மோடிக்கும், அவர்களது தேசபக்தர்களுக்கும் உணவளிப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும்: நடிகர் கிஷோர்

விவசாயிகள் விளைவித்ததை சாப்பிட்டு உயிர்வாழும் இந்த தேசபக்தர்கள் கூட இவர்களை துரோகிகள் என முத்திரை குத்துகிறார்கள்.விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவளிக்கும் கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள்
மோடிக்கும், அவர்களது தேசபக்தர்களுக்கும் உணவளிப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும்: நடிகர் கிஷோர்
Published on

விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பும் மோடிக்கும், அவரது அரசுக்கும், அவர்களது தேசபக்தர்களுக்கும் உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும் என நடிகர் கிஷோர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமானதா? குறைந்தபட்ச ஆதார விலை (MSP) வழங்குகிறோம் என்று கூறி, ஆட்சிக்கு வந்த பாசாங்குத்தனமான இந்த அரசியல்வாதிகளை கூட விட்டு விடுவோம். ஆனால், விவசாயிகள் விளைவித்ததை சாப்பிட்டு உயிர்வாழும் இந்த தேசபக்தர்கள் கூட இவர்களை துரோகிகள் என முத்திரை குத்துகிறார்கள். இவர்களை எப்படி இந்தியர்கள் என சொல்லமுடியும்?

விவசாயிகள் போராட்டத்தின்போது சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டன, சுவர்கள் எழுப்பப்பட்டன, குழிகள் வெட்டப்பட்டன, துப்பாக்கிகள் சுடப்பட்டன, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. ஒவ்வொரு நாளும் தனது வார்த்தையை மாற்றிக்கொள்ளும் மோடியின் அரசாங்கம் அனைத்தையும் செய்தது. மற்றொரு பக்கம் தேசம் முழுவதற்கும் உணவு கொடுக்கும் விவசாயிகளின் மீது தேசவிரோதி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது.

மதவெறி கொண்ட கூட்டத்தின் உறுதியான வாக்குறுதிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியும், அவரது அரசும், அவர்களது பக்தர்களும், விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். ஆகவே அவர்களுக்கு உணவு கொடுப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும்.

ஆனால் இந்த நன்றி கெட்ட மக்களுக்கு மட்டுமல்ல, விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவளிக்கும் கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள்... இந்த விவசாயிகள் தேசவிரோதிகள் எனும் முத்திரைக்கு தகுதியானவர்களா?" என நடிகர் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com