என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலம் இடிந்து விபத்து"

    • அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
    • பாலம் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

    தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இருந்து திபெத்தை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டது. ஹாங்கி என்று பெயரிடப்பட்ட அந்த பாலம் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் திபெத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஷுவாங்ஜியாங்கோ நீர்மின் நிலையத்தில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

    இதையடுத்து 758 மீட்டர் நீளமுள்ள ஹாங்கி பாலத்தில் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பாலம் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.



    • சீனாவில் கட்டுமான பணியின்போது ரெயில்வே பாலம் இடிந்து விழுந்தது.
    • இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.

    பீஜிங்:

    சீனாவின் குயிங்காய் மாகாணத்தில் மஞ்சள் ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் மீது மிகப்பெரிய ரெயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    2 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த பாலம் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்தப் பாலம் இடிந்து விழுந்தது.

    இதனால் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்தனர். இதுகுறித்து மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த ஆற்றில் இருந்து 12 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

    இந்த விபத்தில் மேலும் 4 பேர் ஆற்றில் விழுந்து மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஹெலிகாப்டர், படகு மூலம் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    கட்டுமான பணியின்போதே பாலம் இடிந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குஜராத் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
    • ஆற்றில் விழுந்து மாயமானவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்

    குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் காம்பிரா-முக்பூர் பாலம் அமைந்துள்ளது. வதோதராவின் பாத்ரா தாலுகாவில் மாஹி ஆற்றின் மேல் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது.

    பாலம் இடிந்து விழுந்ததால் அதில் வந்த பல வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆற்றில் விழுந்து மாயமானவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

    பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக மாநில சாலைகள் மற்றும் கட்டிடத் துறையைச் சேர்ந்த 4 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், பாலம் இடிந்து விழுந்த விபத்துக்கு அதன் 'பெடெஸ்டல், ஆர்டிகுலேஷன்' என்ற இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதன் எதிரொலியாக குஜராத் மாநிலத்தில் உள்ள சுமார் 7,000 பாலங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

    • பாலம் இடிந்து விழுந்ததில் வாகனங்கள் பல ஒன்றன்பின் ஒன்றாக விழுந்தன.
    • மாயமான 4 பேரை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் காம்பிரா-முக்பூர் பாலம் அமைந்துள்ளது. வதோதராவின் பாத்ரா தாலுகாவில் மாஹி ஆற்றின் மேல் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது.

    பாலம் இடிந்து விழுந்ததால் அதில் வந்த பல வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், மாஹி ஆற்றில் இருந்து மேலும்7 சடலங்கள் நேற்று மீட்கப்பட்டது. இதையடுத்து, பாலம் இடிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.

    மேலும், மாயமான 4 பேரை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

    பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக மாநில சாலைகள் மற்றும் கட்டிடத் துறையைச் சேர்ந்த 4 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    • பாலத்தில் சுமார் 100 பேர் இருந்ததாகவும், சிலர் விழுந்து கரைக்கு வந்தடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
    • தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) இரண்டு குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

    மகாராஷ்டிரா புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள ஒரு பாலம் இன்று இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    ஒரு நபர் உயிரிழந்ததை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளதுடன், தண்ணீரில் விழுந்த மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த விபத்து பிரபல சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் மாலை 3:30 மணியளவில் நிகழ்ந்தது. வார இறுதி என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்தனர்.

    இந்த பழைய பாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நின்றிருந்தபோது திடீரென இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றுக்குள் விழுந்தனர்.

    மாளவ் தொகுதி எம்எல்ஏ சுனில் ஷெல்கே கூறுகையில், இந்திராயணி ஆற்றில் உள்ள இந்தப் பழைய இரும்புப் பாலம் 30 ஆண்டுகள் பழமையானது. பாலத்தில் சுமார் 100 பேர் இருந்ததாகவும், சிலர் விழுந்து கரைக்கு வந்தடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர். தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) இரண்டு குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

    • விபத்து பவானிபட்னா மற்றும் துவாமுல் ராம்பூர் மற்றும் காஷிபூர் இடையேயான சாலை இணைப்பை துண்டிக்கப்பட்டது.
    • அந்த இடத்தில் 40 மீட்டர் நீளத்துக்கு பாலம் கட்டப்படும்.

    ஒடிசா மாநிலம் கலஹாண்டி மாவட்டம் பவானிபட்னாவில் உள்ள பாகீரதி பூங்கே அருகே நேற்று மாலை 3 மணியளவில் திடீரென பாலம் ஒன்று இடிந்து விழுந்தது.

    இதில், அந்த வழியாக சென்ற இரண்ட கார்கள் பள்ளத்தில் விழுந்து சிக்கின. இந்த சம்பவம் குறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் காருக்குள் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

    பின்னர், கார்களை மீட்கும் பணியில் ஈடுட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பவானிபட்னாவை அடைய துவாமுல் ராம்பூர் மற்றும் காஷிபுர் ஆகிய பகுதிகளை இணைக்கும் பாலம், 1925-ம் ஆண்டு காலாஹண்டி சமஸ்தானத்தின் பொறியியல் துறையால் கட்டப்பட்டது.

    இந்த விபத்து பவானிபட்னா மற்றும் துவாமுல் ராம்பூர் மற்றும் காஷிபூர் இடையேயான சாலை இணைப்பை துண்டிக்கப்பட்டது என்றும் பாலம் இடிந்து விமுந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாள்ர் அஜித்பாபு தெரிவித்தார்.

    மேலும், அந்த இடத்தில் 40 மீட்டர் நீளத்துக்கு பாலம் கட்டப்படும் என்றும் கூறினார்.

    • தொங்கு பாலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
    • இன்று காலை முதல் 2-வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது.

    குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள மோர்பி நகரில், மசசூ ஆற்றில் சாத் பூஜை விழா நடத்தப்பட்டது.

    இந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழமையான தொங்கு பாலம் உள்ளது. 150 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் 233 மீட்டர் நீளம் கொண்டதாகும். ஆற்றின் இரு பக்கத்தையும் இணைக்கும் வகையில் கேபிள்கள் மூலம் இந்த தொங்கு பாலம் கட்டப்பட்டு இருந்தது.

    சுற்றுலா தலமாகவும் இந்த பாலம் திகழ்ந்தது. சமீபத்தில் இந்த பாலத்தில் பழுது ஏற்பட்டதால் அதை சீரமைக்க குஜராத் மாநில அரசு தனியார் நிறுவனத்திடம் பணியை ஒப்படைத்து இருந்தது.

    அந்த தனியார் நிறுவனம் சமீபத்தில் சீரமைப்பு பணியை முடித்து கடந்த 26-ந்தேதி பாலத்தை திறந்தது. அன்று முதல் அந்த பாலத்தில் கடந்த 5 நாட்களாக மீண்டும் மக்கள் செல்ல தொடங்கினார்கள்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், தீபாவளிக்கு பிறகு வந்த விடுமுறை தினம் என்பதாலும் சாத் பூஜையின் முதல்நாள் என்பதாலும் மக்கள் ஆயிரக்கணக்கில் அங்கு திரண்டனர்.

    அந்த தொங்கு பாலத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் ஏறி நின்று சாத் பூஜை செய்தனர். சுமார் 500 பேர் ஒரே நேரத்தில் அந்த பாலத்தில் நின்றதால் பாரம் தாங்க முடியாதபடி பாலத்தில் தொய்வு ஏற்பட்டது.

    அந்த சமயத்தில் சில இளைஞர்கள் தொங்கு பாலத்தில் வேகமாக குதித்ததாகவும், ஓடியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களின் எடையை தாங்க முடியாமல் அந்த பாலம் கேபிள்கள் அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது. தொங்கு பாலத்தில் நின்று கொண்டிருந்த மக்களும் மசசூ ஆற்று தண்ணீருக்குள் விழுந்தனர்.

    ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் மக்களால் தண்ணீரில் இருந்து வெளியே வர முடியவில்லை. பலர் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர். இன்று காலை வரை நடந்த கணக்கெடுப்பின்படி தொங்கு பாலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    பாலத்தில் இருந்து விழுந்தவர்களில் மேலும் பலரை காணவில்லை. எனவே பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதல் 2-வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில், தொங்கு பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாலத்தை புதுப்பித்த கட்டுமான நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • காயமடைந்தவர்களில் 15 பேர் ஹெல்சின்கி பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்துக்கான சாத்தியமான காரணங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    பின்லாந்து நாட்டில் உள்ள தெற்கு பின்னிஷ் நகரமான எஸ்பூவில் அமைந்துள்ள தற்காலிக நடைபாதை பாலம் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவர்கள் உள்பட 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    எஸ்பூவின் டாபியோலா பகுதியில் கட்டுமான தளத்தை கடக்கும் பாலம் நேற்று நள்ளிரவு இடிந்து விழுந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், படுகாயமடைந்தவர்களில் 10 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"பாலம் இடிந்து விழுந்ததில் பலர் சில மீட்டர் தூரத்தில் விழுந்தனர். காயமடைந்தவர்களில் 15 பேர் ஹெல்சின்கி பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. காயங்கள் பெரும்பாலும் மூட்டு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.

    இதுகுறித்து பின்லாந்து அதிபர் சௌலி நினிஸ்டோ தனது டுவிட்டர் பக்கத்தில், "டாபியோலாவில் நடந்த விபத்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது ஆதரவு மற்றும் உதவி வழங்குவது முக்கியம். போலீசார் அப்பகுதியில் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்துக்கான சாத்தியமான காரணங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்" என்றார்.

    ×