என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனே"

    • இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்குள் ரூ.9,857.85 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்படும்
    • இதற்கு மகாராஷ்டிரா அரசு மற்றும் பன்முக நிதி நிறுவனங்கள் இணைந்து நிதியளிக்கும்

    புனே மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்குள் ரூ.9,857.85 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்படும், இதற்கு மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு மற்றும் பன்முக நிதி நிறுவனங்கள் இணைந்து நிதியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

    புனே மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட விரிவாக்கம் மொத்தம் 31.636 கிலோமீட்டர் நீளத்திற்கு 28 உயர்த்தப்பட்ட நிலையங்களுடன் அமைக்கப்படவுள்ளது.

    சில தினங்களுக்கு முன்பு மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்து ஆவணங்களை தமிழக அரசுக்கு, மத்திய அரசு திருப்பி அனுப்பி இருந்தது பெரும் சர்ச்சையான நிலையில் தற்போது புனே மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • ஒரு கார் லாரிக்கும், முன்னால் சென்ற கண்டெய்னர் லாரிக்கும் இடையில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று மாலை நவாலே பாலத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

    பாலத்தில் 8 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து காவல்துறை கூறுகையில், சத்தாராவில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, பிரேக் செயலிழந்ததால் நவாலே பாலத்தின் சரிவில் மாலை 5.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்தது.

    அந்த லாரி வழியில் பல வாகனங்களை மோதியது. இதில் ஒரு கார் லாரிக்கும், முன்னால் சென்ற கண்டெய்னர் லாரிக்கும் இடையில் சிக்கி  தீப்பிடித்து எரிந்தது

    இதனையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைத்து, சேதமடைந்த கார் மற்றும் கண்டெய்னரில் இருந்து சடலங்களை மீட்டனர்.

    உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்துள்ளது.

    கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதே பகுதியில் பிரேக் பிடிக்காத லாரி ஒன்று 48 வாகனங்களை இடித்து விபத்தை ஏற்படுத்திய விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

    • Spritual healers என அழைத்துக்கொள்ளும் அந்த ஆன்மீக மோசடி கும்பலிடம் தம்பதியினரை அறிமுகப்படுத்தி உள்ளார்.
    • சித்தரின் ஆவி உடலில் நுழைவதாகவும், அது அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்

    மகாராஷ்டிராவில் புனே நகரில் பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபர் மூடநம்பிக்கையால் போலி ஆன்மீக கும்பலிடம் சிக்கி ஏமாந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    அந்த ஐடி ஊழியருக்கு ஆட்டோ இம்யூன் நோய் மற்றும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது இரண்டு மகள்கள் உள்ளனர்.

    2018 ஆம் ஆண்டு, ஒரு பக்தி பஜனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலந்து கொண்ட ஐடி ஊழியரின் மனைவிக்கு ஒருவரும் அறிமுகம் ஏற்பட்டது. அந்த நபர் 3 பேர் அடங்கிய Spritual healers என அழைத்துக்கொள்ளும் அந்த ஆன்மீக மோசடி கும்பலிடம் தம்பதியினரை அறிமுகப்படுத்தி உள்ளார்.

    சித்தரின் ஆவி உடலில் நுழைவதாகவும், அது அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் என்றும் அந்த கும்பல் தம்பதியினரை நம்பவைத்துள்ளது.

    நோய்களைக் குணப்படுத்த சிறப்பு பூஜைகள் மற்றும் பிரார்த்தனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதாகக் கூறி அவர்கள் தொடர்ந்து தம்பதியிடம் பணம் பெற்று வந்துளளனர்.

    பின்னர், பிரிட்டனில் உள்ள தம்பதியின் வீடு மற்றும் புனே அருகே சொந்தமாக உள்ள விவசாய நிலங்கள் உட்பட குடும்பத்தின் சொத்துக்கள் துரதிர்ஷ்டத்தைத் தருவதாக அவர்களை நம்ப வைத்தனர்.

    இந்தக் கும்பல் குடும்பத்தினரை இவற்றை விற்க வற்புறுத்தியது. விற்பனையிலிருந்து கிடைத்த பணத்தை, அது துரதிர்ஷ்டத்தைத் தரும் என்று கூறி, புத்திசாலித்தனமாக கும்பல் வசப்படுத்தியுள்ளது.

    இதன் பின்னரும் பூஜைகளுக்காகக் கேட்ட பெரும் தொகையைச் செலுத்த உறவினர்களிடமிருந்து ஐடி ஊழியர் கடன் வாங்கியுள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.14கோடியை அந்த கும்பல் தம்பதியிடமிருந்து ஏமாற்றி பறித்துள்ளது.

    பல வருடங்கள் கடந்தும் குழந்தைகளின் உடல்நிலை மாறாமல் இருந்ததால், தம்பதியினருக்கு சந்தேகம் வந்த நிலையில் தற்போது அவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் ஒரு சாமியார் உட்பட அந்த கும்பலை சேர்ந்தவர்களை தேடி வருகின்றனர்.    

    • அட்லஸ் காப்கோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இன்ஜினீயராக பணிபுரிந்து வந்தவர் 23 வயதான பியூஷ் அசோக் காவ்டே.
    • தற்கொலை செய்வதற்கு முன்பு, பியூஷ் தனது குடும்பத்திற்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவின் ஹிஞ்சேவாடி ஐடி ஹப்பில் உள்ள அட்லஸ் காப்கோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இன்ஜினீயராக பணிபுரிந்து வந்தவர் 23 வயதான பியூஷ் அசோக் காவ்டே.

    இவர் நேற்று காலை 9:30 மணியளவில் ஆபீஸ் மீட்டிங் கூட்டத்தின் நடுவே வெளியேறி, தான் வேலை செய்யும் கட்டிடத்தின் மேலே இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலை செய்வதற்கு முன்பு, பியூஷ் தனது குடும்பத்திற்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். தற்கொலைக் கடிதத்தில் அவர் என்ன எழுதியுள்ளார் என்பது முழுமையாக விசாரிக்கப்படும் என்று புனே காவல்துறையின் உதவி ஆணையர் சுனில் குராடே தெரிவித்தார்.

    அவர் மீது பணி அழுத்தம் இருந்ததா என்று கேட்டபோது, "முதல் பார்வையில் அப்படி எதுவும் தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது" என்று சுனில் தெரிவித்தார்.

    இது குறித்து தற்செயலான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    • PUCL மற்றும் APCR நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
    • ஆர்எஸ்எஸ், சிவ் பிரதிஷ்டான் மற்றும் இந்து ராஷ்டிர சேனா போன்ற குழுக்கள் இந்து கிராமவாசிகளின் மனதைக் கெடுத்துள்ளன.

    மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள போட் மற்றும் பிராங்குட் கிராமங்களில், வகுப்புவாத அச்சுறுத்தல்கள் மற்றும் சமூக-பொருளாதார புறக்கணிப்புகள் காரணமாக முஸ்லிம் குடும்பங்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இவர்களில் பலர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசிப்பவர்கள். கிராமங்களைச் சேர்ந்த இந்துத்துவா அடிப்படைவாதிகள், இவர்களை பூர்வீகமற்ற முஸ்லிம்கள் என்று கூறி புறக்கணிப்பை நியாயப்படுத்துகின்றனர்.

    மனித உரிமை அமைப்புகளான PUCL மற்றும் APCR நடத்திய உண்மை கண்டறியும் விசாரணையில், அச்சமான சூழல், வணிகங்கள் மூடல், சீர்குலைந்த வாழ்க்கை மற்றும் குடும்ப இடம்பெயர்வுகள் கண்டறியப்பட்டன.

    மே 2 அன்று, பாட் கிராமத்தில் பாஜக மற்றும் பிற வலதுசாரி அமைப்புகள், அம்மன் சிலையை அவமதித்ததாக முஸ்லிம்களைக் குற்றம் சாட்டி பேரணிகள் நடத்தினர். இதைத் தொடர்ந்து, பூர்வீகமற்ற முஸ்லிம்களைப் புறக்கணிக்கக் கோரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.

    PUCL இது தொடர்பாக புனே கிராமப்புற காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தது. சுவரொட்டிகள் அகற்றப்பட்டாலும், பேக்கரிகள், சலூன்கள் போன்ற முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல கடைகள் மூடப்பட்டே கிடக்கின்றன. காவல்துறையிடம் புகார் அளித்தும் வணிகங்களைத் திறக்க எந்தப் பாதுகாப்பும் கிடைக்கவில்லை என்று முஸ்லிம்கள் தெரிவித்தனர்.

    ஒரு பேக்கரி உரிமையாளர், தனது குடும்பம் 40 ஆண்டுகளாக வசித்தாலும், உத்தரப்பிரதேசத்தில் தங்கள் பூர்வீகம் என்பதால் வெளியாட்கள் என்று முத்திரை குத்தப்படுவதாகக் கூறினார். மூடப்பட்ட பல முஸ்லிம் பேக்கரிகள் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துள்ளன.

    இந்து ராஷ்டிர சேனா உறுப்பினர் தனஞ்சய் தேசாய், முஸ்லிம் வணிகர்களை கடைகளை விட்டு வெளியேறும்படி மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஒரு பழைய இரும்பு கடைக்கு தீ வைக்கப்பட்டதில் ரூ. 20 லட்சம் இழப்பு ஏற்பட்டது, ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. மத இடங்களும் இலக்காகின. முஸ்லிம்களின் நடமாட்டம் வாட்ஸ்அப் குழுக்களால் கண்காணிக்கப்பட்டது.

    பலர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தங்கள் பூர்வீக கிராமங்களுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். இதனால் குழந்தைகளுடைய கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் காங்கிரஸ் தாலுகா தலைவர் அசோக் மாத்ரே, ஆர்எஸ்எஸ், சிவ் பிரதிஷ்டான் மற்றும் இந்து ராஷ்டிர சேனா போன்ற குழுக்கள் இந்து கிராமவாசிகளின் மனதைக் கெடுத்துள்ளதாகக் கூறினார்.

    பொருளாதார புறக்கணிப்புகளை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று PUCL கண்டித்துள்ளது. சிவில் உரிமைக் குழுக்கள் இந்த மீறல்களை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றன. 

    • மூன்று பெண்களும் ஒரு சிறுமியும் காரில் சென்று கொண்டிருந்தனர்.
    • வலுக்கட்டாயமாக அவர்களின் உடலில் இருந்து தங்க நகைகளைப் பறித்தனர்.

    மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் காரில் சென்ற சிறுமியை கொள்ளையடித்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த சம்பவம் திங்கள்கிழமை அதிகாலை 4:15 மணிக்கு புனே மாவட்டத்தில் உள்ள பிக்வான் அருகே நடந்தது.

    மூன்று பெண்களும் ஒரு சிறுமியும் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் சில நெடுஞ்சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தினார்.

    ஓட்டுநர் காரில் இருந்து இறங்கியவுடன், அடையாளம் தெரியாத இரண்டு ஆண்கள் அங்கு வந்தனர். அவர்கள் நேராக காருக்கு வந்து ஆயுதங்களைக் காட்டி உள்ளே இருந்த பெண்களை மிரட்டினர். அவர்கள் வலுக்கட்டாயமாக அவர்களின் உடலில் இருந்து தங்க நகைகளைப் பறித்தனர்.

    நகைகளைத் திருடிய பிறகு அந்த நபர்களின் ஒருவன், காரில் இருந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தான். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

    • வார இறுதி என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்தனர்.
    • காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை மாநில அரசே ஏற்க உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள ஒரு பாலம் இன்று இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இரண்டு பேர் உயிரிழந்ததை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளதுடன், தண்ணீரில் விழுந்த மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த விபத்து பிரபல சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் மாலை 3:30 மணியளவில் நிகழ்ந்தது. வார இறுதி என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்தனர்.

    இந்த பழைய பாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நின்றிருந்தபோது திடீரென இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றுக்குள் விழுந்தனர்.

    இந்நிலையில், பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

    மேலும், காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை மாநில அரசே ஏற்க உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

    • பாலத்தில் சுமார் 100 பேர் இருந்ததாகவும், சிலர் விழுந்து கரைக்கு வந்தடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
    • தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) இரண்டு குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

    மகாராஷ்டிரா புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள ஒரு பாலம் இன்று இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    ஒரு நபர் உயிரிழந்ததை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளதுடன், தண்ணீரில் விழுந்த மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த விபத்து பிரபல சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் மாலை 3:30 மணியளவில் நிகழ்ந்தது. வார இறுதி என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்தனர்.

    இந்த பழைய பாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நின்றிருந்தபோது திடீரென இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றுக்குள் விழுந்தனர்.

    மாளவ் தொகுதி எம்எல்ஏ சுனில் ஷெல்கே கூறுகையில், இந்திராயணி ஆற்றில் உள்ள இந்தப் பழைய இரும்புப் பாலம் 30 ஆண்டுகள் பழமையானது. பாலத்தில் சுமார் 100 பேர் இருந்ததாகவும், சிலர் விழுந்து கரைக்கு வந்தடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர். தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) இரண்டு குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

    • கலக்கத்தில் இருந்த ஒரு இந்து குடும்பத்திற்கு உதவி செய்து தங்கள் திருமண மேடையை பகிர்ந்து கொண்டனர்.
    • இந்து திருமணம் அவர்களின் மரபுகளின்படி சரியான நேரத்தில் முடிக்கப்பட்டது.

    இக்கட்டான சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதே மனிதர்களின் உண்மையான குணத்தை வெளிப்படுத்தும்.

    இதற்கு உதாரணமாக மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

    திடீரென பெய்த கனமழையின் விளைவாக, மத நல்லிணக்கத்தைக் குறிக்கும் வகையில், ஒரு முஸ்லிம் குடும்பம் கலக்கத்தில் இருந்த ஒரு இந்து குடும்பத்திற்கு உதவி செய்து தங்கள் திருமண மேடையை பகிர்ந்து கொண்டனர்.

    புனேவின் வான்வாடி பகுதியில் ஒரு விருந்து மண்டபத்தில் ஒரு முஸ்லிம் தம்பதியினர் தங்கள் திருமண வரவேற்பை நடத்திக் கொண்டிருந்தபோது, மற்றொரு இந்து குடும்பம் அதே முற்றத்தில் வெளியே தங்கள் பிள்ளைகள் திருமணத்துக்கு ஒரு விதானத்தை அமைத்திருந்தது.

    மாலை 7 மணிக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் முகூர்த்த நேரம் நெருங்கியதும், சூழ்நிலை திடீரென மாறியது. வானம் மேகமூட்டமாகி, இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

    இதன் விளைவாக, வெளியில் அமைக்கப்பட்டிருந்த விதானம் நனைந்தது. சுப நிகழ்வு தடைபட்டதால் இந்து குடும்பம் மற்றும் உறவினர்கள்  கவலையடைந்தனர். மழை குறையுமா என்று சிறிது நேரம் காத்திருந்தும் எந்தப் பலனும் இல்லை.

    இந்த கடினமான நேரத்தில், விருந்து மண்டபத்தில் தங்கள் திருமண வரவேற்பைக் கொண்டாடிக் கொண்டிருந்த முஸ்லிம் குடும்ப உறுப்பினர்களை இந்து குடும்ப உறுப்பினர்கள் அணுகினர்.

    அவர்கள் தங்கள் இக்கட்டான நிலையை விளக்கி, திருமண விழாவை மண்டபத்தில் நடத்த அனுமதி கோரினர். முஸ்லிம் குடும்பத்தினர் அவர்களின் வேண்டுகோளுக்கு உடனடியாக இணங்கி, தங்கள் மேடையைப் பகிர்ந்து கொள்ள மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர். கூடுதலாக, அவர்கள் மேடையில் இந்து திருமண சடங்குகளுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்வதில் உதவினார்கள்.

    அவர்களின் ஒத்துழைப்புடன், இந்து திருமணம் அவர்களின் மரபுகளின்படி சரியான நேரத்தில் முடிக்கப்பட்டது. பின்னர், இரு குடும்பத்தினரும் ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டனர். புதுமணத் தம்பதிகள் இருவரும் ஒரே மேடையில் ஒன்றாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தது, அங்கு இருந்தவர்களை மிகவும் கவர்ந்தது.  

    • துருக்கிய ஆப்பிள்களின் பருவகால வர்த்தகம் ரூ.1,000 முதல் ரூ.1,200 கோடி வரை இருக்கும்.
    • சில்லறை விற்பனை மட்டத்தில் தடையை வலுப்படுத்துகின்றனர்.

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய பதட்டங்களுக்கு மத்தியில் துருக்கிக்கு எதிரான குரல்கள் எழுந்துள்ளன. ஆயுதங்கள் வழங்குவது உட்பட பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவான நிலைப்பாட்டுடன் செயல்படுவதால் 'துருக்கியைத் தடை செய்' என்ற ஹஷ்டேக் இணையத்தில் டிரண்ட் ஆகி வருகிறது. 

    இதனிடையே மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த வியாபாரிகள் துருக்கி ஆப்பிள்களை இறக்குமதி செய்வதை கைவிட்டுள்ளனர். இதன் விளைவாக துருக்கிய ஆப்பிள்கள் புனே சந்தைகளில் இருந்து கிட்டத்தட்ட மறைந்துவிட்டன.

    துருக்கிய ஆப்பிள்களைப் புறக்கணிப்பது புனேவின் பழச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    பொதுவாக, துருக்கிய ஆப்பிள்களின் பருவகால வர்த்தகம் ரூ.1,000 முதல் ரூ.1,200 கோடி வரை இருக்கும், ஆனால் இந்த புறக்கணிப்பு இந்த வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும்.

    புனேவின் வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவின் (APMC) ஆப்பிள் வர்த்தகரான சுயோக் ஜெண்டே, "துருக்கியிலிருந்து ஆப்பிள்களை வாங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம், அதற்கு பதிலாக இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஈரான் மற்றும் பிற பகுதிகளிலிருந்து ஆப்பிள்களை வாங்க முடிவு செய்துள்ளோம்" என்று கூறினார்.

    வணிகர்களுக்கு மட்டுமல்ல, நுகர்வோரும் இந்தப் புறக்கணிப்பில் தீவிரமாகப் பங்கேற்கின்றனர். துருக்கிய ஆப்பிள்களுக்கான தேவை கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைந்துள்ளதாக உள்ளூர் வியாபாரி ஒருவர் தெரிவித்தார். "நுகர்வோர் துருக்கிய தயாரிப்புகளைத் தீவிரமாகத் தவிர்த்து வருகின்றனர், சில்லறை விற்பனை மட்டத்தில் தடையை வலுப்படுத்துகின்றனர்" என்று அவர் மேலும் கூறினார்.

    • நேற்று நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
    • ஹோலி பண்டிகையை கொண்டாடிய பிறகு அங்குள்ள உல்ஹாஸ் ஆற்றில் இறங்கினர்.

    நேற்று நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் பத்லாப்பூர் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 15-16 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடிய பிறகு அங்குள்ள உல்ஹாஸ் ஆற்றில் இறங்கினர்.

    திடீரென நீர் மட்டம் உயர்ந்தபோது அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் சாம்டோலியில் உள்ள போடார் குரு வளாகத்தில் வசிக்கும் ஆர்யன் மேதர் (15), ஓம் சிங் தோமர் (15), சித்தார்த் சிங் (16), மற்றும் ஆர்யன் சிங் (16) என்று அடையாளம் காணப்பட்டனர்.

    நால்வரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பத்லாப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயானந்த் என்பவர் வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்துக்கொண்டு போன் பயன்படுத்தி கொண்டுள்ளார்.
    • அப்போது கட்டிலுக்கு கீழே அவரது வளர்ப்பு நாய் தூங்கி கொண்டிருந்தது.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் குடியிருப்பு பகுதியில் தூங்கி கொண்டிருந்த நாயை சிறுத்தை வேட்டையாடிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேகான் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜெயானந்த் என்பவர் வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்துக்கொண்டு போன் பயன்படுத்தி கொண்டுள்ளார். அப்போது கட்டிலுக்கு கீழே அவரது வளர்ப்பு நாய் தூங்கி கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் சத்தமில்லாமல் நுழைந்த சிறுத்தை தூங்கி கொண்டிருந்த நாயை வேட்டையாடியது. அப்போது சிறுத்தையை கண்டு ஜெயானந்த் அதிர்ச்சியடைந்த

    இதனையடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். 

    ×