகர் விஷாலுடன் இணைந்து ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

  இந்தநிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான நானாபடேகர் மீது தனுஸ்ரீ தத்தா கூறிய பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற படப்பிடிப்பின் போது நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி தாக்குதலில் ஈடுபட்டார் என்று கூறினார்.

  மேலும் தான் சினிமாவில் அறிமுகமாகும் போது டைரக்டர் விவேக் அக்னி கோத்ரி தன்னை ஆடைகளை களைந்துவிட்டு கதாநாயகன் முன்பு நடனமாட கூறியதாக தனுஸ்ரீதத்தா புகார் தெரிவித்து இருந்தார்.

  இந்தநிலையில் மராட்டிய நவநிர்மான் சேனா (எம்.என்.எஸ்) கட்சி தலைவர் ராஜ் தாக்கரே மீது தனுஸ்ரீ தத்தா பாய்ந்து உள்ளார். குண்டர்களை அனுப்பி தன் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

  சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை மாற்ற விரும்பிய ராஜ்தாக்கரே கிரிமினல் மனநிலை கொண்டவர். என்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அவர்தான் பின்னணியில் உள்ளார். குண்டர்களை அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளார்.

  ராஜ்தாக்கரே ஒரு குண்டர். அவரை போன்ற குண்டர்கள் தான் அந்த கட்சியில் உள்ளனர். பெண்களை தாக்கும் நபர் ஒரு தலைவராக இருக்க முடியாது.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  தனுஸ்ரீ தத்தா கார் தாக்கப்படும் வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில் ராஜ்தாக்கரே மீது அவர் இந்த கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் மூன்று நாயகிகளுள் ஒருவராக நடித்த தனுஸ்ரீ தத்தா, காலா பட வில்லன் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். #TanushreeDutta #NanaPatekar
  காலா படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தவர் நானா படேகர். பாலிவுட்டில் பிரபலமான நடிகரான இவர் மூன்று முறை தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

  இவர் மீது, பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக நடித்த தனுஸ்ரீ தத்தா, தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

  இவர் தற்போது நானா படேகர் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக தனியார் தொலைக்காட்சியின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது,

  கடந்த 2008-ஆம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, தகாத இடங்களில் கை வைத்து தனக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக கூறியுள்ளார்.

  மேலும் அவர் கூறுகையில், ”ஹீரோயின் மட்டுமே இடம்பெறக்கூடிய அந்த பாடலில் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த நானா படேகரை நான் கண்டித்த போது, தனக்கு பிடித்ததை நான் செய்வேன் என்னை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்று சத்தமாக கூறினார். நானா படேகரின் இந்த செயலுக்கு படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர் ஆகிய அனைவரும் ஆதரவாக செயல்பட்டனர்.  இதுகுறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆதரவாளர்களின் மிரட்டலுக்கு ஆளானேன். என்னுடைய குடும்பத்தாரோடு வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது  அவரது ஆதரவாளர்களால் தாக்குதலுக்கு உள்ளானேன்.

  ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் போன்ற பெரிய நடிகர்கள் இவ்வாறான நடிகருடன் நடிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அப்போது நான் புதுமுக நடிகை என்பதால் எனக்கு எதிரான செய்திகள் ஊடகங்களில் பரப்பப்பட்டன. நானா படேகரைப் போன்ற ஆட்கள் பெண்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது. என்னைப் போல தற்போது பல புதுமுகங்களும் இது போன்ற வலிகளை சுமந்து கொண்டு தான் இருக்கின்றனர் என கூறி உள்ளார். #TanushreeDutta #NanaPatekar 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ள நானா படேகர், நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு உதவும் ஹீரோ என்று புகழ்கின்றனர். #Kaala #NanaPatekar
  காலா படத்தில் அடித்தட்டு மக்களின் இடத்தை அச்சுறுத்தி பிடுங்கும் அரசியல்வாதியாக நடித்த இந்தி நடிகர் நானா படேகர் நிஜத்தில் அதற்கு நேர் எதிர் குணம் கொண்டவர்.

  சினிமா மூலம் சம்பாதித்ததை எல்லாம் மக்களுக்காகச் செலவழித்துவிட்டு ஒற்றை பிளாட்டில் வசிக்கிறார். மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பகுதியில் 2015ம் ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. விவசாய நிலங்கள் வெடித்தன.

  ஆடுமாடுகள் செத்து மடிந்தன. விவசாயிகள் கொத்துக்கொத்தாக தற்கொலை செய்துகொண்டனர். விவசாயிகளின் தற்கொலை நானா படேகரின் மனதை வெகுவாகப் பாதித்தது. சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து நாம் என்னும் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார்.  முதல் நாளே அறக்கட்டளைக்கு 80 லட்சம் ரூபாய் கிடைத்தது. ஒரே வாரத்தில் 7 கோடி ரூபாய் திரண்டது. இரவு பகலாக விவசாயிகளை நேரில் சந்தித்து இந்த நிதியை வழங்கினார்.மும்பை, தானே, புனே, நாக்பூர், அவுரங்கபாத் நகரங்களில் ‘நாம்‘ அறக்கட்டளை தற்போது இயங்கிவருகிறது. கணவரை இழந்த பெண்களுக்கு மறு வாழ்க்கை அமைத்துக்கொடுப்பது. இளம் பெண்களுக்கு சுய தொழில் கற்றுக் கொடுப்பது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது போன்ற பல்வேறு அறப்பணிகளில் இந்த அமைப்பு ஈடுபடுகிறது. நானா படேகரை நிஜ ஹீரோ என்று புகழ்கின்றனர். #Kaala #NanaPatekar

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஜினிகாந்த் நடிப்பில் காலா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், ரஜினியின் 4 படங்கள் அமெரிக்காவில் ரூ.10 லட்சம் வசூலை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kaala #Rajinikanth
  பா.இரஞ்சித் இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியாகி காலா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. காலா படத்தில் ரஜினி மும்பை தாதாவாக நடித்திருக்கிறார். 

  படத்தில் ரஜினி அடித்தட்டு மக்களின் நில உரிமைக்காக போராடும் தாதாவாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத நில அரசியலை மையமாக வைத்து கதை அமைந்துள்ளது. ரஞ்சித் பேசிய அரசியல் நடப்பு காலத்துக்கான அரசியல் என்று சமூகவலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

  படத்தில் நடித்துள்ள வில்லன் நானா படேகர், ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, திலீபன், அஞ்சலி பாட்டீல் என படத்தில் நடித்துள்ள பலருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

  தமிழத்தில் காலா படம் முதல் நாளில் 14 முதல் 15 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாகவும், சென்னையில் மட்டும் ரூ. 1.77 கோடி வசூலாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது ரஜினியின் கபாலி படத்தின் முதல் நாள் வசூலை விடக் குறைவு தான். கபாலி முதல் நாளில் ரூ. 21.5 கோடியை வசூலித்திருந்தது. முதல் நாளில் வசூலில் விஜய்யின் மெர்சல் ரூ. 22.5 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது.   அதேநேரத்தில் அமெரிக்காவில் நான்காவது முறையாக ரூ. 10 லட்சம் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. கபாலி படம் முதல் நாள் ப்ரீமியர் காட்சியிலேயே 10 லட்சம் வசூலை தாண்டியிருந்த நிலையில், காலா படம் 2 நாட்களில் 10 லட்சம் வசூலை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வசூலில் கபாலி ரூ. 40 லட்சம் வசூலுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. 

  இந்த நிலையில், காலா வசூல், கபாலி வசூலை முந்துமா என்பது கேள்வியாகியுள்ளது. #Kaala #Rajinikanth

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo