பூஸ்டர் தடுப்பூசியை வயாகராவுடன் ஒப்பிட்ட கவர்ச்சி நடிகை.. புதிய சர்ச்சையில் ராக்கி சாவந்த்

என் சகியே, முத்திரை ஆகிய தமிழ் படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் ராக்கி சாவந்த்.இவர் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ராக்கி சாவந்த்
ராக்கி சாவந்த்
Published on

பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில், என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை 2019-ல் ரகசிய திருமணம் செய்து கொண்டார். திருமணமான தகவலை இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்தார். ரிதேஷ், ஏற்கனவே திருமணம் ஆனவர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரிதேஷை ராக்கி சாவந்த் பிரிந்தார். தற்போது ஆதில் கான் துரானி என்பவரை காதலித்து வருகிறார்.

அடிக்கடி எதையாவது கூறி சர்ச்சையில் சிக்கி கொள்ளும் ராக்கி சாவந்த், தற்போது கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை வயாகராவுடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார். மும்பை விமான நிலையத்தில் பூஸ்டர் தடுப்பூசி பக்க விளைவுகள் குறித்து ராக்கி சாவந்த் பேசினார்.

ராக்கி சாவந்த்
ராக்கி சாவந்த்

ராக்கி சாவந்த்

அவர் பூஸ்டர் தடுப்பூசி எடுத்து கொண்டதாகவும் ஆனால் இரண்டு நாட்களாக தூங்க முடியவில்லை. என் இதயத்துடிப்பு மிகவும் வேகமாக உள்ளது. நான் சோர்வடைந்து இருக்கிறேன். என் முகம் வீங்கி விட்டது. அரை மணி நேரம் கூட தூங்க முடியாமல் சிரமப்படுகிறேன். நான் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறேன். கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இளம் வயதினருக்கு ஏற்றதல்ல என்பதால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் இந்த பூஸ்டர் டோஸ் ஷிலாஜித் அல்லது வயாகராவை ஒத்திருக்கிறது என அவர் கூறினார். இவரின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com