காதலனை திடீரென ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை

இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராக்கி சாவந்த்.இவர் தனது காதலனை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.
காதலனை திடீரென ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை
Published on

இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராக்கி சாவந்த். இவர் அரசியல், நடனம், மாடல் அழகி, நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல துறைகளில் முத்திரை பதித்தவர். தற்போது 44 வயதாகும் ராக்கி சாவந்த் கடந்த 2019-ம் ஆண்டு ரிதீஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 2022-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

ராக்கி சாவந்த் - ஆதில் கான்
ராக்கி சாவந்த் - ஆதில் கான்

ராக்கி சாவந்த் - ஆதில் கான்

ரிதீஷ் சிங்கை விவாகரத்து செய்த ராக்கி சாவந்த், மைசூருவைச் சேர்ந்த ஆதில் என்பவருடன் பழகி வந்தார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இருவருக்கும் திருமணம் நடந்து விட்டதாகவும், மிகவும் எளிமையாக இவர்களது திருமணம் நடந்ததாகவும், தங்களது திருமணத்தை அவர்கள் பதிவு செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com