என் மலர்
நீங்கள் தேடியது "ராக்கி சாவந்த்"
- ஷெர்லின் சோப்ராவும், ராக்கி சாவந்த் மீது மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.
- என்னைப்பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டு வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தி கவர்ச்சி நடிகைகள் ராக்கி சாவந்த், ஷெர்லின் சோப்ரா ஆகியோர் ஒருவருக்கொருவர் தரக்குறைவாக பேசி வருகிறார்கள். ராக்கி சாவந்துக்கு 10 ஆண் நண்பர்கள் உள்ளனர் என்று ஷெர்லின் சோப்ரா கூறினார். தன்னை இழிவுபடுத்திய ஷெர்லின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராக்கி சாவந்த் மும்பை போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து ஷெர்லின் சோப்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ராக்கி சாவந்த் - ஷெர்லின் சோப்ரா
இந்நிலையில் ஷெர்லின் சோப்ராவும், ராக்கி சாவந்த் மீது மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், ''ராக்கி சாவந்த் என்னைப்பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டு உள்ளார். வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இழிவாக பேசி உள்ளார். பொது இடத்தில் பெண்களை இழிவுபடுத்தி பேச சட்டத்தில் இடம் இல்லை. எனவே ராக்கி சாவந்த் மற்றும் அவரது வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் ராக்கி சாவந்த் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராக்கி சாவந்த்.
- இவர் தனது காதலனை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராக்கி சாவந்த். இவர் அரசியல், நடனம், மாடல் அழகி, நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல துறைகளில் முத்திரை பதித்தவர். தற்போது 44 வயதாகும் ராக்கி சாவந்த் கடந்த 2019-ம் ஆண்டு ரிதீஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 2022-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

ராக்கி சாவந்த் - ஆதில் கான்
ரிதீஷ் சிங்கை விவாகரத்து செய்த ராக்கி சாவந்த், மைசூருவைச் சேர்ந்த ஆதில் என்பவருடன் பழகி வந்தார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இருவருக்கும் திருமணம் நடந்து விட்டதாகவும், மிகவும் எளிமையாக இவர்களது திருமணம் நடந்ததாகவும், தங்களது திருமணத்தை அவர்கள் பதிவு செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
- இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராக்கி சாவந்த்.
- சமீபத்தில் இவர் தனது காதலனை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த், தமிழில் 'என் சகியே', 'முத்திரை' கம்பீரம் உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். கடந்த ஆண்டு ஆதில் துரானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன் அதில் துரானிக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டி, மும்பை ஒஷிவாரா போலீசில் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், துரானி தன்னை அடித்ததாகவும், முகத்தில் திராவகம் வீசிவிடுவேன், சாலை விபத்து மூலம் கொன்று விடுவேன் என கணவர் மிரட்டியதாகவும், தொழுகை செய்யுமாறு கட்டாயப் படுத்தியதாகவும் கூறியிருந்தார்.

அதன்பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தேரியில் உள்ள வீட்டில் இருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், ரூ.2½ லட்சம் மதிப்பிலான நகை மாயமாகியுள்ளது. காவலாளி மூலம் கணவர் அதில் துரானி வீட்டுக்கு வந்து சென்றதை தெரிந்து கொண்ட அவர், நேற்று முன்தினம் மீண்டும் ஓஷிவாரா போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். ராக்கி சாவந்த் அளித்த புகார்கள் தொடர்பாக போலீசார் அதில் துரானி மீது மோசடி, காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று போலீசார் புகார் தொடர்பாக ஆதில் துரானியிடம் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக ஒஷிவாரா போலீஸ் நிலையத்திற்கு வெளியில் நடிகை ராக்கி சாவந்த் கூறியதாவது:- என் கணவருக்கு எதிராக நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் எனது நகை, பணத்தை திருடிவிட்டார். என்னை ஏமாற்றிய அவரை விவாகரத்து செய்ய உள்ளேன். இனி அவருடன் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த ராக்கி திடீரென மயக்கம் அடைந்து சுருண்டு விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- தமிழில், 'என் சகியே', 'முத்திரை', 'கம்பீரம்' உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி பிரபலமடைந்தவர் ராக்கி சாவந்த்.
- ‘எனது நிர்வாண வீடியோவை விற்பனை செய்தார்' என்று கணவர் மீது கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் புகார் அளித்துள்ளார்.
பிரபல இந்தி கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த். இவர் தமிழில், 'என் சகியே', 'முத்திரை', 'கம்பீரம்' உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இவருக்கும், அதில் துரானி என்பவருக்கும் கடந்த வருடம் ஜூலை மாதம் திருமணம் நடந்தது.

தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. அதில் துரானி இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து தன்னை அடித்து காயப்படுத்தியதாகவும், லாரியை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் போலீசில் புகார் அளித்து இருந்தார். தனது வீட்டில் இருந்த ரொக்கப்பணம், நகையை திருடிச்சென்று விட்டதாகவும் கூறியிருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அதில் துரானியை கைது செய்தனர்.

தற்போது மீண்டும் அதில் துரானி மீது ராக்கி சாவந்த் குற்றம் சாட்டி உள்ளார். அவர் கூறும்போது. "அதில் துரானிக்கு ஜாமீன் கொடுக்க கூடாது. அவர் என்னை ஏமாற்றி விட்டார். எனது பணத்தை வங்கியில் இருந்து மோசடியாக எடுத்து விட்டார். அவர் தொழில் அதிபர் இல்லை. என்னை பயன்படுத்தி இந்தி படங்களில் கதாநாயகனாக நடிக்க விரும்பினார். எனது நிர்வாண வீடியோக்களை எடுத்து சிலருக்கு விற்பனை செய்து இருக்கிறார்'' என்றார். இது பரபரப்பாகி உள்ளது.



- என் சகியே, முத்திரை ஆகிய தமிழ் படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் ராக்கி சாவந்த்.
- இவர் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில், என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை 2019-ல் ரகசிய திருமணம் செய்து கொண்டார். திருமணமான தகவலை இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்தார். ரிதேஷ், ஏற்கனவே திருமணம் ஆனவர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரிதேஷை ராக்கி சாவந்த் பிரிந்தார். தற்போது ஆதில் கான் துரானி என்பவரை காதலித்து வருகிறார்.
அடிக்கடி எதையாவது கூறி சர்ச்சையில் சிக்கி கொள்ளும் ராக்கி சாவந்த், தற்போது கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை வயாகராவுடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார். மும்பை விமான நிலையத்தில் பூஸ்டர் தடுப்பூசி பக்க விளைவுகள் குறித்து ராக்கி சாவந்த் பேசினார்.

ராக்கி சாவந்த்
அவர் பூஸ்டர் தடுப்பூசி எடுத்து கொண்டதாகவும் ஆனால் இரண்டு நாட்களாக தூங்க முடியவில்லை. என் இதயத்துடிப்பு மிகவும் வேகமாக உள்ளது. நான் சோர்வடைந்து இருக்கிறேன். என் முகம் வீங்கி விட்டது. அரை மணி நேரம் கூட தூங்க முடியாமல் சிரமப்படுகிறேன். நான் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறேன். கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இளம் வயதினருக்கு ஏற்றதல்ல என்பதால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் இந்த பூஸ்டர் டோஸ் ஷிலாஜித் அல்லது வயாகராவை ஒத்திருக்கிறது என அவர் கூறினார். இவரின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் ஆதில் கான் என்பவரை காதலித்து வருகிறார்.
- திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாலும் எனக்கு கவலை இல்லை என நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்து உள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கும், நடிகர் ரன்பீர் கபூருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதாக ஜூன் 27ம் தேதி சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தார். இது குறித்து பாலிவுட்டில் சர்ச்சைகளுக்கு பெயர் போன ராக்கி சாவந்திடம் கேட்கப்பட்டது. தன் காதலரான ஆதிலுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது ராக்கியிடம் செய்தியாளர்கள் இந்த கேள்வியை எழுப்பினார்கள்.

ராக்கி சாவந்த்
அதற்கு பதிலளித்த ராக்கி, நான் எப்பொழுது கர்ப்பமாவேன்? திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாலும் எனக்கு கவலை இல்லை. நான் கர்ப்பமான மறுநாளே திருமணம் செய்து கொள்வேன். அனைத்தையும் சரியாக்கும் ஒரு நல்ல பிள்ளையை பெற்றெடுப்பேன் என்றார். வழக்கம் போல், ராக்கி இந்த செய்தியை டிரெண்டாக்கும் வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டதாக வலைத்தளத்தில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.











